தலித்தை மலம் திங்க வைத்தால் ஆயிரம் ரூபாய்தான் அபராதம்!!

மலம் தின்ன வைத்த கொடுமை மாஜி தலைமை ஆசிரியருக்கு சிறை

தினமலர் 11-09-2007

திருச்சி : திண்ணியத்தில் மனித மலத்தை தின்ன வைத்த கொடூர வழக்கில் தலைமை ஆசிரியருக்கு கோர்ட் தண்டனை விதித்தது. திருச்சி, லால்குடி, திண்ணியத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. ஆதிதிராவிடர். தொகுப்பு வீடு கோரி ஊராட்சி தலைவியிடம் பணம் கொடுத்து வீடு கிடைக்காமல் ஏமாந்தார். இது பற்றி தண்டாரோப்போட்டு ஊர்முழுக்கத் தெரிவித்தார். ஊராட்சி தலைவி ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தடைந்தனர். கருப்பையா மற்றும் அவருடன் தண்டாரோ போட்ட முருகேசன் ஆகியோரை இனத்தைச் சொல்லி இழிவு படுத்தியதுடன், மலம் தின்னவைத்து கொடூரம் செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் உத்தரவில் லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ராஜலட்சுமி, அவரது கணவரான தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் மற்றும் உறவினர்கள் உட்பட எட்டு பேர் மீது வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாஜி தலைமையாசிரியர் சுப்பிரமணியம் மட்டும் குற்றவாளி எனத் தீர்ப்பு கூறப்பட்டது. மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் இரண்டாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அப்படியானால், தன் ஜாதிதான் உயர்ந்தது என்று கூறும் பார்ப்பனர்களையும், மற்ற இனத்தவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் இதுபோல் பிடித்து கட்டாயமாக மலம் தின்ன வைத்தாலும் மூன்றுமாதம் சிறையும் ஆயிரம் ரூபாய் அபராதமும்தானா? என்ன தீர்ப்பு இது? என்ன நியாயம் இது?

தலித் இயக்கங்கள் இனி புதிய போராட்டங்களை அறிவித்து ஊருக்கு ஊர் வாரம் ஒரு முறை ஜாதி வெறிபிடித்த உயர் ஜாதியினரை மக்கள் மத்தியில் கட்டாயப்படுத்தி மலம் திங்க வைக்க வேண்டும்!! மூன்றுமாதம் சிறையும் ஆயிரம் ரூபாய் அபராதமும்தானே இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே?

இஸ்லாம் என்ன கூறுகின்றது ?

திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகின்றது, 'மக்களே! நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை பல சமுதாயங்களாகவும் - பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம்' - என்று மாமறை மேலும் தெளிவு படுத்துகிறது. 'உங்களில் எவர் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ இறைவனிடத்தில் அவர் நிச்சயம் கண்ணியம் உள்ளவராவார்.'நிச்சயமாக இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும் தெளிந்த ஞானமுடையவனும் ஆவான்' (44:13)


அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்களே!! மனிதர்களில் உயாந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்பதை மிகத்தெளிவாக இஸ்லாம் கூறுகின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியரை விட மற்றவரோ அல்லது மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர், கருப்பரைவிட வெள்ளையரோ அல்லது வெள்ளையரைவிட கருப்பரோ சிறந்தவரல்லர், உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. வேறு எந்த மேன்மையும் இல்லை.


ஆக, சமத்துவத்தை வாழ்க்கை நெறியாக வலியுருத்தும் இஸ்லாத்தின் பால் வாருங்கள் மக்களே!! இங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை!! யாரும் யாரையும் மலம் திங்க வைப்பதும் இல்லை!!