குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறதா?

அல்லாஹ் மாத்திரமே தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று அறிகிறான் என்கிறது குர்ஆன். ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனால் குர்ஆன் மருத்துவ அறிவியலோடு முரண்படுகிறது இல்லையா?.

பதில்:

1. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்:
தாயின் வயிற்றில் உள்ள கரு ஆணா அல்லது பெண்ணா என்பதை பற்றி மாத்திரம் அறிந்தவன்தான் அல்லாஹ் என்று பலர் நம்பியுள்ளனர். ஆனால் அருள்மறை குர்ஆனின் 31வது அத்தியாயம் ஸுரத்துல் லுக்மானின் 34வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது.
'நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது: அவனே மழையையும் இறக்குகிறான். இன்னும் அவனே கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான்..!'
மேற்படி வசனத்தில் உள்ள செய்தியைப் போன்று அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸுரத்துர் ரஃது வின் 8வது வசனம் கீ;ழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும், அல்லாஹ் நன்கறிவான்: ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.'

2. 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாம் 'அல்ட்ராஸோனிக்' என்னும் கருவியின் மூலம் தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் இனத்தை (ஆண் அல்லது பெண்) என்று மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.

3. அருள்மறை குர்ஆனில் பால் (SEX) என்ற வார்த்தை குறிப்பிடப் படவில்லை.
அருள்மறை குர்ஆனை மொழியாக்கம் செய்தவர்களும், அருள்மறை குர்ஆனுக்கு விளக்கமளித்தவர்களும் - தாயின் கருவில் உள்ள குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்று தவறான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அருள்மறை குர்ஆனை நீங்கள் படித்துப் பார்த்தால் - பால் (SEX) என்கிற வார்த்தைக்குச் நிகரான அரபு வார்த்தை அதில் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். மாறாக தாயின் கருவில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் என்கிற கருத்து இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். தாயின் கருவில் உள்ள குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

4. அல்லாஹ்வைத் தவிர, வேறு எவரும் கருவில் இருக்கும் குழந்தையின் தன்மையை முடிவு செய்ய முடியாது.
மேற்படி வசனம் குழந்தையின் பாலை (அதாவதுஆணா அல்லது பெண்ணா என்பதை மட்டும்) அறிந்தவன் அல்லாஹ் என்பதை மாத்திரம் குறிப்பிடவில்லை. மாறாக கருவில் இருக்கும் குழந்தையின் தன்மைகள் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் என்பதை குறிப்பிடுகிறது. அதாவது தாயின் கருவில் உள்ள குழந்தை எவ்வாறு இருக்கும்?, என்பதையும், அந்த குழந்தையின் தன்மை என்ன என்பதையும், கருவில் இருக்கும் குழந்தை அதனது பெற்றோர்களுக்கு அருட்கொடையாக இருக்குமா? அல்லது சாபக்கேடாக இருக்குமா? கருவில் இருக்கும் குழந்தை சமுதாயத்திற்கு நன்மையாக அமையுமா? அல்லது தீமையாக அமையுமா? என்பதையும், குழந்தை நல்லதா? கெட்டதா என்பதையும், குழந்தை சொர்க்கத்திற்கு செல்லுமா?. அல்லது நரகத்திற்குச் செல்லுமா? என்பன போன்ற அனைத்து விபரங்களையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதே மேற்படி வசனத்தின் பொருளாகும். முற்றிலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை வைத்திருக்கும் எந்த ஒரு அறிவியல் அறிஞரால் மேற்படி விபரங்களை எல்லாம் நிச்சயமாகச் சொல்ல முடியும்?. அல்லாஹ்வைத் தவிர.


நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism