மரங்கொத்தி படைக்கப்பட்ட விதம்
மரங்தொத்தி பறவை தனது அலகை கொண்டு மரத்தில் துளையிட்டு அதில் அதன் கூட்டை கட்டுகிறது என்பது எமக்கு நன்கு தெரியும். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். ஆனால் மரங்கொத்தி தனது தலையை கொண்டு தொடாந்து மரத்தை துளையிட்ட போதிலும் அதற்கு மூளையில் எவ்வித இரத்த கசிவு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆராய மறந்து விடுகிறோம். மரங்கொத்தியின் செயல் முறைக்கும் மனிதன் அவனது தலையை கொண்டு சுவற்றில் ஆணி அறைவதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது. மனிதன் அவ்வாறு செய்ய முற்பட்டால் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்படும். இருப்பினும் ஒரு மரங்கொத்தியால் 2-3 வினாடிகளில் ஒரு கடினமான மரத்தை 38-43 முறை துளையிட முடியும். ஆதன் மூலம் அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 1
எவ்வித பாதிப்பும் ஏற்படாதற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கென்றே படைக்கப்பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது மரங்கொத்தியின் மண்டை ஓட்டில் ஏற்படும் சக்தியை தடுக்கக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது. 2
மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை பைன் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னால் மரத்தின் வயதை ஆராய்கின்றன. அவை 100 வயதை தாண்டிய பைன் மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் 100 வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமீபத்தில் தான் கண்டுபிடித்தது. இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்போது தான் படித்து தெரிந்துகொள்கீறீர்கள் ஆனால் மரங்கொத்திகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.
மரங்கொத்தி பறவை பைன் மரங்களை தெரிவு செய்வதற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மரங்கொத்திகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது. இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக பைன் மரத்திலிருந்து வடியும் ஒருவகை கடினமான திரவம் இந்த துளைகளில் தேங்கி காணப்படுகிறது. மரங்கொத்தி பறவையின் கூட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.
அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறுப்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் அசிட் பாதிப்பிலிருந்து அவற்றை காப்பாற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாகிறது. 3
மரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் ஆராயும் போது அவை தனித்துவமாக படைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரிணாமம் அடைந்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்தரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லாஹ் படைத்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியவசிய பண்புகளோடும் ஆரம்பித்திருக்கின்றன.
கட்டுரைக்கு உதவிய நூற்கள்
(1) Grzimeks Tierleben Vögel 3, Deutscher Taschen Buch Verlag, Oktober 1993, p. 92
(2) Ibid, p. 89
(3) Ibid, pp. 87-88
நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர்,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism,இஸ்லாமிய தீவிரவாதம்,முஸ்லிம தீவிரவாதம்,தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள்,இஸ்லாமிய பயங்கரவாதம்,எழில்,பயங்கரவாதிகள்,எண்ணச் சிதறல்கள்,மதானி விடுதலை