01.சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே மீண்டும் மோதல், கைகலப்பு
திருநெல்வேலி :நெல்லை சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக மீண்டும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது.
சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களின் நெல்லை பிஷப்பாக ஜெயபால் டேவிட் உள்ளார். நிர்வாக பொறுப்பைக் கவனிக்கும் லே செயலராக இருந்த தினகரின் பதவிக்காலம் முடிந்ததும், அண்மையில் நடந்த தேர்தலில் பிஷப்பின் மைத்துனர் தேவதாஸ் லே செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை சி.எஸ்.ஐ.,யின் தலைமையகமும் அங்கீகரித்தது. ஆனால் தினகர் தரப்பில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி தமது அணியினருக்கு இன்னமும் அதிகாரம் உள்ளதாக கூறிவருகிறார்.
சி.எஸ்.ஐ.,யின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், நிறுவனங்களுக்கான நிர்வாகிகளை இருதரப்பினரும் தங்கள் இஷ்டப்படி போட்டிபோட்டு நியமித்து வருகின்றனர். இதனிடையே நேற்று பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ., அலுவலகத்தில் முன்னாள் லே செயலாளர் தினகர் மற்றும் அவரது சகோதரர் மனோகர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் கும்பலாக சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பிஷப் நியமித்த சி.எஸ்.ஐ., அலுவலக புதிய மேலாளர் ஜோசப்ஜெயசிங் உள்ளிட்டோர் தாக்குதலில் காயமுற்றனர். தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் லே செயலர் தினகர் உள்ளிட்டவர்கள் மீது ஜோசப்ஜெயசிங் போலீசில் புகார் செய்தார். பாளையங்கோட்டை போலீசார் இருதரப்பினரையும் விசாரித்தனர்.
நன்றிங்க
சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களிடையே மீண்டும் மோதல், கைகலப்பு
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் கிருத்துவம், ஜாதி மோதல்