அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒவ்வொரு வேளையும் நினைக்கும் மக்களை தடுப்பதற்காக, ஏக இறைவனை மறுப்பவர்கள் பலவழிகளிலும் அவர்களது முழு சக்தியையும் உபயோகிப்பார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்¢ (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து
கொண்டிருப்பார்கள் -முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்¢ பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்". (ஸ_றா அல்-அன்பால் : 36)
இத்தகைய எதிர் முயற்சிகள் சிலநேரம் வெளிப்படையாகவும், சில நேரங்களில் இரகசிய தந்திரங்களின் மூலமாகவும் நடைமுறைபடுத்தப்படும். இருப்பினும் அதன் நோக்கம் ஒன்றே: அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் மக்களை தடுப்பNதூடு அவர்களை சன்மார்க்க நன்னடத்தைகளை விட்டும் தூரமாக்குவதூகும்.
சமீபத்தில் பல நாடுகளில் தலைதூக்கியுள்ள பலவகையான கருத்துகள் இதற்கு நல்ல உதாரணமாக எடுத்து கொள்ளலாம். விண்சக்திகள் என்றும், சக்தி அல்லது பிரபஞ்சத்தின் வடிவமைப்பு போன்ற பல கருத்துகளில் தன்னை மறைத்து கொண்டு - அனைத்து பொருட்களினதும் உண்மையான படைப்பாளனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுமென்றே, பிடிவாதமாக அழைக்க மறுக்கும் இத்தகைய உலக சிந்தனைகளால் எந்த பயனும் இல்லை. மக்களின் ஆன்மீக தாகத்தை திசைதிருப்பி உண்மையான மார்கத்தின் அடிப்படையில் அவர்களை வாழ விடாமல் தடுப்பதுமே இத்தகைய முயற்சியின் நோக்கமாகும்.
கிறிஸ்தவ யூத இஸ்லாம் ஆகிய மதங்களின் கலவையாக ஒரு போலியான மதத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த போலியான மதத்தின் அடிப்படையில் மக்கள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது ஒரு சக்தி என்பதை ஏற்று கொள்வார்கள், ஆனால் அந்த சக்தியின் அடையாளம் தெளிவற்றதாக இருக்கும் (நிச்சயமாக அல்லாஹ் இவை அனைத்தை விட்டும் தெளிவானவன்), அவர்கள் அல்லாஹ்வின் பெயரை அழைக்க மாட்டார்கள், அவர்கள் அவனது தூய பண்புகளை படிப்பதுமில்லை அதை புகழ வேண்டிய விதத்தில் புகழுவதுமில்லை. அவன் தான் இந்த முழு பிரபஞ்சத்தின் ஒரே ஒரு இறைவனும் படைப்பாளனுமாவான் என்பதை அவர்கள் மறுக்கிறார்கள். இதன் முலம் அவன் மனித குலத்திற்கு அருளிய மதரீதியான கட்டளைகளுக்கு ஏற்ப அவர்கள் வாழ வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள்.
இந்த போலியான சிந்தனை மதம் மற்றும் நன்னடத்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடியது என்பது நிதர்சன உண்மையாகும். ஆகவே உண்மையான விசுவாசிகள், அல்லாஹ்வின் பெயரை அழைக்க மறுக்கும் அமைப்புகளை விட்டும் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும். வடிவமைப்பாளன் , விண் சக்தி அல்லது சக்தி போன்ற குழப்பமான மறைமுகமான சொற்களுக்கு பின்னால் ஒழிந்து கொள்ளாமல் அல்லாஹ் தான் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து முழு பிரபஞ்சத்தையும் படைத்தான் என்பதை தைரியமாக பிரகடனப்படுத்த வேண்டும்.
அல்லாஹ்வின் பெயரை அழைப்பதும் அவனது வல்லமைகளை போற்றுவதும் உண்மையான விசுவாசியை பொருத்தவரையில் ஒரு பெரும் வணக்கமாகும். அதன் மூலம் புத்துணர்ச்சி அடைவதால் அதை மகிழ்சியுடன் நடைமுறைப்படுத்துகிறான். இதை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
'அவன்தான் அல்லாஹ்¢ படைப்பவன்¢ ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்¢ உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன¢ வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே துதி செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்" (ஸ_றா அல்-ஹஷர்: 24)
எல்லாம் வல்ல அல்லாஹ் தான் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து அனைத்தையும் எவ்வித குறையுமின்றி படைத்தான் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் இறைவனை மகிழ்விக்கும் பொருட்டு அவனது மிக கண்ணியமான பெயர்களை கொண்டு அழைக்க வேண்டும்.
அல்லாஹ்வின் பெயர் அழைக்கப்படும் போது ஒரு முஸ்லிம் ஆனந்தம் அடைகிறான். இன்னொரு வசனத்தில்
'நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்" (ஸ_றா அல்-ஆரப் : 54)
என்று கூறுகிறது. எமது இறைவன் எல்லா வல்லமையுடைய அல்லாஹ். அவனே அனைத்தையும் படைத்தான். அவனே அனைத்தையும் பாதுகாப்பவன். அவனே வானத்தினதும் பூமியினதும் அவற்றுக்கு இடையிலுள்ள அனைத்தினதும் ஒரேஒரு சொந்தக்காரன். அவனை தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை.
அவன்தான் அல்லாஹ்¢ உங்களுடைய இறைவன்¢ அகிலத்தூருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக
பாக்கியமுடையவன். அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்¢அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்Nதூடு அவனை அழையுங்கள் (ஸ_றா காபிர் : 64-65)
அல்லாஹ் இருப்பதை பற்றியும் அவன் தனித்தவன் என்பதையும் மக்களுக்கு சொல்லி, நன்மையை ஏவி தீமையை தடுக்கும் உண்மையான மதத்தின் பக்கம் அவர்களை அழைப்பதும், ஒரு விசுவாசி அவனது வாழ் நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய கடமைகளில் ஒன்றாகும். முஸ்லிம்கள் இந்த கண்ணியமான கடமைகளை செய்யும் போது பின்பற்ற வேண்டிய முறைகளை குர்ஆனிலும், நபி அவர்களின் வாழ்கையிலும் தெளிவாக பார்க்க முடிகிறது. எப்பொழுதும் இந்த செய்தியை சொல்லும் போது முஸ்லிம் உண்மையாளனாக இருப்பதோடு ஒருவரை நேரான வழியில் செலுத்துவது எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் மட்டுமே முடியும் என்பதை மறந்து விட கூடாது. அல்லாஹ்வின் பெயரை அழைக்காமலும் அவனது பண்புகள் மற்றும் அவனது தனித்துவத்தை மக்களிடம் சொல்லவில்லை என்றால் இவை சாத்தியமற்று போய்விடும் என்பதை புரிந்த கொள்ளவேண்டும். அல்லாஹ்வையும் அவனது தன்மைகளையும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளவாறு முஸ்லிம்கள் வர்ணிக்க வேண்டும். எமது இறைவனின் கண்ணியமான பண்புகளை பற்றி குர்ஆன் கூறும்போது.
அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறு இல்லை¢ அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்¢ என்றென்றும் நிலைத்திருப்பவன்¢ அவனை துயிலோ, உறக்கமோ பீடிக்காது¢
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன¢ அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்¢ அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது¢ அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு)
வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது¢ அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்¢ மகிமை மிக்கவன். (ஸ_றா அல்-பகறா : 255 )
அல்லாஹ்வையும் அவனது தனித்துத்தையும் பற்றி ஒரு முஸ்லிம் பேசும் போது அவனிடத்தில் ஆனந்தம் , நேர்மை , ஈர்ப்பு , ஆழமான அன்பு போன்றவற்றை காணலாம். இன்னொரு வசனத்தில்
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதை போன்று நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்¢ ஆனால் நம்பிக்கை
கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியானவர்கள.; (ஸ_றா அல்-பகறா : 165)
இதற்கு பின்னும் மதத்தின் பெயரால் செய்வதாக நினைத்து கொண்டு போலியான சொற்களுக்குள் ஒழிந்து கொண்டு அல்லாஹ்வின் பெயரை சொல்ல மறுக்கும் மனநிலையானது , மோசமான தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மைகளை தவிர்ப்பது பயனற்றதாகும். இத்தகைய சிந்தனையுடையவர்களை பற்றி குர்ஆன் கூறும் போது.
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை¢ எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (ஸ_றா காபிர் : 62)
நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர்,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism,இஸ்லாமிய தீவிரவாதம்,முஸ்லிம தீவிரவாதம்,தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள்,இஸ்லாமிய பயங்கரவாதம்,எழில்,பயங்கரவாதிகள்,எண்ணச் சிதறல்கள்,மதானி விடுதலை,ஹாரூன் யஹ்யா,ஹாருன்,காரூன்,காருன்,யஹ்யா,யஹ்ய,harun,haroon,haroun,yahya,yahiya,yahia,aroun,aroon,arun,yehya,darvin