Showing posts with label ஓரினச் சேர்க்கை. Show all posts
Showing posts with label ஓரினச் சேர்க்கை. Show all posts

ஹிந்து சாமியார்களும் ஓரினச் சேர்க்கையும்

ஓரினச் சேர்க்கை 'சாமியாருக்கு' 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி




சென்னை: திருமணமான இளம் பெண்ணை கற்பழித்த வழக்கில் குளித்தலை சாமியாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை, சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் கணவனுக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. குளித்தலையைச் சேர்ந்தவர் பகவான் ஸ்ரீ சுரேஷ்வர் என்கிற சுரேஷ் சாமியார். இவரது "நெருங்கிய' நண்பர் சிவகுமார். இருவருக்கும் ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டு. சென்னையைச் சேர்ந்த பெண்ணை சிவகுமார் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்துக்கு சுரேஷ் சாமியார் தான் ஏற்பாடு செய்தார். பின்னர், அந்தப் பெண்ணையே கற்பழித்துள்ளார். அந்தமானுக்கு சிவகுமார் தனது மனைவியுடன் சென்றார். தம்பதியுடன் சுரேஷ் சாமியாரும் சென்றார். அங்கும் சிவகுமார் மனைவியை, சாமியார் கற்பழித்துள்ளார். இதற்கு சிவகுமாரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்தமான் சென்று திரும்பிய பின்னர், சாமியார் பற்றியும், கணவன் பற்றியும் தனது தந்தையிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.

.
பெண்ணின் தந்தை, போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், சுரேஷ் சாமியார், சிவகுமார் மீது கற்பழிப்பு, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரையும் 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். இருவர் மீதான வழக்குகளை சென்னை மகளிர் கோர்ட் விசாரித்தது. அப்போது நீதிபதியாக இருந்த அருணா ஜெகதீசன், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் கோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும், அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர்