08. கற்பழிப்பு வழக்கில் பாதிரியார் கைது : சொகுசு கார் பறிமுதல்
கிருஷ்ணகிரி: இளம் பெண்ணை கற்பழித்த வழக்கில் பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் குமார்(40); பாதிரியார். விவாகரத்து பெற்றவர். போச்சம்பள்ளி வட்டாரத்தில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கிராமங்களில் இரவு நேரத்தில் பிரசாரம் முடித்து, அந்த பகுதி ஆலயம் அல்லது வீடுகளில் தங்கி விடுவார்.
போச்சம்பள்ளி அடுத்த சின்னகுத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோவிந்தன்; இவரது மகள் தமயந்தி(24). பயிற்சி பாதிரியார் குமார், சின்னக்குத்தகுளம் கிராமத்தில் பிரசாரம் செய்த போது தமயந்தி குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது. "கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தால் அனைத்து வசதியும் செய்து கொடுப்பேன்' என்று, குமார் கூறியுள்ளார். இதில் நெருக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமயந்தி புலியூர் கூட்டுரோட்டில் பஸ்சுக்கு நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த குமார், அவரை காரில் அழைத்து சென்றார். ஆந்திர மாநிலம் குப்பத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டி, கற்பழித்தார். இது பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்னப்பாரண்டப்பள்ளி உமாபதிக்கு, தமயந்தியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது, ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் தமயந்தி, மன உளைச்சலால், கற்பழிக்கப்பட்ட விஷயத்தை கணவரிடம் கூறி விட்டார். போலீசிலும் புகார் செய்தார். விசாரித்த போலீசார் பாதிரியார் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்த சொகுசு கார் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கோர்ட் உத்தரவு பெற்று மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நன்றிங்க..
இளம்பென் கற்பழிப்பு - தமிழகத்தில் மீண்டும் ஒரு கிருத்துவ பாதிரியார் கைது
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் கற்பழிப்பு, காமம், கிருத்துவ பாதிரிகள்