Showing posts with label தலாய் லாமா. Show all posts
Showing posts with label தலாய் லாமா. Show all posts

இஸ்லாம் அமைதியான மதம் : தலாய் லாமா



இஸ்லாம் அமைதியான மதம் : தலாய் லாமா


ஜூலை 15,2008,07:01 IST


பெத்லகேம் : அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புத்த மதத் துறவி தலாய்லாமா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். கருத்தரங்கிற்கு பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தலாய்லாமா பதிலளித்தார். அமெரிக்கர்களுக்கு எதிராக முஸ்லீம் இனத்தவர்கள் கொலைவெறித் தாக்குதல்களை நடத்திவருகின்றனரே என்று கேட்டதற்கு ஒரு நாட்டை மட்டும் மையமாக வைத்து ஒரு மதத்தை மதிப்பிடக்கூடாது, ஏனெனில் இஸ்லாம் மதம் அமைதியான மதம் என்று அவர் கூறியுள்ளார். பீஜிங் ஒலிம்பிக்ஸ் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அதிற்கு பதிலளிக்க தலாய்லாமா மறுத்து விட்டார். பீஜிங்ஒலிம்பிக்ஸ் விவகாரத்தில் தலாய்லாமாவின் ஆதரவை சீனா முமுமையாக நம்பியுள்ள நிலையில் அவரது இந்த நிலை அந்நாட்டிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. புதன்கிழமை பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள கிம்மல் சென்டரில் நடைபெறவுள்ள சொற்பொழிவில் தலாய்லாமா கலந்து கொள்கிறார்.


Thanks to Dinamalar