காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள்!!

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?

பதில்:

இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்..

1. அருள்மறை குர்ஆனின் வசனம்:

இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்.

'முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்' என்கிற வசனம்தான் அது.


2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்:

இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் - மேற்படி வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு - விமரிசனம் செய்கிறார்கள். மேற்படி வசனம் எதனால் - எந்த சூழ்நிலையில் சொல்லப்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில,; - மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்படி வசனம் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் - இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கின்றது. மேற்படி ஒப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிக்கப் பட்டது. இல்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனம் கீழ்க்கணடவாறு கூறுகின்றது:

'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை
முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள்(மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)


மேற்படி வசனம் ஒரு போர்ச் சூழலில் சொல்லப்படுகின்றது.

3. அமெரிக்க - வியட்நாம் போர் - ஓர் உதாரணம்:

அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் - 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் - தனியே 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று சொன்னதாக சொன்னால் - நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் - வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

4. அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டதே.!

அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம்.

5. அருண் சூரி ஐந்தாவது வசனத்திலிருந்து 7வது வசனத்திற்கு தாவி விடுகிறார்:

இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சூரி. அவர் எழுதியுள்ள ' ஃபத்வாக்களின் உலகம்' என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் அருள்மறையின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சூரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம்.

6. அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் 6வது வசனம் மேற்படி கட்டுக்கதை உண்மையல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 9:6)

அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் - போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?.


இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் - சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்..

நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர்,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism,இஸ்லாமிய தீவிரவாதம்,முஸ்லிம தீவிரவாதம்,தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள்,இஸ்லாமிய பயங்கரவாதம்,எழில்,பயங்கரவாதிகள்,எண்ணச் சிதறல்கள்,மதானி விடுதலை