ஒட்சிசனின் வடிவமைப்பு

பச்சைத் தாவரங்கள் தமது சக்தி தேவையை ஷஒளித்தொகுப்பு செயன் முறை ஊடாக பூர்த்தி செய்து கொள்கின்றன. மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் ஒட்சியேற்றம்- எரிதல் எனும் செயன்முறை மூலமாகவே தமது சக்தித் தேவையை நிறைவேற்றுகின்றன. ஒட்சிசனை சுவாசிக்கும் அங்கிகள் தமக்குத் தேவையான சக்தியை தாம் உட்கொள்ளும் தாவர, விலங்கு உணவுப் பொருட்களை தமது உடலுக்குள் எரிதலுக்குட்படுத்தியே பெற்றுக் கொள்கின்றன. ஷஒட்சியேற்றம் என்ற பதம், பதார்த்தங்கள் ஒட்சிசனுடன் இரசாயனத் தாக்கமடைவதைக் குறிக்கும். எனவே, ஒட்சிசன் காபனைப் போன்றே உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியம் என்பது தெளிவாகிறது. எரிதல் அல்லது ஒட்சி யேற்றம் என்பதற்கான இரசாயனச் சூத்திரம் பின்வருமாறு:

காபன் பதார்த்தம் - ஒட்சிசன் - நீர் -10 காபனீரொட்சைட் -10 சக்தி


அதாவது காபன் சேர்வைகள் குறித்த சில இயற்கை நிலைமைகளின் கீழ் ஒட்சிசனுடன் சேர்வதனால் குறித்தளவு சக்தி வெளியேற்றப்படுகிறது. இத்தாக்கம் ஷஐதரோ காபன்களில் (காபனும் ஐதரசனும் மட்டும் உள்ள சேர்வைகள்) மிக வேகமாக நடைபெறும். உதாரணமாக குளுக்கோசு மூலக்கூறுதான் எமது உடற் கலங்களுக்குள் சதாவும் எரிந்து கொண்டி ருக்கும் (ஒட்சியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும்) பதார்த்தமாகும். இதன் விளைவால் உருவாகும் வெப்பச் சக்தி காரணமாகவே எமது உடல் சூடாக இருக்கிறது. எமது உடலின் அனைத்துச் செயற்பாடுகளும் தடையின்றி நடைபெறுகின்றன.

ஐதரோ காபன்கள்தான் ஒட்சியேற்றம் நடைபெறுவதற்கான மிகப் பொருத்தமான பதார்த்தங்களாகும். அதேபோல் ஒட்சிசனுடன் தாக்கமடைவதன் மூலம் மிகக் கூடுதலான சக்தியை வெளியிடும் ஒரே அணு ஐதரசன்தான். எனவே ஐதரசனை எரிபொருளாகப் பாவித்து எரிப்பதன் மூலமன்றி வேறு எதனை எரிப்பதன் மூலமும் அதிகூடிய சக்தியை நாம் பெறுவது சாத்தியமில்லை. ஐதரசனை அடுத்து ஷபோரன் அணுவும், அடுத்து காபன் அணுவும் இந்த வரிசையில் முன்னணி வகிக்கின்றன.

ஐதரோ காபன்களின் ஒட்சியேற்றமே இயற்கையில் மிகக் கூடுதலான சக்திப் பரிமாற்றத்திற்கு உதவும் இரசாயனத் தாக்கமாகும். இது இயற்கைக்கு எவ்வளவு தூரம் பொருத்தமாக அமைந்துள்ளது என்பதை விஞ்ஞாhனபூர்வமாக சிந்திக்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது.

ஷலோரன்ஸ் ஹென்டர்ஸன் இச் செயற் பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது,

வாழ்க்கை ஓட்டத்திற்கு அவசியமான சக்திப் பாய்ச்சலை தொடர்ந்து வழங்கும் முகமாக உடற்றொழிலியல் (phலளழைடழபல) ரீதியில் பெற முடியுமான, அதிகூடிய சக்தி
உற்பத்திச் செயற்பாடு, இயற்கையிலேயே உடலோடு பொருந்திப் போவது உண்மையிலேயே ஒரு பேரற்புதமாகும் என்கிறார்.


நெருப்பின் வடிவமைப்பு:

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒட்சிசனை சுவாசிக்கும் அங்கிகளின் அடிப்படைச் சக்தித் தேவையை நிறைவேற்ற அவை ஐதரோகாபன்களை ஒட்சிசன் மூலம் எரித்தே பெற்றுக் கொள்கின்றன. ஆனால், இவ்வெளிய உண்மை மிகப் பெரிய பிரச்சினைக்குரிய ஒரு கேள்வியையும் தோற்றுவிக்கிறது. அதாவது, ஷஷஎமது உடல் ஐதரோகாபன்களால்தான் ஆக்கப் பட்டுள்ளது எனின், ஏன் எமது உடல் எரிதலுக்கு உள்ளாவதில்லை? ஆம், ஒட்சிசனால் சூழப்பட்டுள்ள நாம் (உள்ளும் புறமும்) ஏன் எரிந்து போவதில்லை?

இக்கேள்விக்கு முன்வைக்கப்பட்ட பதிலில், ஷஷசாதாரண வெப்ப அமுக்க நிலையில் ஒட்சிசன் மூலக்கூறானது கணிசமானளவு மந்த நிலையைப் பேணுகிறது. இது ஒட்சிசனின் சிறப்புத் தன்மை (ழேடிடைவைல) என்று விஞ்ஞானிகள் கூறுவர்.

ஷஷஒட்சிசனின் இச்சிறப்புத் தன்மை காரணமாகவே எமது உடல் எரிதலுக்கு உள்ளாகாமல் இருக்கும் அதேவேளை, உடல் கலங்களுக்குள் உள்ள ஐதரோ காபன்கள் மட்டும் எரிகின்றன என்பதுதான் அவர்களின் விளக்கமாகும். ஆயினும், இங்கு மற்றுமொரு கேள்வியும் சேர்ந்தே வருகிறது.

ஷஷஎமது உடலை எரிக்க முடியாத மந்த நிலையில்தான் ஒட்சிசன் இருக்கிறது எனில் அதே மந்த நிலை ஒட்சிசன் எப்படி உடற் கலத்தில் கடுகதி வேகத்தில் தாக்கமடைந்தது எரிதலைடந்து விடுகிறது?

இக்குழப்பமான கேள்வியை 19ம் நூற்றாண்டின் ஆரம்பகால விஞ்ஞானிகள் அதிசயமான, பதிலில்லாத கேள்வியாகக் கண்டனர். ஆயினும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உயிர் இரசாயன ஆய்வாளர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தில் புரட்சி ஒன்றை ஏற்படுத்தினர். அதுதான், உயிர் இரசாயன ஊக்குகள் என அழைக்கப்படும் ஷநொதியங்கள் ஆகும். இவற்றின் ஒரே தொழில் மந்த நிலை ஒட்சிசனை குறிப்பிட்ட சேர்வைகளுடன் தாக்கமடைய ஊக்குவிப்பதாகும். (இதன் படிமுறைச் செயற்பாடு இங்கு விளக்கத்துக்கு பொருத்தமானதல்ல)

எனவே சுருக்கமாகக் கூறின், மந்த நிலை ஒட்சிசனின் தேவையைக் கருதி உடலினுள் சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விகிதத்தில் நொதியங்கள் உற்பத்தியாவதனாலேயே ஒட்சிசனானது குறித்த ஐதரோகாபன்களை மட்டும் எரித்து சக்தியை வெளியிடுகிறது. இது எத்துணை மகத்தான இயற்கை ஒத்துழைப்பு என்று நாம் எண்ணிப் பார்த்தது உண்டா?

இனி நாம் ஒட்சிசனின் முக்கியமான இயல்புக்குச் செல்வோம். அதுதான் ஒட்சிசனின் கரைதிறன்.

