நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக! உங்கள் அனைவரின் இரட்சகன் இறைவனே. அரேபியரை விட மற்றவரோ அல்லது மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர், கருப்பரைவிட வெள்ளையரோ அல்லது வெள்ளையரைவிட கருப்பரோ சிறந்தவரல்லர், உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே. வேறு எந்த மேன்மையும் இல்லை.
இன்னொருமுறை சொன்னார்கள், நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டிருந்தார். மக்கள் தம் முன்னோர்களை பற்றி பெருமையடிப்பதைவிட்டுவிடவேண்டும். இல்லையேல் அவர்கள் இறைவனின் பார்வையில் ஒரு அற்ப புழுவை விட இழிந்தவர்களாக ஆகிவிடுவர்.
மதுரை:
மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு-மதுரையில் கொடுமை
மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.