முஸ்லிம்கள் ஒரு வித்தியாசமான கடவுளை வணங்குகின்றனர்
முஸ்லிம்களின் தங்களின் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ள அல்லாஹ் என்ற சொல், இறைவனை அழைக்கக் கூடிய ஒரு சாதாரண அரபிச் சொல்லாகும். அல்லாஹ் என்று முஸ்லிம்கள் அழைக்கக் கூடிய அந்தக் கடவுள் மிகச் சிறந்த மற்றும் கடவுள்களுக்கென வழங்கப்படக் கூடிய பெயர்களிலேயே மிகச் சிறந்த பெயரைக் கொண்டதுமாகும், அந்த அல்லாஹ் என்ற அரபிப்பதத்திற்கு வளமான அர்த்தங்களும் உள்ளன, மேலும் அது எண்ணால் ஒருமையையும், ஒரே கடவுளையும், அவனுக்கு இணையாக எவரையும், எதனையும் ஒப்புவமையாக்காத அவனது தன்மையையும் குறிக்கக் கூடியதாக, அல்லாஹ் என்ற அந்த அரபிப்பதம் திகழ்கின்றது.
இதே வார்த்தையைக் கொண்டே யூதர்களின் வேத மொழியாகிய ஹீப்ருவில், எலோஹ் என்றும், இயேசு கிறிஸ்த்து இறைவனைத் துதித்த பொழுது, வேத மொழியாகிய அராமிக் மொழியில் இந்த பதத்தைத் தான் பயன்படுத்தினார். யூத, கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதங்களில் இறைவன் தனக்கென அடையாளப் பெயர்களைப் பெற்றிருக்கின்றான். அல்லாஹ் என்று சொல்லக் கூடிய அந்த ஒரே இறைவனைத் தான் யூதர்களும், கிறிஸ்த்தவர்களும், முஸ்லிம்களும் வணங்குகின்றார்கள். வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வைத் தனித்துவப்படுத்தி, அவனுக்கு மட்டுமே அந்த வணக்கவழிபாடுகளை உரித்தாக்கி, அவற்றில் வேறு யாரையும், எதனையும் அவனுக்கு ஈடாக இணையாக்காமல் அவனைத் தனித்துவப்படுத்தி வணங்குவதும் மற்றும் அவனது கட்டளைகள், அறிவுரைகள் ஆகியவற்றை தன்னுடைய வாழ்நாளில் முழுமையாகக் கடைபிடிப்பேன் என்று சத்தியப்பிரமாணமாக ஏற்றுக் கொள்வதும், அவனது இறுதித்தூதரான முஹம்மது (ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு அவற்றைப் பின்பற்றுவதும், மேலும் உலக முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அவனது தூதர்கள் மீது நம்பிக்கை கொள்வதும், ஒரு முஸ்லிமின் மீது கட்டாயக் கடமையாக இருக்கின்றது. இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையின்படி இறைவன் ஒருவன், அவன் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதாகும். இறைவனான அல்லாஹ் மிக உயர்ந்தவன், அவனை எந்தவித களைப்பும் அவனை அடைவதில்லை, அவனுக்கு சந்ததிகள் என்று எதுவும் கிடையாது, அதாவது இறைமகன் என்றழைக்கப்படும் இயேசுவைப் போல, மேலும், மற்ற மதங்களில் காணப்படுவது போல மனிதனுக்குரிய தன்மைகள் எதுவும் அந்த அல்லாஹ்வுக்குக் கிடையாது.
கிறிஸ்துவர்களின் பைபிளில் கூறப்பட்டுள்ளதாவது, 6 நாட்களில் இறைவன் வானமண்டலங்களைப் படைத்து விட்டு, 7 வது நாள் களைப்பு நீங்க ஓய்வு கொண்டான் இறைவன், என்று கூறப்படும் தத்துவத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. அவன் மனிதர்களைப் பீடிக்கக் கூடிய களைப்பு, பசி, உறக்கம் போன்ற இன்னும் உள்ள தன்மைகளில் இருந்து அவன் மாறுபட்டவன். இத்தகைய தன்மைகள் அவனை ஆட்கொள்வதில்லை என்பது இஸ்லாத்தின், இறைக்கொள்கையாகும்.
மற்றும் இந்து மதங்களில் உள்ளவாறும், மற்ற மதங்களில் உள்ளவாறும் இறைவனுக்கு மனைவி, மக்கள், சந்ததிகள், உறவினர்கள் இருப்பது போல அல்லாஹ்வுக்குக் கிடையாது. அவன் தனித்தவன், அவனுக்கு முன்போ, அவனுக்குப் பின்போ எதுவும் கிடையாது. அவன் தனித்தவன், இணைதுணையற்றவன், சந்ததிகளற்றவன், உருவங்களற்றவன், அவன் நிலையானவன், அவன் படைத்திருக்கின்ற அத்தனையும் அழியக் கூடியவையே, ஆனால் அவனுக்கு எந்த அழிவும் கிடையாது. ஒரு முடிவும் கிடையாது.
இந்து மதத்தில் படைத்தலுக்குப் பிரம்மனும், காத்தலுக்கு விஷ்ணுவும், அழித்தலுக்கு சிவனும் என பல்வேறு துறைகளுக்கு பல்வேறு கடவுள்கள் இருக்கின்றனர். இப்பொழுது, அணுகுண்டு தயாரிக்கக் கூடிய ஒருவன் அந்த அணுகுண்டை வெற்றிகரமாகச் சோதிக்க விரும்புகின்றான், இதைப் படைத்தலுக்குரிய கடவுளாகிய பிரம்மனிடம் அவன் வேண்டுகின்றான். பிரம்மனும் ஒப்புதல் தந்து விடுகின்றார். இதனை அறிந்த மற்றொருவன் காத்தலுக்குரிய கடவுளாகிய விஷ்ணுவிடம் சென்று தன்னைக் காக்குமாறு வேண்டுகின்றான். இவரும் தன்னுடைய பக்தனுடைய வேண்டுதலை ஏற்றுக் கொள்கின்றார் எனில், இந்த இரு பக்தருடைய வேண்டுதலில் யாராவது ஒருவருடைய வேண்டுதலைத் தான் நிறைவேற்ற முடியும், இந்த நிலையில், பிறிதொருவனுடைய வேண்டுதல் நிராகரிக்கப்படுமானால், நிராகரிக்கப்படுவது மனிதனின் வேண்டுகோளாக இருந்தாலும், தோல்வியடைந்தது இரு கடவுளர்களில் ஒருவர். கடவுளுக்கே தோல்வி என்றால், இது ஒப்புக் கொள்ளப்படக் கூடியதொரு கடவுள் தத்துவமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
எனவே தான் இஸ்லாம் பல்வேறு கடவுள்கொள்கையை நிராகரித்து விட்டு, இறைவனை ஏகனாகப் பார்க்கின்றது. அவன் தனித்தவன், அவனுடைய ஆட்சி, அதிகாரம் அனைத்தும் மிக்கவன். அவனுடைய ஆட்சி இந்த வானங்கள் மற்றும் பூமி எங்கும் பரவி வியாபித்திருக்கின்றது. இதில் அவனுடைய இந்த ஆட்சிப்பரப்பில் பங்காளிகளோ, உதவியாளர்களோ கிடையாது.
ஸ்பெயினில் இஸ்லாம் (ஆவனப் படம்) (VIDEO)
முஸ்லிம்கள் வித்தியாசமான கடவுளை வணங்குகின்றனரா?
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் முஸ்லிம்களின் கடவுள்