உடலானது ஒட்சிசனைப் பயன்படுத்தும் அளவு, கிட்டத்தட்ட முற்றுமுழுதாகவே ஒட்சிசனின் கரைதிறனில் தங்கியுள்ளது. சுவாசப் பையினுள் நுழையும் ஒட்சிசன் அங்குள்ள திரவத்தன்மை காரணமாக கரைந்து குருதிக்குள் சென்று விடுகிறது. பின்னர் பல படிமுறைகளில் அது கலத்தை அடைந்து அங்குள்ள ஐதரோகாபனுடன் தாக்கமுற்று சக்தியை வெளியேற்றுகிறது.

எனவே, ஒட்சிசனின் கரையும் திறமை சற்றுக் குறைவுபடுமானால்; எமது உடல் கலங்கள் போதுமானளவு ஒட்சிசனைப் பெற்றுக் கொள்ளாது. விளைவு... சக்தி குறைய தேகாரோக்கியம் கெடுகிறது. மறுபுறமாக, ஒட்சிசனின் கரையும் திறன் அதிகரித்துவிடின் அதுவே உடலுக்கு நஞ்சாக அமைந்து உயிராபத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

வாயுக்களின் கரைதிறன் வேறுபாடுகளின் வீச்சம் மிகப் பரந்தது. மிகக் குறைந்தளவு கரைதிறன் உடைய வாயுவை விடவும் மிகக் கூடியளவு கரைதிறன் உடைய வாயு பல இலட்சம் மடங்குகள் அதிக கரைதிறனுடன் காணப்படும். இவ்வளவு பாரிய வேறுபாடுகளுள் ஒட்சிசனின் கரைதிறன் மட்டுமே மனித உடலுக்கு ஒத்துப் போகிறது. ஒட்சிசன்தான் மனிதனுக்கு தேவையாகவும் இருக்கிறது. அதன் கரைதிறன் மட்டும்தான் உடல் தொழிற்பாடுகளோடு ஒத்தும் இருக்கிறது.

இவ்வுண்மைகளை மனதில் இருத்திய இரசாயனவியலாளர் ஐசறin குசனைழறiஉh பின்வருமாறு தனது கருத்தை முன்வைக்கிறார்:

சுவாசிக்கும் அனைத்து அங்கிகளும் மிகச் சிக்கலானதும், பயங்கரமானதுமான ஒரு பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளன. உயிருக்கு உத்தரவாதமான ஒட்சிசனே ஒரு கட்டத்தில் நஞ்சாக மாறி அவ்வுயிரையே நாசம் செய்து விடுகிறது. அதாவது ஒரு நிச்சயமற்ற சூழலிலேயே
அங்கிகள் நிலைபெற்றுள்ளன. அதாவது மிகவும் நேர்த்தியானதொரு தற்காப்புப் பொறிமுறையொன்றின் துணை அங்கிகளின் உடலில் அமையப் பெற்றுள்ளது


எனவே ஆபத்தான பொறிக்குள் அகப்பட்டுள்ள மனிதன் நேர்த்தியான திட்ட மிடப்பட்ட வடிவமைப்பான ஒட்சிசனின் உதவியுடன்தான் உலகில் உலாவுகிறான். அத்திட்டமிடலும், வடிவமைப்பும் இயற்கைக்கு எப்படித்தான் வந்ததோ?

ஒரு நம்பிக்கையாளனின் வார்த்தையில் சொன்னால்,

ஷஷஅல்லாஹ்தான் எமது சூழலை எமக்கு ஏற்ற வகையில் நேர்த்தியான இசைவுடன் அமைத்துத் தந்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்.



நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர்,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism,இஸ்லாமிய தீவிரவாதம்,முஸ்லிம தீவிரவாதம்,தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள்,இஸ்லாமிய பயங்கரவாதம்,எழில்,பயங்கரவாதிகள்,எண்ணச் சிதறல்கள்,மதானி விடுதலை