Showing posts with label ஹிந்துத்துவம். Show all posts
Showing posts with label ஹிந்துத்துவம். Show all posts

மீண்டும் ஒரு இந்து செக்ஸ் சாமியார் கைது!!


லக்னோ :முன்னாள் குற்றவாளியான ஒருவர், சாமியார் போர்வையில் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, டில்லி போலீசார் இந்த சாமியாரையும் விமான பணிப் பெண்கள் இரண்டு பேர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டம் சம்ருகா கிராமத்தை சேர்ந்தவர் சிவ முராத். டில்லியில் இவர் கடந்த 97ம் ஆண்டு மசாஜ் கிளப் நடத்தி வந்தார். அந்த கிளப்பில் விபசாரம் நடந்ததாக அப்போது கைது செய்யப்பட்டார். இதற்கிடையே திடீரென சுவாமி பீமானந்த மகராஜ் என்ற பெயரில் காவி உடை அணிந்து கோவில்களில் உபன்யாசம் செய்து வந்தார். இவரை பற்றி பத்திரிகைகளில் கட்டுரை வந்ததும், சீடர்கள் அதிகமானார்கள். இவர்கள் மூலம் பணமும் குவிந்தது.டில்லியின் தெற்கு பகுதியில் கான்பூர் என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து பிரபலமாகி வந்தார். டில்லி போலீசார் இந்த ஆசிரமத்தில் திடீர் சோதனை நடத்திய போது இரண்டு விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட ஆறு பெண்களுடன் போலி சாமியார் சிவ முராத் சல்லாபத்தில் ஈடுபட்டது தெரிந்தது. உடனடியாக அவரையும்,ஆறு பெண்களையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.


இதை கேள்விப்பட்ட சிவ முராத்தின் பெற்றோர், சகோதரர்கள் உ.பி.யில் உள்ள கிராமத்தை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். சம்ருகா கிராமத்தில் பெரிய கோவிலும், மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு சாலையும் அமைக்கப்பட்டு வந்தது. சாமியார் கைதால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன.டில்லி போலீசார் இந்த கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சிவ முராத்தின் தந்தை பச்சாலால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் மீது கொலை வழக்கும், தம்பி மீது திருட்டு வழக்குகளும் உள்ளன.


இவர்கள் குடும்பத்தினர் அனைவரும் இரட்டை குழல் துப்பாக்கிகளை இதுநாள் வரை பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு லைசன்ஸ் கொடுத்தது தொடர்பாக உள்ளூர் போலீசாரிடம் டில்லி போலீசார் விசாரிக்கின்றனர்.அடுத்த மாதம் பெரிய யாகம் நடத்த திட்டமிட்டு வி.ஐ.பி.,க்கள் எல்லாம் அழைக்கப் பட்டுள்ளனர். இதற்கிடையே இவர் கைது செய்யப்பட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகி விட்டது.
நன்றி : தினமலர்

சொந்த மகள்களை 10 வருடமாக கற்பழித்த ஹிந்து தந்தை கைது!!


மும்பை: நெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.

சமீபத்தில்தான் இந்த வழக்கு அங்குள்ள கோர்ட்டி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தந்தை செய்த கொடுமைகளை பல மணி நேரம் வாக்குமூலமாக அளித்தார் அந்த அப்பாவி பெண்.

இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது.

அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.


ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம்.


தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான்.

தற்போது போலீஸார் அந்த காமக் கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

ஹிந்து சாமியார்களும் ஓரினச் சேர்க்கையும்

ஓரினச் சேர்க்கை 'சாமியாருக்கு' 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி




சென்னை: திருமணமான இளம் பெண்ணை கற்பழித்த வழக்கில் குளித்தலை சாமியாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை, சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் கணவனுக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. குளித்தலையைச் சேர்ந்தவர் பகவான் ஸ்ரீ சுரேஷ்வர் என்கிற சுரேஷ் சாமியார். இவரது "நெருங்கிய' நண்பர் சிவகுமார். இருவருக்கும் ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டு. சென்னையைச் சேர்ந்த பெண்ணை சிவகுமார் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்துக்கு சுரேஷ் சாமியார் தான் ஏற்பாடு செய்தார். பின்னர், அந்தப் பெண்ணையே கற்பழித்துள்ளார். அந்தமானுக்கு சிவகுமார் தனது மனைவியுடன் சென்றார். தம்பதியுடன் சுரேஷ் சாமியாரும் சென்றார். அங்கும் சிவகுமார் மனைவியை, சாமியார் கற்பழித்துள்ளார். இதற்கு சிவகுமாரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்தமான் சென்று திரும்பிய பின்னர், சாமியார் பற்றியும், கணவன் பற்றியும் தனது தந்தையிடம் அந்தப் பெண் கூறியுள்ளார்.

.
பெண்ணின் தந்தை, போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், சுரேஷ் சாமியார், சிவகுமார் மீது கற்பழிப்பு, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரையும் 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். இருவர் மீதான வழக்குகளை சென்னை மகளிர் கோர்ட் விசாரித்தது. அப்போது நீதிபதியாக இருந்த அருணா ஜெகதீசன், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் கோர்ட் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும், அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர்