இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார்

அன்பான சகோதர, சகோதரிகளே...! கர்த்தருடைய நீதி விசாரணை நாள் நெருங்கிவருகிறது.

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்,
(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 24:36)

சகோதர, சகோதரிகளே...! கர்த்தர் சொல்லும் அந்த நாள் நம்மை நெருங்கி வருகிறது... அது எப்பொழுது வருமோ என நாம் பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், நாம் இந்த உலகத்து அற்ப வாழ்வில் நன்மை செய்திருந்தால் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியும், இவ்வுலகில் தீமை செய்திருந்தால் பரலோகத்தில் நமக்கு இழிவும், நாசமும் கொண்ட நரகத்தையும் தருவதாக கர்த்தரே சொல்கிறார்.

நாம் செய்த கருமத்துக்கு அந்நாளில் நாம்தானே அனுபவித்தாக வேண்டும்...? வேறு யாரும் நம்முடைய கருமங்களுக்கான பொறுப்பைச் சுமக்க முடியாது என்பதை பின்வரும் வசனம் தெளிவு படுத்துகிறது :

பாவம் செய்கின்ற ஆத்மாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கிறது. துன்மார்க்கனுடைய துன்மார்க்கம் அவன் மேல்தான் இருக்கும்.
(பழைய ஏற்பாடு  எசக்கியேல் 18:20)

ஆக, தப்பிச் செல்ல முடியாத அந்த மகத்தான நாளின் ராஜா கர்த்தர் மட்டுமே...!
கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். (பழைய ஏற்பாடு  எரேமியா 10:10)

அப்படிப்பட்ட ஒரே தேவனாகிய கர்த்தரை மட்டுமே நாம் வணங்கவேண்டும். அப்படி கர்த்தரை மட்டும் வணங்காமல் இருந்தால் பரலோக ராஜியத்தில் இடமில்லை என்பதை ஏசுவே கூறுகிறார்:

பரலோகத்திரிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை. (புதிய ஏற்பாடு - மத்தேயு 7:21)

ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்கவேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகாதா...? ஏசுவின் பெயரைச் சொல்ரி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ:
அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா...? உமது நாமத்தினாலேயே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா...? உமது நாமத்தினாலேயே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா...? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை... அக்கிரமச் செய்கைக்காரரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
(மத்தேயு 7:21-23)

அன்பான சகோதர, சகோதரிகளே...! ஏசு வணங்கப்படுபவர் அல்லர். ஏசுவுடன் சேர்ந்து நாமும் வணங்கவேண்டியது அந்த கர்த்தரை மட்டும்தான். கர்த்தர் என்பதைத்தான் ஆங்கில மொழியில் GOD என்றும் அரபி மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். அந்த கர்த்தராகிய அல்லாஹ், ஏசுவைப் பற்றி இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறார். ஏசுவை திருக்குர்ஆன் ஈஸா என்று அழைக்கிறது.

பின்னர் (மேரி என்ற மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்! ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே...! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை (என்று பழித்துக் கூறினார்கள்.)

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன்பால் மேரி சுட்டிக்காட்டினார். நாங்கள் தொட்டிரில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்? என்று கூறினார்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும் என்னை தூதராக ஆக்கியிருக்கின்றான்.

இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கி இருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (ஏழை வரி) நிறைவேற்ற எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்.) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும் என்று (குழந்தை ஏசு) கூறியது.
இ(த்தகைய)வர்தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஏசு ஆவார்.) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ அதைப்பற்றி உண்மையான சொல் (இதுவேயாகும்.)
(திருக்குர்ஆன் அத்தியாயம் 19.வசனம் 27-34.)

அதுமட்டுமல்ல. ஏசு என்ற ஈஸா (அவர் மீது சாந்தி நிலவட்டுமாக) மனிதர்களால் கொல்லப்படவும் இல்லை. எதிரிகள் அவரைக் கொல்ல நினைத்தபோது கர்த்தர் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டார்.

இன்னும் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் (மேரியின்) குமாரராகிய ஈஸா (ஏசு) மஸீஹை கொன்றுவிட்டோம் என்று அவர்கள் (யூதர்கள்) கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப் பட்டனர்.) அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப் பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் அத்தியாயம் 4. வசனம் 157,158)

கர்த்தர் அளவில் உயர்த்தப்பட்ட ஏசு நெருங்கிவரும் இறுதிநாளின் அத்தாட்சியாக மீண்டும் இந்த உலகில் தோன்றவிருப்பதை முஸ்ரிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நிச்சயமாக அவர் (ஏசு) இறுதி காலத்திற்குரிய அத்தாட்சி ஆவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம். மேலும் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேரான வழியாகும். (திருக்குர்ஆன் அத்தியாயம் 43. வசனம் 61)

இதற்குப் பின்னரும் ஏசுவையோ அல்லது அவரது தாயாரையோ அல்லது சிலுவையையோ வணங்குபவர்களுக்கும், கர்த்தர் இறக்கியருளிய இறுதி ஏற்பாடான திருக்குர்ஆனை நம்பாதவர்களுக்கும் எதிராக நீதி விசாரணை நாளில் ஏசுவே சாட்சி சொல்லவிருக்கிறார்.

இன்னும், மர்யம் (மேரி) உடைய மகன் ஈஸா (ஏசு)வே, அல்லாஹ்வை (கர்த்தரை) அன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது (ஏசுவாகிய) அவர், (இறைவா!)நீ மிகவும் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற் கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திரிருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்.

நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே (கர்த்தரையே) வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப் பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)
(திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 116,117)

அன்பான கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளே...! எல்லாம்வல்ல கர்த்தராகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் மூலம் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்தில் மோட்சத்தை அடைய முடியும் என்று இதன் மூலம் அறியலாம். அறியாமையில் இருந்து விடுபட்டு நேர்வழியின்பக்கம் வரும் கிறிஸ்துவர்களை நோக்கி எல்லாம்வல்ல கர்த்தர் கூறுகிறார்:
நிச்சயமாக யூதர்களையும், இணை வைப்பவர்களையும் விசுவாசிகளுக்குக் கடும் பகைவர்களாகவே (தூதரே!) நீர் காண்பீர்.

நிச்சயமாக நாங்கள் கிறிஸ்துவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, விசுவாசிகளுக்கு (முஸ்ரிம்களுக்கு) நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர். ஏனென்றால், அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை(திருக்குர்ஆன் வசனத்தை)ச் செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கைக் கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்துகொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். (திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 82-84)

அன்பார்ந்த கிறிஸ்துவ சகோதரர்களே...! ஒருவரை நாம் உண்மையிலேயே மதிக்கிறோம் என்றால் அவரை நாம் பின்பற்ற வேண்டும், அவரது போதனைகளை ஏற்கவேண்டும். ஏசுவின் பெயரால் அவர் அல்லாதவர்கள் சொல்வதையெல்லாம் பின்பற்றுவது சரியா? அல்லது எந்த ஏசுவை நீங்கள் உயிருக்குயிராக மதிக்கிறீர்களோ அந்த ஏசுவை அப்படியே பின்பற்றுவது சரியா? சற்று பொறுமையுடன் சிந்தித்துப் பாருங்கள்...!

சத்தியத்தை ஏற்றுக்கொண்ட மக்களாக நாம் வாழ்ந்திட, ஏசு அழைக்கும் மெய்வழியான இஸ்லாமிய நெறியின் பக்கம் வாருங்கள்...! பரலோக ராஜியத்தில் பரிபூரண வெற்றியைப் பெறுங்கள்...! கர்த்தர் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக...!


நன்றி : சமூக நல்லிணக்க மையம் (CESH)

நாஸ்திக நண்பர்களே நாசத்தைத் தவிர்ப்பீர்


மூல ஆசிரியர் : அபூஅப்தில்லாஹ்,
தமிழ் அச்சு : இக்பால் மஸ்தான்

முன்னுரை

படைப்புகளிலேயே மிகச்சிறந்த படைப்பு மனிதப் படைப்பு. மனிதனுக்கு இந்த சிறப்பு கிடைக்கக் காரணமே அவனிடமுள்ள பகுத்தறிவாகும். மனிதன் தனக்குள்ள பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தினால் மனிதன் புனிதனாக உயர்ந்து விடுகிறான். பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தத் தவறும் மனிதன் தன்னைவிட தாழ்ந்த மற்ற படைப்புகள் அனைத்தை விடவும் மிக இழிவானதொரு நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான்.

உலகிற்குப் பயனற்ற மனிதன், மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே – பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே – பிறப்பின் இலட்சியத்தை எய்துகிறான், இல்லை என்றால் அவனது பிறப்பு பயனற்றதாக மட்டுமல்ல, மீட்சியே இல்லாத நரக வேதனையைப் பெற்றுத் தருவதாக ஆகிவிடுகிறது.

பகுத்தறிவைக் கொண்டு சீர் பெற வேண்டிய மனிதன் அதே பகுத்தறிவைச் சுட்டிக் காட்டியே சீரழியும் நிலையை இன்று உலகெங்கும் பரவலாகக் காண்கிறோம். இதற்குக் காரணம் அவர்கள் கூறும் பகுத்தறிவு உண்மையில் பகுத்தறிவே அல்ல. புலன்களைக் கொண்டு பெறப்படும் ஒரு வகை அறிவாகும் அது. உண்மையான பகுத்தறிவை முறையாகப் பயன் படுத்தும் மனிதன் மனிதப் புனிதனாக உயர்ந்துவிடுவான். தன்னையும், தன்னைப் போன்ற மனிதப் படைப்பையும் மற்றும் படைப்புகள் அனைத்தயும் படைத்த ஒரே ஒரு இறைவன் இருக்கிறான், அவனுக்கு இணையோ, துணையோ, எவ்வித தேவையோ இல்லை என்பதை அந்த பகுத்தறிவைக் கொண்டே விளங்கிக் கொள்வான்.

தொடர்ச்சியாக வாசிக்க...................

தமிழகம் : குழந்தைகளை கடத்தி விற்கும் கிருத்துவ பாதிரிகள் - உஷார்!!

கோவை:குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி, நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் வந்ததால், கிருஷ்ணகிரி எஸ்.பி., பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடும் பணி துவங்கியது. வாணியம்பாடி செல்வதற்காக ராமக்காள் என்ற பெண், கைக்குழந்தையுடன் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அப்போது குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தனலட்சுமி, ராமக்காளிடம் பேச்சு கொடுத்தார். கையிலிருந்த குழந்தை அழுத போது, பால் வாங்கிக் வரச் சொல்லி, குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக கூறினார். பால் வாங்க சென்ற ராமக்காள் திரும்பி வந்த போது தனலட்சுமி, குழந்தையோடு மாயமானாள்.

ராமக்காள் புகாரின்படி, தனலட்சுமியை ஒரு சில நாட்களில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூன்று மாதக்குழந்தையை பெரம்பலூரைச் சேர்ந்த கிரிஜா, ராணியிடம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிந்தது.கிருஷ்ணகிரி போலீசார் இரு பெண்களையும் கைது செய்து விசாரித்த போது, தனலட்சுமியின் உறவினரான செல்வராஜின் மகன் மூன்று வயது சிறுவன் தேவாவை கடத்தி விற்பனை செய்ததும் தெரிந்தது.சிறுவன் தேவாவை 20 ஆயிரம் ரூபாய்க்கு பெரம்பலூர் அருகே உள்ள பனப்பை என்ற இடத்தைச் சேர்ந்த பாதிரியார் சேவியர்அல்போன்சாவிடம் விற்பனை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார், பாதிரியாரை கைது செய்து விசாரித்தபோது, செஞ்சி அருகேயுள்ள தேவனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த மேரி, மணி தம்பதியருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு, சிறுவன் தேவாவை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.தகவலை தெரிந்து கொண்ட மணி, மேரி தம்பதியினர் சிறுவன் தேவாவை விட்டு விட்டு, தலைமறைவாகினர். சிறுவனை மீட்ட போலீசார், தந்தை செல்வராஜிடம் ஒப்படைத்தனர்.பாதிரியார் உட்பட நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததாக சிவனாண்டி கூறினார்

Thanks : Dinamalar

இந்திய இரகசியங்களை பாக்கிஸ்தானுக்கு விற்ற ஹிந்து தேச பக்தை கைது!!

டெல்லி: நாட்டின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்று வந்த இந்திய பெண் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த மாதுரி குப்தா (53) என்ற அந்த ஐபிஎஸ் அதிகாரி, பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த இந்திய உளவுப் பிரிவினர் இப்போது அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மா மீதும் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடமும் இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறுகையில், இஸ்லாபாத்தில் உள்ள ரா பிரிவுத் தலைவரிடமிருந்து தகவல்களைப் பெற்று அதை பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு மாதுரி குப்தா வழங்கி வந்துள்ளார்.

அவர் எந்த வகையான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால், பாதுகாப்பு தொடர்பாக ரகசிய தகவல்களை பாகி்ஸ்தானுக்கு விற்று வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்பியுள்ள மாதுரி குப்தா, கோலாலம்பூர் உள்பட சில நாடுகளிலும் பணியில் இருந்துள்ளார்.

மாதுரி குப்தாவை கடந்த 2 வருடமாக கண்காணித்து வந்தனர். அவர் தவறு செய்தது உறுதியானதையடுத்து இரு நாட்களுக்கு முன் பணி நிமித்தமாக என்று கூறி டெல்லிககு வரவழைத்து இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
Read: In English
அவரிடம் ரா, ஐபி மற்றும் டெல்லி உளவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நீதிமன்றத்தில் ரகசியமாக ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரி்க்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தட்ஸ் தமிழ்

9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கிருத்துவ பாதிரி

திருவனந்தபுரம்:கேரளாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியின் சகோதரியின் மர்ம மரணத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். இவரது சகோதரி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர். இந்த பள்ளி, அங்குள்ள தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.இங்கு பாதிரியாராக இருக்கும் ஜோசப் என்பவர், இந்த விடுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்தாண்டு அக்டோபரில் மாணவி ப்ரீதா மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதே விடுதியில் தங்கி படித்த ப்ரீதாவின் தங்கை, பாதிரியார் ஜோசப் மீது பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.ஜோசப், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, அந்த மாணவி கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மாறாக, புகார் தெரிவித்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.


இதையடுத்து, தனது தந்தையிடம் புகார் தெரிவித்த அந்த மாணவி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சில பகீர் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:பள்ளி விடுதிக்கு ஜோசப் அடிக்கடி வருவார். அவரின் பாதங்களை கழுவி விடும்படி கூறும் அவர், எங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார். என் சகோதரியும் இதேபோன்ற பாதிப்பிற்கு ஆளானார். என் சகோதரியை கடந்தாண்டு அக்டோபர் 21ம் தேதி இரவில், சிலர் விடுதியில் இருந்து, காரில் அழைத்துச் சென்றனர்.நள்ளிரவில் திரும்ப கொண்டு வந்து காரில் விட்டனர். என் சகோதரி மிகவும் களைப்பாக காணப்பட்டாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், அவள் சாப்பிடவில்லை.இதனால், விடுதி நிர்வாகியான பெண், அவளை கடுமையாக அடித்தார். இதேபோன்ற சித்திரவதை தொடர்ந்தது. ப்ரீதாவின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, என் தந்தை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பரிதாபமாக இறந்து விட்டாள்.இவ்வாறு அந்த மாணவி கூறினார்.


தற்போது இந்த வழக்கு விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜோசப் கைது செய்யப்பட்டு, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இருந்தாலும், ஜாமீன் கிடைத்ததை அடுத்து, அவர் வெளியில் வந்து விட்டார். மாணவி ப்ரீதா மரணம் தொடர்பாகவும், அதில் ஜோசப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி : தினமலர்

மீண்டும் ஒரு இந்து செக்ஸ் சாமியார் கைது!!


லக்னோ :முன்னாள் குற்றவாளியான ஒருவர், சாமியார் போர்வையில் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, டில்லி போலீசார் இந்த சாமியாரையும் விமான பணிப் பெண்கள் இரண்டு பேர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டம் சம்ருகா கிராமத்தை சேர்ந்தவர் சிவ முராத். டில்லியில் இவர் கடந்த 97ம் ஆண்டு மசாஜ் கிளப் நடத்தி வந்தார். அந்த கிளப்பில் விபசாரம் நடந்ததாக அப்போது கைது செய்யப்பட்டார். இதற்கிடையே திடீரென சுவாமி பீமானந்த மகராஜ் என்ற பெயரில் காவி உடை அணிந்து கோவில்களில் உபன்யாசம் செய்து வந்தார். இவரை பற்றி பத்திரிகைகளில் கட்டுரை வந்ததும், சீடர்கள் அதிகமானார்கள். இவர்கள் மூலம் பணமும் குவிந்தது.டில்லியின் தெற்கு பகுதியில் கான்பூர் என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து பிரபலமாகி வந்தார். டில்லி போலீசார் இந்த ஆசிரமத்தில் திடீர் சோதனை நடத்திய போது இரண்டு விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட ஆறு பெண்களுடன் போலி சாமியார் சிவ முராத் சல்லாபத்தில் ஈடுபட்டது தெரிந்தது. உடனடியாக அவரையும்,ஆறு பெண்களையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.


இதை கேள்விப்பட்ட சிவ முராத்தின் பெற்றோர், சகோதரர்கள் உ.பி.யில் உள்ள கிராமத்தை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். சம்ருகா கிராமத்தில் பெரிய கோவிலும், மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு சாலையும் அமைக்கப்பட்டு வந்தது. சாமியார் கைதால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன.டில்லி போலீசார் இந்த கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சிவ முராத்தின் தந்தை பச்சாலால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் மீது கொலை வழக்கும், தம்பி மீது திருட்டு வழக்குகளும் உள்ளன.


இவர்கள் குடும்பத்தினர் அனைவரும் இரட்டை குழல் துப்பாக்கிகளை இதுநாள் வரை பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு லைசன்ஸ் கொடுத்தது தொடர்பாக உள்ளூர் போலீசாரிடம் டில்லி போலீசார் விசாரிக்கின்றனர்.அடுத்த மாதம் பெரிய யாகம் நடத்த திட்டமிட்டு வி.ஐ.பி.,க்கள் எல்லாம் அழைக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையே இவர் கைது செய்யப்பட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகி விட்டது.
நன்றி : தினமலர்

தமிழ்ச்செல்வனுக்கு ...

கடந்த 08.01.2010 திண்ணை இதழில் வெளியான எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது" எனும் வரிகளை மறுத்து, "வஹ்ஹாபியின் மோசடி" எனும் தலைப்பில் தமிழ்ச்செல்வன் என்பார் பாகிஸ்தானுக்குப் போட்டுக் கொடுத்த இந்திய முஸ்லிம்கள் என்பதாக ஐந்து சுட்டிகளைக் கொடுத்திருந்தார் [ சுட்டி-02].


அவற்றுள் முதலாவதில் [சுட்டி-03] அஃப்ரோஸ் என்பவன் நமது இராணுவ முகாம்களைப் பற்றிய தகவல்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுக்க' முயன்று கடந்த 11.08.2006ஆம் தேதி ராம்பூரில் கைது செய்யப் பட்டு, 19.02.2009 அன்று லக்னவ் நீதிமன்றத் தீர்ப்புப்படி பத்தாண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவன்.


அஃப்ரோஸ் வழக்கில் நாம் கருத்தில் கொள்ள வேண்டுவது யாதெனில், தன் உறவினர்களின் பொது நலன் கருதி அவன் போட்டுக் கொடுத்தவன் அல்லன். யாரோ போட்டுக் கொடுத்ததைக் காசுக்காக "வாங்கிக் கொடுக்க" முயன்று தோற்றுப் போனவன்.


"அஃப்ரோஸிடமிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் இரகசியக் குறியீடுகளைக் கொண்டவை என்றும் ஆனால் இரகசியத் தகவல்களை அவன் எவ்வாறு பெற்றான் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் நமது இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியிருக்கிறார்" என்பதாக மாவட்டக் குற்றப் பிரிவின் துணை ஆலோசகர் இர்ஃபான் அஹ்மது கான் குறிப்பிட்டதை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் 21.02.2009 இதழ் Pakistani spy gets 10-year jail term என்று பொருள் மயக்கம் தரும் தலைப்போடு வெளியிட்டுள்ளது [சுட்டி-04].


ஏறத்தாழ மூன்றாண்டு காலம் நடைபெற்ற விசாரணையில் நமது இராணுவ இரகசியங்களை அவனுக்குப் 'போட்டுக் கொடுத்த' புள்ளி யார் எனும் தகவலை அவனிடமிருந்து கறக்க முடியவில்லையா? அல்லது புள்ளி பெரியது என்பதால் வெளியிடவில்லையா? என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்கள்.


தண்டனை கொடுக்கப் பட்ட இன்னொரு வழக்கில், ஜஹான் ஆரா எனும் பெண் வருகிறாள். தொலைக்காட்சி வழியாக உலகம் முழுக்கக் காண்பிக்கப் படும் நமது குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் ஆயுதங்களை நிழற்படம் எடுத்துப் பாகிஸ்தானைச் சேர்ந்த மாலிக் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அவனிடமிருந்து 10 கையெறி குண்டுகளைப் பெற்று அவற்றுள் எட்டை முஸாஃபர் நகரைச் சேர்ந்த இஃப்திகார் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் வழக்கு. அவள் 20.09.1994இல் கைது செய்யப் பட்ட இடம் பாகிஸ்தான் ஹை கமிஷன் அலுவலகம். Terrorist And Disruptive Activities (Prevention) Act (TADA) மற்றும் Official Secrets Act (OSA) விதிகளின்படி அவளுக்கு ஆறாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஐயாயிரம் அபராதமும் விதித்து (ஏழாண்டுகள் கழித்து) 07.03.2001இல் உ.பி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


கையெறி குண்டுகள் பெற்றுக் கொண்டதற்கான சான்றுகளை இஃப்திகாரிடமிருந்து கைப்பற்ற முடியாமல் அரசுத் தரப்புக் கையைப் பிசைந்து நின்றதால் அவன் வழக்கிலிருந்தே விடுவிக்கப் பட்டான் [சுட்டி-05].


மற்ற மூன்று சுட்டிகளில் உள்ள தகவல்கள் கைதுப் படலம்வரை நின்று விடுபவை. வழக்கு நடந்ததா? தீர்ப்பு வந்ததா? போன்ற கூடுதல் விபரங்களைப் பெற முடியவில்லை. அவற்றுள் 1995இல் இராணுவத்தில் இணைந்த முஹம்மது நஸீம் என்பவனது வழக்கு முக்கியமானது. அவன், கார்கில் தியாகி அஹ்மது அலீ [சுட்டி-06] வகித்த Lance Naik பதவி வகித்தவன். அவன் 2006 மார்ச் மாதம் அலீ ஜாட்டூன் எனும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நமது இராணுவ நிலைகள், வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்ற தகவல்களை ஏஜண்டுக்குத் தெரிவித்ததாக 29.06.2007இல் டெல்லியில் வைத்துக் கைது செய்யப் பட்டான்.


நமது இராணுவம் ஒளிந்து கொண்டோ துப்பாக்கிகளை ஒளித்து வைத்துக் கொண்டோ போர் செய்யவில்லை. வேண்டிய தகவல்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறோம் [சுட்டி-07]. அமெரிக்காவினால் இரண்டாவது செல்லப் பிள்ளையாகத் தத்து எடுக்கப் பட்ட பாகிஸ்தான்காரன் இதுபோன்ற சப்பைத் தகவல்களுக்கு 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறான் [சுட்டி-08] என்றால் நிச்சயம் அவன் கேனையன்தான். அவன் கேனையனாகவே இருக்கட்டும்; அதுதான் நமக்கு நல்லது.


அதேபோல், பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்ற மோரீகான் மற்றும் அப்பாஸ்கான் ஆகிய இருவரையும் பாகிஸ்தானின் உளவுத்துறையினர் என்று 'சொல்லப் படுகின்ற' சிலர் அணுகி இந்திய இராணுவத்தைக் குறித்துத் தகவல் கேட்டதாகவும் கைப்பேசி வழியாக இருவரும் காசுக்காகத் தகவல்கள் கொடுத்ததாகவும் 'சொல்லப் படுகின்ற' வழக்கும் ஒன்று. இதில் reportedly working as spies, Morey apparently told cops போன்ற சொற்கள் மூலம், வழக்குக் கெட்டிப் படுத்தப் படாமல் இருப்பதாக அறிய முடிகிறது [சுட்டி-09].


இறுதியாக, கைப்பேசிகளும் பாகிஸ்தானியப் பணமும் வைத்திருந்ததாக அனீஸ்கான், அனீக்கான், கோராகான் ஆகிய மூவரை 04.05.2007இல் கைது செய்த வழக்கு [சுட்டி-10]. மூவரையும் Official Secrets Act (OSA) விதியின்கீழ் நமது இராணுவம் கைது செய்து ஃபாஸில்கா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை.


தமிழ்ச்செல்வன் வெறும் சுட்டிகளாகக் கொடுத்தவற்றைத் தேடிப் பிடித்து இங்கு நான் விளக்கமாக எடுத்து வைப்பதற்குக் காரணம், என்னைப் போன்றே வாசகர்கள் பலருக்கு/சிலருக்கு மேற்காண்பவை புதிய தகவல்களாக இருக்கக் கூடும். இணையத்தில் "உளவு" எனும் சொல் குறித்துத் தேடியபோது மாலிக் என்பவனைப் பற்றி மரைக்காயர் எனும் பதிவர் தனது வலையில் விபரம் கொடுத்திருந்தார் [சுட்டி-11]. அப்பதிவின் அடியில் கண்ட தொடர்புடைய அவரது பழைய பதிவுகளான

1. உளவுத் துறையில் ஒரு கருப்பு ஆடு [சுட்டி-12],

2. இராணுவ இரகசியங்களை விற்க முயன்ற இராணுவ வீரர் [சுட்டி-13],

3. இராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல் [சுட்டி-14],

4. முக்கிய ஆவணங்களைத் திருடிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது [சுட்டி-15],

5. அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள் [சுட்டி-16]


ஆகியவற்றைப் படித்துப் பார்த்து அதிர்ந்து போனேன்! திண்ணை வாசகர்கள் சிலருக்காவது அவை புதிய தகவலாக இருக்கக் கூடும். தகவல் தெரியாத திண்ணை வாசகர்களை, "மோசடி"க்காரர்கள் என்று தமிழ்ச்செல்வன் சொல்ல மாட்டார் என்று நம்புவோமாக!


எவ்வாறாயினும், எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது" எனும் பேசுபொருளிலும் அவ்வாறு தகாத செயல்களைச் செய்வோர் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறியோர் என்பதிலும் தண்டனைக்கு உரியோர் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.


நன்றி!

ஃஃஃ

திண்ணையில் ...


சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001081&format=html

02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001153&format=html

03 - http://newshopper.sulekha.com/man-gets-10-year-jail-for-spying-for-pakistan_news_1038667.htm

04 - http://www.indianexpress.com/news/pakistani-spy-gets-10year-jail-term/426409/

05 - http://www.hinduonnet.com/2001/03/08/stories/0208000q.htm

06 - http://www.kashmir-information.com/Heroes/ali.html

07 - http://indianarmy.nic.in/Index.aspx?flag=LfcULYFlbeQ=

08 - http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=706300614&cat=&n_date=20070630

09 - http://www.tribuneindia.com/2009/20090620/nation.htm#11

10 - http://www.dailyexcelsior.com/web1/06may07/news.htm#10

11 - http://maricair.blogspot.com/2007/06/raw.html

12 - http://maricair.blogspot.com/2006/08/blog-post.html

13 - http://maricair.blogspot.com/2006/10/blog-post.html

14 - http://maricair.blogspot.com/2006/10/blog-post_24.html

15 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_05.html

16 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_12.html

THANKS : WAHABI

சொந்த மகள்களை 10 வருடமாக கற்பழித்த ஹிந்து தந்தை கைது!!


மும்பை: நெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.

சமீபத்தில்தான் இந்த வழக்கு அங்குள்ள கோர்ட்டி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தந்தை செய்த கொடுமைகளை பல மணி நேரம் வாக்குமூலமாக அளித்தார் அந்த அப்பாவி பெண்.

இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது.

அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.


ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம்.


தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான்.

தற்போது போலீஸார் அந்த காமக் கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

அதிகரிக்கும் அமெரிக்க சர்ச்சுகளுக்கு எதிரான செக்ஸ் புகார்கள்

Sex claims against US Church rise

The number of new claims of sexual abuse made against US Roman Catholic priests rose by 16% to more than 800 last year, a Church report says.

It says the Church paid $436m (£313m) in 2008 for abuse cases. Most of the money was used to compensate victims.

The study covered almost 200 dioceses and religious orders across the US.

It found that more than one in five victims were under the age of 10 when they were abused.

Although the number of claims made against the Church rose in 2008, the total cost dropped by 29% compared to the previous year.

The Associated Press news agency said 2007 was an unusually high year, when the Archdiocese of Los Angeles began paying a $660m settlement to about 500 people.

The annual review tracks progress made in implementing the Charter for the Protection of Children, adopted by US bishops following a scandal in Boston in 2002.

Cardinal Francis George of Chicago said the Church was "on the right path" in its quest to better protect "all children in society".

Thanks : BBC NEWS

இளம்பெண்ணிடம் சில்மிஷம் கிறிஸ்தவ போதகருக்கு வலை

திருநெல்வேலி : பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம், தகாத முறையில் நடந்த கிறிஸ்தவ போதகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கன்குளத்தில் விக்டரி ஏ.ஜி.சபை என்ற கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த போதகர் ரைமண்ட் நியூட்டன் (50) நடத்தி வருகிறார். அந்தச் சபைக்கு அடங்கார்குளத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகள் பிரார்த்தனைக்காக வந்துள்ளார். அவர் தனியாக வந்திருந்தபோது அவரிடம் தகாத முறையில் நடக்க மதபோதகர் முயற்சித்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

நன்றி : தினமலர்

பெண்ணை கடத்தி சென்று கற்பழிப்பு: உதவி பங்குத்தந்தை சிறையிலடைப்பு

திருவாரூர்: இளம்பெண்ணை கடத்திச்சென்று கற்பழித்த, திருத்துறைப்பூண்டி உதவி பங்குத்தந்தை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ்; ரேடியோ மெக்கானிக். இவரது மகள் ஜெனீபர் (20). திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தையாக பணி செய்பவர் ஜான்விக்டர் (30).


ஜெனீபருக்கு டீச்சர் டிரைனிங் படிக்க சீட்டு வேண்டுமென பிரான்சிஸ், ஜான்விக்டரிடம் முயற்சி செய்தார். சீட்டு வாங்கித் தருவதாகக் கூறிய ஜான்விக்டர், ஜெனீபரை செப்., 26ம் தேதி அழைத்துச் சென்றவர், மீண்டும் ஊர் திரும்பவில்லை. இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீசில், ஜெனீபரை ஜான்விக்டர் கடத்திச் சென்றதாக பிரான்சிஸ் புகார் செய்தார். செப்., 29ம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.


இந்நிலையில், திருத்துறைப்பூண்டி போலீசார், ராயநல்லூரியில் இருந்த ஜான்விக்டர் மற்றும் ஜெனீபர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜெனீபரை, ஜான்விக்டர் கேரளாவுக்கு கடத்திச் சென்று அங்கு வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். அங்கு ஜெனீபரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கற்பழித்துள்ளார். தற்போது, அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என ஜான்விக்டர் கூறிவிட்டார்.


ஜெனீபர் கொடுத்த புகாரின் பேரில், ஜான்விக்டரை போலீசார் கைது செய்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் பாஸ்கரன், வழக்கை ஏற்று உதவி பங்குத்தந்தை ஜான்விக்டரை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவிட்டார். ஜெனீபரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.

பைபிளில் வைத்து ரூ.6 லட்சம் போதை மருந்து கடத்தல்

சென்னை : பைபிளில் வைத்து ருமேனியா நாட்டிற்கு கடத்த இருந்த ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை விமான நிலைய கார்கோ கஸ்டம்ஸ் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சென்னையில் இருந்து கூரியர் பார்சல் மூலம் ருமேனியாவிற்கு போதை மருந்து கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய கார்கோ பிரிவு கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கூரியர் பார்சல் அலுவலகத்திற்கு விரைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், அங்கு குறிப்பிட்ட ஒரு பார்சலை சோதனைச் செய்தனர். அதில் இரண்டு பைபிள் புத்தகங்கள் இருந்தன. தீவிர சோதனையில், அப்புத்தகங்களின் ஒரு பகுதியை கிழித்து, உள்ளே ஆறு பிளாஸ்டிக் சாக்கெட்டுகளில் பவுடர் இருந்தது. அதை சோதனை செய்து பார்த்ததில், அது "மார்பின்' எனப்படும் போதை மருந்து என தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட போதை மருந்தின் எடை 55 கிராம். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ஆறு லட்சம் ரூபாய். இந்த கடத்தலுக்கு காரணமானவர்களை கண்டறியும் விசாரணை நடந்து வருகிறது.

Dinamalar News

ஜனாதிபதிக்கு மிரட்டல் மின்னஞ்சல்-ஹிந்து தீவிரவாதி கைது!

மிரட்டல் மின்னஞ்சல்-ஹிந்து தீவிரவாதி கைது!

வியாழன், 16 அக்டோபர் 2008( 02:03 IST )
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாக சென்னையைச் சேர்ந்த மென்பொருள் புரோகிராமர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் அதிகாரபூர்வ இணையதள முகவரிக்கு 5 மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன, அதில் பிரதீபா பாட்டீல் மீது கடும் குற்றச்சாட்டுகள் இருந்ததோடு, கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்ற மிரட்டல் செய்தியும் இருந்தது.

இதனையடுத்து சென்னை காவல்துறையும், மத்திய பாதுகாப்பு முகமைகளும் பல்வேறு இணையதள முகவரிகளை தடம் கண்டு விசாரணை நடத்தினர். இதில் 2 நபர்கள் சிக்கினர். இவர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைகளுக்கு பிறகு ஸ்ரீராம் ஜகன்னாத் என்ற 23 வயது கணினி புரோகிராமர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள்

பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள்

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.ஆனால்....... இங்கே சொடுக்கவும்.

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்
நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.

இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.

ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.''

இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..

''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்'' இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.

இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..

''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.''

என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.

பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?'' என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.

ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?

வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை'' என்றார்கள்.

வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது'' என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!'' என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.

''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.''

இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!

விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்

இயேசு பற்றி குர்ஆனும் பைபிளும்

தயாரிப்பு: யூ.கே.ஜமால் முஹம்மத்

தொகுத்து வழங்கியது: மு.சாதிக்


சர்வ புகழும் வல்ல இரட்சகனுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் இறைவனின் தூதர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகுக என வேண்டியபின்:

சில கிறிஸ்தவ சகோதரர்கள்இ இயேசு பற்றி குர் ஆனின் கருத்தென்ன? என்ற கேள்வியைக் கேட்டனர். அதற்குப் பதிலளிக்கும் நோக்கத்தோடும் பொதுவாக ஏனைய சகோதரர்களும் பிரயோசனம் அடைவர் என்ற நல்ல நோக்கமும்தான் இத்தகவல் வெளியிடக் காரணம்.

குர்ஆனின் கருத்துக்களுடன் பைபிளின் கருத்துக்களும் ஆதாரங்களோடு மிகச்சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இது இத்தொடரின் முதலாம் பகுதியேயாகும். இதன் தொடர்கள் இறைவனின் உதவியுடன் தொடராக வெளிவரும் (அவன் நாடினால்).

1 - இயேசு ஒரு மனிதரே !

குர்ஆனில்:

'(வானவர்கள்) மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையின் மூலம் உனக்கு (ஒரு பிள்ளையை) நன்மாராயம் கூறுகிறான் அவரின் பெயர் மஸீஹ்-மர்யமின் மகன் ஈஸா (இயேசு) என்பதாகும். அவர் இம்மையிலும் மறுமையிலும் மிக்க அந்தஸ்துடையவராகவும் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவரகளிலொருவராகவும் இருப்பார்' என்று கூறியபோது -

'அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்போதும் (தந்தாயின் பரிசுத்தத்தையும்) பருவ வய்திலும் (தன் நபித்துவத்தைப் பற்றியும்) மனிதர்களுடன் பேசுவார். மேலும் அவர் நல்லொழுக்கமுடையவராகவுமிருப்பார்' (என்றும் கூறினர்).

'(அதற்கு மர்யம்) 'என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' என்று கேட்டாள்இ (அதற்கு) 'அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான்இ அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் 'ஆகுக!' என்பதுதான்இ உடனே அது ஆகிவிடும்' என்று (அல்லாஹ் கூறினான்'.

'மேலும் அவன்இ அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்றாத்தையும் இஞ்ஞீலையும் கற்பித்தான்இ 'இஸ்றாயீலின் மக்களுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் அல்லாஹ் கூறினான்) (அவர் வாலிபத்தை அடைந்தபின் இஸ்றாயீலின் மக்களிடம்) 'நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன்இ உங்களுக்காக களி மண்ணிலிருந்து பறவையின் கோலத்தைப்போல் செய்துஇ பின்னர் அதில் நான் ஊதுவேன்இ அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (உயிருள்ள) பறவையாகிவிடும். பிறவிக் குருடனையும் வெண்குஷ்ட ரோகியையும் நான் குணப்படுத்துவேன். மேலும் அல்லாஹ்வின் அனுமதியோடு இறந்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். மேலும் நீங்கள் புசிப்பவற்றையும்இ உங்கள் வீடுகளில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் விசுவாசம் கொள்பவர்களாக இருந்தால் நிச்சயமாக் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது' (என்று கூறினார்) (3:45-50)

'மேலும் (இயேசுவை நிராகரித்த) அவர்கள்இ சதிசெய்தனர் (அவரைக் கொல்வதற்கு). அல்லாஹ்வும்இ (அவர்களுக்குச்) சதிசெதுவிட்டான். இன்னும் அல்லாஹ்இ சதிசெய்பவர்களி(ன் சதியை முறியடித்து கூலி கொடுப்பவர்களி)ல் மிகச்சிறந்தவன்.'

(இயேசுவை நோக்கி) 'ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும்இ உம்மை என்னளவில் உயர்த்திக் கொள்பவனாகவும்இ நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மைப் ப்ரிசுத்தமாக்கி வைப்பவனாகவும்இ உம்மை பின்பற்றுவோரைஇ நிராகரிப்போர்மீது மறுமைநாள் வரையில் மேலாக ஆக்குபவனாகவும் இருக்கிறேன்.' என்று அல்லாஹ் கூறியதை (நினைவு கூர்வீராக!) (3:4-55).

'நிச்சயமாக அல்லாஹ்விடம்இ ஈஸா(இயேசு)வுக்கு உதாரணாம்இ ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன்இ அவரை(ஆதமை) மண்ணால் படைத்து பின் அதற்கு (மனிதனாக) 'ஆகுக' என்று கூறினான்இ அவர் (அவ்வாறு) ஆகிவிட்டார்.'

'(நபியே! ஈஸா(இயேசு)வைப் பற்றிய இந்த) உண்மை உமதிரட்சகனிடமிருந்துள்ளதாகும்இ ஆகவே (இதைப்பற்றிச்) சந்தேகப்படுவோரில் உள்ளவராக நீர் ஆகிவிடவேண்டாம்'. (3:59-60).

மேலே நாம் குறிப்பிட்டுக் காடடிய குர்ஆனிய வசனங்க்ளில்இ இயேசு ஒரு மனிதரென்றும்இ அவரின் தாயின் பெயர் மர்யம் எனவும்இ இயேசுவை கடவுள் அவனுடைய 'குன்' எனும் வார்த்தையின் மூலம் படைத்தான் என்றும்இ அவர் சிறுவயதிலேயே தனது தாயின் பரிசுத்தம் பற்றியும்இ பருவ வயதை அடைந்தபின்இ தனது நபித்துவம் பற்றியும் பேசினார் எனவும்இ அவருக்கு இறைவன் அளித்திருந்த சில அற்புதங்கள் போன்ற பல விசயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிரஇ அவவரைப் பற்றிய வேறுபல செய்திகளையும் பல்வேறு இடங்களில் குர்ஆன் தெரிவிக்கின்றது. அவற்றை அவ்வப்போது சுருக்கமாக நாம் பார்க்கலாம்.

பைபிளில்:

கிறிஸ்தவ மதத்தின் சில வேதநூற்களான மத்தேயுஇ முர்குஸ்இ லூக்காஇ யோவான்இ பர்னாபா போன்ற சகல பைபிள்களும் இயேசு ஒரு மனிதனே என்றும்இ (மனிதனுக்கு ஏற்படுகின்ற) பசிஇ தாகம்இ தூக்கம்இ மறதிஇ மரணம் (கிறிஸ்தவ சகோதரர்களின் நம்பிக்கையின் பிரகாரம்) போனற சகல விசயங்களும் அவருக்ககும் ஏற்பட்டன எனவும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது இப்படியிருக்கஇ இயேசுவையே கடவுளாகவும்இ கடவுளின் மகனாகவும்இ கடவுளே அல்லது கட்வுளின் மகனே சிலுவையில் அறையப் பட்டதாகவும் நம்புவது எப்படி நியாயமாகும்?

2 - இயேசு கடவுளின் தூதரே!.

குர்ஆனில்:

'மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (அல்லாஹ்வோஇ அல்லாஹ்வின் மகனோ) இல்லைஇ இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்றுவிட்டனர்'. (5:75).

பைபிளீல்:

')இயேசு தனது சீடர்களிடம்) 'யார் உங்களை (பிரச்சாரத்தை) ஏற்றுக் கொள்கிறாரோஇ அவர் என்னை ஏற்றுக் கொண்டார். யார் என்னை ஏற்றுக் கொண்டாரோ அவர் என்னைத் தூதராக அனுப்பியவனை(கடவுளை) ஏற்றுக் கொண்டார்' என்று கூறினார். (மத்தேயு 40:10)

'இயேசுஇ தனது சீடர்களைப் பல பட்டினங்களுக்கும்இ பிரச்சாரத்திற்காக அனுப்பியபோதுஇ உங்களுக்கு செவி மடுப்ப்வர் யாரோஇ அவர் எனக்குச் செவிமடுத்து (வழிபட்டு)விட்டார்; யார் உங்களை இழிவாக்கினானோஇ அவன் என்னை இழிவாக்கிவிட்டான்இ எவன் என்னை இழிவாக்கினானோஇ அவன் என்னைத் தூதராக அனுப்பியவனை(கடவுளை)யே இழிவாக்கிவிட்டான்' என்று கூறினார் (லூக்கா 16:10). இதைத் தவிர லூக்கா(43:4)இ யோவான்(34:4இ 3:17) போன்ற பல இடங்களில்இ தான் ஒரு தூதரேயென்றும்இ (கடவுளோஇ கடவுளின் மகனோ அல்ல என்வும்) தனது இறைவனே தன்னைத் தூதராக அனுப்பினான் எனவும் தெளிவாகவே இயேசு பிரச்சாரம் செய்தார் என்பது விபரமாகக் கூறப்பட்டுள்ளது.

3 - இயேசுஇ பனூ இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதராகும்!

குர்ஆனில்:

'இஸ்ரவேல் மக்களுக்கே (அவரை) ஒரு தூதராக (அனுப்பினோம்)...'(3:49).

பைபிளில்:

ஒரு தடவை கன்ஆன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இயேசுவிடம் வந்துஇ தனது பைத்தியம் பிடித்த மகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டியபோதுஇ 'நான் வழிகெட்டிருக்கும் இஸ்ரவேலர்களை (மட்டுமே) நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இயேசு கூறிவிட்டார். (மத்தேயு 24:15)

இயேசு தனது சீடர்களைஇ யூத பட்டினங்களுக்கு பிரச்சாரத்திற்காக அனுப்பியபோதுஇ 'சாமிரிய்யீங்களின் பட்டினத்தினுள்ளோஇ வேறு சமூகங்களின் பட்டினத்தினுள்ளோ நீங்கள் போகாதீர்கள்இ வழி கெட்டிருக்கும் இஸ்ரவேலர்களை சீர்செய்வதற்காக சுதந்திரமாக நீங்கள் செல்லுங்கள்' என்று சொன்னார். (மத்தேயு 5:10)

இதிலிருந்து பனூ இஸ்ரவேலர்காளுக்கு மட்டுமே இயேசு தூதர் என்பதையும்இ ஏனையோருக்கு அவர் தூத்ராக அனுப்பப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

4 - இயேசுஇ கடவுளை மட்டுமே வணங்கவேண்டும்இ அவனுக்கு யாரையும்இ எதனையும் இணையாக்கக் கூடாது என்றே பிரச்சாரம் செய்தார்!.

குர்ஆனில்:

(இயேசு) 'நிச்சயமாக அல்லாஹ்தான் என் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான்இ ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள்இ இதுதான் நேரான வழியாகும் (என்று கூறினார்)'. (3:51)

பைபிளில்:

'உனது கடவுளுக்கு மட்டுமே சிரம்தாழ்த்தி அவனை மட்டுமே நீ வணங்கு' என்றுஇ இயேசு மக்களுக்குக் கட்டளையிட்டார் (மத்தேயு 10:4)

கடமைகளிலும்இ உபதேசங்களிலும் முதன்மையானது எதுவென இயேசுவிடம் கேட்கப்பட்டபோது 'இஸ்ரவேலர்களே! கேளுங்கள்!! உபதேசங்களிலெல்லாம் மிக முதன்மையானதுஇ இரட்சகனான எமது கடவுள்இ ஒரே ஒருவன்தான் என்பதும்இ உனது இரட்சகனாகிய உனது கடவுளை முழுமையாக நேசிப்பதுவுமாகும்' என பதிலளித்தார். (முர்குஸ் 29:12).

5 - மூஸா நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுபவராகவும்இ அதனைப் பூரணப் படுத்துவற்காகவுமே இயேசு வந்தார்!.

குர்ஆனில்:

'மேலும்இ என்முன் இருக்கும் தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவனாகவும்இ உங்களுக்கு விலக்கப் பட்டவைகளில் சிலவற்றைஇ நான் ஆகுமாக்கி வைப்பதற்காகவும்இ மேலும் உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடனும் உங்களிடம் வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்துஇ எனக்கும் கட்டுப்படுங்கள்'. (3:50).

பைபிளில்:

'நாமூஸாயோஇ அல்லது ஏனைய நபிமார்கள் கொண்டு வந்த(மார்க்கத்)தையோ செயலிழக்கச் செய்வதற்காக நான் வரவில்லைஇ மாறாக அதனைப் பூரணப்படுத்துவதற்காகவே நான் வந்தேன் என இயேசு கூறினார்' (மத்தேயு 17:5).

இதைத் தவிர இன்னும் பல இடங்களில் குர்ஆனிய உண்மைகள்இ பைபிளில் விபரிக்கப்பட்டுள்ளன. எனவேஇ உண்மையைத் தேடுவோம்இ அதனை விளங்குவோம்இ அதனை ஏற்போம்இ அதன்பால் அழைப்போம். வல்ல இரட்சகன் நம்மனைவருக்கும் நேரான வழிகாட்டுவானாக!

இளம்பெண்ணை கடத்திய கிருத்துவ பாதிரியார் குடும்பத்துடன் கைது

இளம்பெண்ணை கடத்திய பாதிரியார் பொள்ளாச்சியில் குடும்பத்துடன் கைது


பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இளம்பெண்ணை கடத்திய பாதிரியார், அவரது மனைவி உள்பட நான்கு பேரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ஆனந்தி என்கிற ஆராதனாவை கடத்தியதாக, திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் உட்பட நான்கு பேர் மீது அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்த அன்புநாதன்,குடும்பத்துடன் ஊஞ்சவேலாம்பட்டி பஸ் ஸ்டாபில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் சென்று அவர்களை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட பாதிரியார் அன்புநாதன்(33),அவரது மனைவி மாலதி(29),அக்கா தெய்வானை (40),அக்கா மகன் வீரமுத்து (28) ஆகியோரை 15 நாள் காவலில் வைக்க பொள்ளாச்சி ஜே.எம்., எண் 1 கோர்ட் மாஜிஸ்திரேட் உத்தர விட்டார்.போலீசார் கூறுகையில், "பொள்ளாச்சி நந்தனார் காலனியைச் சேர்ந்த முருகனின் மகள் ஆனந்தி என் கிற ஆராதனாவை திப்பம்பட்டியைச் சேர்ந்த பாதிரியார் அன்புநாதன் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தியதாக புகார் கொடுக்கப்பட்டது.


அன்புநாதனின் மனைவி மாலதி, முருகன் வீட்டுக்குச் சென்று ஆனந்தியை கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அடுத்த நாளில் இருந்து ஆனந்தியை காணவில்லை.அன்புநாதனின் அக்கா தெய்வானை, அவரது மகன் வீரமுத்து என்கிற அகஸ்டின் ஆகியோர் ஆனந்தியை வீட்டில் இருந்து அழைத்து சென்றதாக புகார் செய்துள்ளனர்' என்றனர்.போலீஸ் விசாரணையில், "ஆனந்தியை நாங்கள் கடத்திச் செல்லவில்லை, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது' என்று அன்பு நாதன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


மகளிர் போலீசாருக்கு கடந்த வாரம் வந்த கடிதத்தில், "என்னை யாரும் கடத்தவில்லை, என்னை கடத்தியதாக அன்புநாதன் மீது பழி போடுவது தவறானது' என்று ஆனந்தி பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை யார் அனுப்பியது, காணாமல் போன ஆனந்தி எங்கிருக்கிறார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

இஸ்லாம் அமைதியான மதம் : தலாய் லாமாஇஸ்லாம் அமைதியான மதம் : தலாய் லாமா


ஜூலை 15,2008,07:01 IST


பெத்லகேம் : அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புத்த மதத் துறவி தலாய்லாமா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். கருத்தரங்கிற்கு பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தலாய்லாமா பதிலளித்தார். அமெரிக்கர்களுக்கு எதிராக முஸ்லீம் இனத்தவர்கள் கொலைவெறித் தாக்குதல்களை நடத்திவருகின்றனரே என்று கேட்டதற்கு ஒரு நாட்டை மட்டும் மையமாக வைத்து ஒரு மதத்தை மதிப்பிடக்கூடாது, ஏனெனில் இஸ்லாம் மதம் அமைதியான மதம் என்று அவர் கூறியுள்ளார். பீஜிங் ஒலிம்பிக்ஸ் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அதிற்கு பதிலளிக்க தலாய்லாமா மறுத்து விட்டார். பீஜிங்ஒலிம்பிக்ஸ் விவகாரத்தில் தலாய்லாமாவின் ஆதரவை சீனா முமுமையாக நம்பியுள்ள நிலையில் அவரது இந்த நிலை அந்நாட்டிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. புதன்கிழமை பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள கிம்மல் சென்டரில் நடைபெறவுள்ள சொற்பொழிவில் தலாய்லாமா கலந்து கொள்கிறார்.


Thanks to Dinamalar

மதுரை கிருத்தவ பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு

மதுரை பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு
புதன்கிழமை, ஜூலை 9, 2008

மதுரை: மதுரை-ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் கீழ் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜோசப் ஆனந்தராஜ் என்பவர் தனக்கு இடமாறுதல் வேண்டினார்.

அவரது இடமாறுதலுக்காக மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தை அமைப்பு செயலாளர் பாண்டியம்மாள் சிபாரிசு செய்துள்ளார்.

ஆனால் அந்த பரிந்துரையை மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தன்னை பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஜாதி பெயரை கூறி திட்டியதாக காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகார் செய்தார்.

அதன் பேரில் மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாண்மை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றிங்க..

மாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்!

ஏகத்துவம் வலைதளத்தில் தற்போது...

மாதவிடாய் பெண்கள் எதை தொட்டாலும் தீட்டு, அவர்களை தொடுபவனுக்கும் தீட்டு, அந்த பெண்கள் எதை எல்லாம் தொட்டார்களோ அந்தப்பொருட்களை யாராவது தொட்டாலும் அதுவும் தீட்டு என்று பைபிள் பெண்களை இழிவுபடுத்துவதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் கட்டுரை.....


மாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்!

http://egathuvam.blogspot.com/2008/07/blog-post.html

விஞ்ஞானம் வளர்ந்த இருபதாம் நூற்றான்டில் இது போன்ற பெண் கொடுமைக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவோம்.