விபச்சாரத்தில் பிறந்தவளை திருமணம் செய்யலாமா?
மார்க்கத்தில் இதற்கு எந்தத் தடையும் கிடையாது.
ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்' (அருள்மறை அல் அராஃப் 6:164, 17:15, 35:8, 39:7, 59:38) என்பது இறைவசனமாகும். தாய் செய்த விபச்சாரத்தின் பாவச்சுமைiயில் மகளுக்கு எந்தப் பங்கும் கிடையாது. இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தாய் விபச்சாரியாக இருக்கும் போது தாயின் தகாத செயலை நியாயப்படுத்தும் அளவுக்கு மகள் பழக்கப்பட்டு விடலாம். அவள் வளர்ப்பு முறை சரியின்றி இருக்கலாம். அவளுடைய மார்க்க நடத்தைகளில் குறைபாடுகள் இருக்கலாம். மற்றவர்களைவிட இத்தகையவர்களிடம் இது போன்ற குறைகளுக்கு அதிக வாய்ப்புண்டு. எனவே இவற்றையெல்லாம் தீர விசாரித்துக் கொள்வது அவசியமாகும்.
ஒரு பெண் அவளது செல்வத்துக்காக, அவளது பாரம்பர்யத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது நன்னடத்தைக்காக ஆகிய நான்கு நோக்கங்களுக்காக மணமுடிக்கப்படுகின்றாள். நீ நன்னடத்தை உடையவளை (மணந்து) வெற்றியடைந்து கொள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபுஹூரைரா (ரலி) அவர்கள் ஆதார நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், இப்னுமாஜா
விபச்சாரத்தில் பிறந்தவளோ மற்றவளோ யாராக இருந்தாலும் நன்னடத்தையைப் பிரதானமாகக் கொண்டிருக்க வேண்டும
விபச்சாரத்தில் பிறந்தவள்
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் திருமணம், விபச்சாரத்தில் பிறந்தவள்