முறிந்த சிலுவை (பாகம்-01)

முறிந்த சிலுவை

உருது மூலம்: ரியாஸ் பீட்டர்,
தமிழாக்கம்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி,
வெளியீடு: இக்றஃ புக் சர்வீஸ்



முன்னுரை

தவ்ஹீது கலிமாவை முன்மொழிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்திற்குள் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட போது பாசத்தோடும் பிரியத்தோடும் முஸ்லிம் சகோதரர்கள் என்னை அரவணைத்துக் கொண்டதை ஒரு போதும் மறக்க முடியாது. சத்தியத்தைத் தேடி அலைந்த என் கதை''முறிந்த சிலுவை' யை முடிக்குந்தறுவாயில் இன்று நான் அவற்றை நினைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் கிருபையும் முஸ்லிம் சகோதரர்களின் அன்பும் தொடர் வற்புறுத்தலும் மட்டும் இல்லாமலிருந்தால் என்னால் இக்காரியத்தை செய்திருக்கவே இயலாது!.

இஸ்லாமிய நந்நெறியைத் தழுவவைத்து என் மீது அல்லாஹ் புரிந்துள்ள பேரருளை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்தவே இந்த என் கதையை எழுதிக் கொண்டுள்ளேன். முறையற்ற என்னுடைய தத்துப்பித்தென்ற சில சொற்கள் யாருடைய உள்ளத்திலாவது சத்திய மெழுகுவர்த்தியை பற்ற வைக்க உதவிவிடாதா என்ற எதிர்பார்ப்பும் நப்பாசையுமே என்னை எழுதத் தூண்டியன. இஸ்லாமை ஆராய்பவர்கள், புதிதாய் இஸ்லாமைத் தழுவியவர்கள், பிறவி முஸ்லிம்கள் அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தேடல் மற்றும் ஆராய்ச்சியின் பெயர் தான் இஸ்லாம்!. இஸ்லாமைப் புரிந்து தூய்மையான ஒரு முஸ்லிமாக மாற நீங்கள் ஆசைப்பட்டால் நீங்கள் இஸ்லாமைப் பற்றி ஆராய்ச்சி செய்தே தீர வேண்டும். நான் இஸ்லாமைப் படிக்கவும் அதைப்பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்த நாட்களிலிருந்தே தொடர்ந்து டைரி எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். இந்நூலின் பெரும்பாகம் அந்த டைரியிலிருந்தே தொகுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. கிறிஸ்துவத்தில் இருந்து இஸ்லாமை நோக்கிய எனது பயணத்தில் எனக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த நண்பர்களுக்கெல்லாம் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகிறேன்.

இஸ்லாமின் சரியான திசையை எனக்குச் சுட்டிக் காட்டிய காரீ ஃகலீலுர் ரஹ்மான் ஜாவீத், திருக்கலிமாவை சொல்லிக் கொடுத்து முறைப்படி என்னை இஸ்லாமில் நுழையச் செய்த ஷேக் ஸனாவுல்லாஹ் ழியா, முறையான இஸ்லாமியப் பயிற்சியை எனக்களித்து, இஸ்லாமியக் கல்வியை எனக்கு வழங்கி தங்கள் அன்பாலும் அரவணைப்பாலும் என்னை திக்குமுக்காட வைத்த ஷேக் அபுதாவுது ஷாகிர், ஷைக் துல்ஃபிகார் தாஹிர், வழிகாட்டியாக இருந்து பேருதவி புரிந்த பேராசிரியர் ஷைக் அப்துல்லாஹ் நாசர் ரஹ்மானி என் உற்ற தோழரான சகோதரர் என்ஜினீயர் ஜாவித் மற்றும் ஷேக் இப்றாஹீம் போன்றோர்க்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இந்நூலைத் தொகுப்பதில் எனக்கு உறுதுணையாய் இருந்த சகோதரர் கவிஞர் டாக்டர் ஜாவீத் இக்பால், சொல் அமைப்பைச் சீர்படுத்தி சொல்லாமல் விளக்கங்களை அளித்த சகோதரர் ஸமீவுல்லாஹ் ஸமீஃ, இந்நூலைப் பதிப்பிக்கும் ஷஹாதத் பதிப்பகச் சகோதரர்கள் ஷாகிர் இப்னு அப்துல்லாஹ் மற்றும் காலித் ஸயால் ஆகியோர்க்கும் நன்றிகள் பலப்பல!!

இவர்களைத் தவிர எனக்கு உதவி புரிந்துள்ள பற்பல சகோதரர்களுக்கும் நான் நன்றி செலுத்துகிறேன். அல்லாஹ் அவர்களுக்கு நல்லபலனை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். (ஆமீன்)

வாசகர்கள் இந்நுõலில் ஏதும் தவறுகள், பிழைகள் இருக்கக் கண்டால் தவறாது அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்ள உதவியாய் இருக்கும். அத்தோடு இந்த நூலை அதிகமான மக்கள் படித்துப் பயன்பெறவும் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய துஆக்களில் என்னையும் நினைவில் கொள்ளுங்கள். எனக்கு இஸ்திக்காமத்தையும், (கொள்கை உறுதியையும்) நேர்வழியையும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்களுடைய சகோதரன்

அப்துல்லாஹ்


கொஞ்சம் என்னைப் பற்றி......

ஒரு வைதீகக் குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள் நான் பிறந்தேன். ரியாஸ் பீட்டர் என்ற பெயரை விரும்பித் தேர்ந்தெடுத்து எனக்கு என் தந்தை சூட்டினார். என்னுடைய தாத்தா பாகிஸ்தான் பைபிள் சொஸைட்டியின் பொதுச் செயலாளராக இருந்தவர். கிறிஸ்துவ மதத்தின் ஓர் உயர் பதவியில் என் தந்தை இருக்கிறார். என் தாயும் கிறிஸ்துவப் பிரச்சார மெஷினரியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். என்னுடைய சித்தப்பாவும் சர்ச்சில் பாதிரியாக உள்ளார். என்னுடைய தந்தைக்கு மாணவப் பருவத்திலேயே கல்யாணம் ஆகிவிட்டிருந்தது. கல்யாணத்துக்குப் பின்புதான் என் தந்தை மதக்கல்வியில் தீவிரக்கவனம் செலுத்திப் படிக்கலானார். கல்வியில் தேர்ந்தபிறது என்னுடைய தாயைவிட்டும் முழுமையாக விலகிவிட்டார். ஏனென்றால், கிறிஸ்துவக் கொள்கைகளின் படி மதப்போதகர்கள், வழிகாட்டிகள் திருமணம் செய்துகொள்வதோ இல்லறவாழ்வில் ஈடுபடுவதோ கூடாது. ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும் அவ்வுறவை அறுத்துக் கொள்ள வேண்டும். மதப்போதகர் என்பவர் கிறிஸ்துவக்கொள்கையின்படி பரிசுத்தமானவர். கடவுள் முன்னிலையில் செய்யப்படும். இக்கணவன் மனைவி உறவோ சுத்தமற்ற உறவாகும்!.

உலகக் கல்வியை நான் புனித பீட்டர் பள்ளியில் கற்றுத் தேர்ந்தேன். மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொள்வதற்காக ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பாடசாலைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு பாதிரியார் ஆகத் தேவையான மதக்கல்வியை முழுமையாய் கற்றபின் மெஷினரிகளின் பிரச்சாரப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்பு, எனக்கு சொந்தமாய் ஈடுபாடு இருந்தாலும் மதத் தேவையைக் கருத்தில் கொண்டும் இசைப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். புகழ்பெற்ற பெஞ்சமின் விக்டர் அவர்களிடம் ஹார்மோனியம் மற்றும் கீபோர்ட் வாசிக்கக் கற்றுக் கொண்டேன்.'ரோலிங் ஸ்டோன்' என்ற பெயரில் தனியாக ஓர் இசைக்குழுவையும் ஏற்படுத்தினேன். வழிபாட்டு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுகளில் நடைபெறும் பாடல் நிகழ்ச்சிகளில் இயேசு கிறிஸ்து மீதான ஸ்தோத்திரப் பாடல்களை விரும்பி இசைத்து வரலானேன். உயர்ந்த குருநாதரின் மகன் என்பதால் எனக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதோடு எல்லா வகையான சுதந்திரமும் இருந்து வந்தது. மதுவைக்கூட சர்வ சுதந்திரமாக நான் குடித்து வந்தேன். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை மது தூய பானமாகத் தானே கருதப்படுகின்றது?

நான் என் தந்தையை மிகவும் நேசித்து வந்தேன் (இன்னும் அவர் மீது மிகவும் கண்ணியம் வைத்துள்ளேன்) அவரிடம் எப்போதும் உண்மையே பேசுவேன். அவருக்கு முன்பு ஒருமுறை கூட பொய் பேசியதாக எனக்கு ஞாபகமே இல்லை. மதப்பேராயர் முன்பு அப்படிபொய் பேசுவதும் கிறிஸ்தவ மதத்தில் ஏற்புடைய செயல் அல்ல! குற்றங்களை மன்னிக்க வல்ல, தன்னோடு சுவனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய விடுதலையாளர் அல்லவா? ஒரு வேளை நான் ஏதாவது தவறு செய்துவிட்டாலும் அதை உடனே என் தந்தையிடம் போய் சொல்லிவிடுவேன்'தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் மகிமையால் உன் குற்றம் மன்னிக்கப்பட்டது' என்று அவர் கூறுவார்.'நீ மதப்பேராயரின் மகன், எனக்குப் பிறகு பேராயராக மாறப் போகின்றவன், என்னைப் போன்றே நீயும் மக்களின் குற்றங்களை மன்னித்து வருவாய்!' என்று மேலும் கூறுவார்.

வழிபாட்டு ஆராதனைக்கு முன்பாக மணியோசை எழுப்புவதையும் வழிபாட்டின் பின்பு துதிப்பாடல்கள் இசைப்பதையும் நான் செய்து வந்தேன். மெஷினரிகளின் பயிற்சியை முடித்தபிறகு மெஷினரிப் பணிகளில் தொடர்ந்து முறையாகப் பங்குபெறத் தொடங்கினேன். விளைவாக, கிறிஸ்துவப் பிரச்சாரத்திற்கென பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யலானேன். கிறிஸ்துவ இளைஞர்களிடம் மெஷினரிப் பணிகளின் அவசியம் அத்தியாவசியம் போன்றவற்றை விளக்கிக் கூறி அவர்களை பெருமளவு துõண்டி வந்தேன். நான் ஓர் உணர்ச்சி மிகுந்த பேச்சாளராய் விளங்கினேன். நான் பேசவுள்ள சர்ச்சுகளில் என் பேச்சைக் கேட்பதற்காகவே இளைஞர்கள் பெருமளவு வந்து குவிவர். என்னுடைய பேச்சினாலும் பிரச்சாரத்தினாலும் ஏராளமான இளைஞர்கள் மெஷினரியின் பணிகளில் தங்களை முறையாக இணைத்துக் கொள்ளலாயினர். கிறிஸ்துவ மதம் மட்டும் தான் உலகிலேயே தலைசிறந்த மதம் என்று மற்ற பிரச்சாளர்களைப் போலவே நானும் எண்ணி வந்தேன். நான் மிகவும் பாக்கியம் பெற்றவன். தன்னுடைய மதத்தைப் பரப்பும் புனிதப் பணிக்காகவே தேவகுமாரர் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளார் என்றெல்லாம் பெருமிதப்பட்டுக் கொள்வேன்.

என்னுடைய ஆய்வுப் பயணத்தை விளக்கப் போகுமுன் கிறிஸ்துவமதத்தைப் பற்றியும் அதன் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றியும் சற்று விளக்கி எழுதினால் இஸ்லாத்துக்கும் கிறிஸ்துவத்துக்கும்

இடையிலான வேறுபாடு என்ன? என்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்!.

கிறிஸ்து மதம்

இயேசு மதம் என்பதைவிட கிறிஸ்து மதம் என்றே தங்கள் மதத்தை அவர்கள் அழைக்கிறனர். தங்களையும் கிறிஸ்துவர்கள் என்றே அழைத்துக் கொள்கிறனர். உண்மையில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறைத்தூதர் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கொண்டுவந்த வான்மதமாகத் தான் இது இருந்தது. ஆனாலும் இது ஒரு முழுமையான மதமாக இல்லை. இறைத்தூதர் ஈஸா வானுலகிற்கு உயர்த்தப்பட்ட பின்னர் வேதக்காரர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றங்களை உண்டுப் பண்ணலாயினர். ஒரு கட்டத்தில் எழுபத்தி இரண்டுக்(72)கும் அதிகமான வேறுபட்ட பைபிள்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இருந்து தான் நான்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

பவுல் (சவுல்) என்ற யூதர்தாம் பைபிளை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். திரித்துவம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் தெய்வத் தன்மை கொண்டவர், பாஸ்காத் திருவிழா போன்ற கொள்கைகளை அவரே புகுத்தினார். கிறிஸ்துவம் என்பது இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, அது ஓர் உலகளாவிய மதம் என்கிற கண்ணோட்டத்தையும் இவரே ஏற்படுத்தினார். அதன் பின்பு அதில் ஏற்பட்ட மாற்றங்களும் திரிபுகளும் இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளன!.

கிறிஸ்துவத்தின் பிரிவுகள்

எண்ணற்ற பிரிவுகள் கிறிஸ்துவ மதத்தில் காணப்பட்டாலும் அவற்றுள் மூன்று பிரிவுகள் முக்கியமானவை.

1. ரோமன் கத்தோலிக் சுழஅயn ஊயவாழடiஉ

2. புரோடஸ்டன்ட் Pசழவநவெயவெ

3. ஆர்தோடக்ஸ் ழுசவாழனழஒ

இவற்றுள் மிகப் பெரிய பிரிவான ரோமன் கத்தோலிக்கைச் சேர்ந்தவன் நான். கிறிஸ்துவர்களால் மிகவும் கண்ணியமாகக் கருதப்படும் பிரிவு அது. இம்மூன்றைப் பற்றியும் சுருங்கக் காண்போம்.

1. சோமன் கத்தோலிக் முக்கடவுட் கொள்கையை (வுசinவைல) அல்லாஹுத்தஆலா, அல்லாஹ்வின் மகனான ஈஸா (அலை) (நவூதுபில்லாஹ்) மற்றும் ரூஹுல்குத்ஸ் (பரிசுத்த ஆவி) இப்பிரிவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

2. புரோடஸ்டன்டுகளும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேவகுமாரன் என்றே கருதுகிறனர்.

3. ஆர்த்தோடெக்ஸ் இப்பிரிவினர் ஈஸாவையே கடவுளாக கருதுகிறனர். அதாவது கடவுள் கர்த்தரே மனித உருவில் அவதரித்தார் என்பது இவர்களின் கொள்கை!.

