இஸ்லாம் புலால் உண்ண அனுமதிப்பது என்?

மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?

பதில்:

1. இஸ்லாமிய மார்க்கம் - தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.

மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் - மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் - அமைதியானதும் - பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் - அமைதியான பிராணிகளான - ஆடு - மாடு - ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக - இருக்கின்றோம்.

2. அருள் மறை குர்ஆனும் - நபிகளாரின் பொன்மொழியும் - கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.


'(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 07 - ஸுரத்துல் அஃராப் - 157வது வசனம்) '

மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 59 - ஸுரத்துல் ஹஷ்ர் - 7வது வசனம்)


சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் - சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள - நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.

3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி :

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி - ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் - 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.

அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான - சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.

ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்


இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்

ஈ. கூரிய அலகுகளையும் - கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும்.

நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism