இந்திய இராணுவ இரகசியங்களை திருடிய ஹிந்து தேசபக்தர் கைது

முக்கிய ஆவணங்களை திருடிய முன்னாள் ராணுவ அதிகாரி கைது!
புதுடெல்லி, நவ.5:

முக்கிய ஆவணங்களை திருடியதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்தது.

இது பற்றி சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்ததாவது:


கடற்படை ரகசியம் கசிவு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. ஒய்வு பெற்ற ராணுவ கேப்டன் சலாம் சிங் ரத்தோர் வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது ராணுவம் தொடர்பான பல முக்கிய ஆவணங்களை அவரது வீட்டில் சி.பி.ஐ. கைப்பற்றியது. இது அவரது வீட்டில் இருந்ததை அலட்சியப்படுத்த முடியாது. ஆவணங்களை திருடி, ரத்தோர் விற்க முயன்றுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து ராணுவ இயக்குனரகத்தின் அனுமதி பெற்று ரத்தோர் மீது அரசு ஆவண ரகசிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

ராணுவத்திலிருந்து கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார் ரத்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன் 5 நவம்பர் 2006