இவை தவிர, ஈஸா அலைஹிஸ்ஸலாம் சிலுவையில் அறையப்பட்டது, இறுதித் தீர்ப்பு நாள் போன்றன குறித்தும் இப்பிரிவுகளிடையே கொள்கை வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, ஈஸா அலைஹிஸ்ஸலாம் உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் சிலுவையில் அறையப்பட்டுவிட்டார் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் கருதுகின்றர். நம்முடைய பாவங்களுக்காகத் தான் இயேசு நாதர் உயிர் நீத்தார் என்பதால் மறுமையில் கிறிஸ்துவர்களுக்கு கேள்விகணக்கு விசாரணையே கிடையாது என்பது இவர்களது கொள்கை. ஆகையால், சாவதற்கு முன்பு வரை யாரேனும் ஒரு கிறிஸ்துவர் தன்னுடைய பாவங்களை மன்னிப்பு கேட்டு போக்கிக் கொள்ளவில்லையெனில் அவர் கண்டிப்பாக மறுமையில் விசாரிக்கப்படுவார். மார்க்க வழிகாட்டிகளும் மதகுருமார்களும் ஈஸா (அலை)வின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களைக் கொண்டு மன்னிப்பைத் தேடிக் கொள்ளலாம். அதே சமயம், புரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்கள், இயேசு அலைஹிஸ்ஸலாம் வெறும் உடல் அளவில் தாம் சிலுவையில் அறையப்பட்டார் என்று நம்புகிறார்கள். ஆன்ம வடிவில் அவர் இன்றும் உயிரோடு உள்ளார். தம்மைப் பின்பற்றுபவர் களுக்கு வழிகாட்டுவதற்காக அவர்க்ளிடையே ஜீவித்து வருகிறார். இறுதித் தீர்ப்புநாள் ஏற்படும் வரை அவர் இவ்வாறு இருந்து வருவார் என்பது இவர்களுடைய நம்பிக்கை!.

இவை தவிர இப்பிரிவுகளிடையே வேறேதும் பெரிய கருத்து முரண்பாடுகள் இல்லை. பிரச்சார மெஷினரிப் பணிகளைப் பொறுத்த வரை இம்மூன்றும் இணைந்தே செயற்படுகின்றன. கிறிஸ்துவ மதத்தில் மெஷினரிப் பணிகளுக்கு தனிமரியாதையும் சிறப்பும் உண்டு. எல்லா கிறிஸ்துவர்களும் இதில் முடிந்தளவு பங்கு பெறுகிறார்கள். அதனால் பெரும் நன்மை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மதப் பிரச்சாரப் பணிகளுக்காக தமது செல்வத்தை செலவிடுவது கடமை என்று கருதுகிறார்கள். அதற்காக நிதி வழங்குவதை பெரும் பாக்கியம் என்றே எண்ணுகிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்துவரும் மிஷினரிப் பணிகளுக்காக பணம் திரட்டியே ஆக வேண்டும். தம்முடைய மதத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கிறிஸ்துவனும் நினைக்கிறான். அவனைப் பொறுத்தவரை அது மிகுந்த நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய காரியம்!

ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் மூன்று முறை ஞானஸ்நானம் செய்தேயாக வேண்டும். புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்தபின் ஐந்து, ஆறு வயதில் முதல் முறையாக ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது. குற்றங்கள் புரியத் தொடங்கும் வாலிபப்பருவத்தில் ஒருமுறை செய்யப்படுகின்றது. எல்லாக் குற்றங்களிலிருந்தும் மன்னிப்பு பெற்ற பின் மரணத்திற்கு முன் ஒரு முறைசெய்யப்படுகின்றது. இவை தவிர ஒரு மனிதன் பெரும் பாவம் ஏதும் செய்து விட்டாலும் மதகுரு அவனுக்கு ஞானஸ்நானம் செய்விக்கிறார். ஞானஸ்நானம் எப்படி செய்விக்கப்படுகின்றது? என்றால், சம்பந்தப்பட்டவரை கடலில் இடுப்பளவு நீரில் நிற்க வைத்து மதகுருவானவர் ஜெபம் செய்தவாறே தன் இருகைகளாலாலும் நீரை அள்ளி, அள்ளி அவர் அவர் தலையில் ஊற்றிக் கொண்டேயிருப்பார். ஒரு வேளை அருகில் கடலே இல்லையென்றால் ஏதேனும் ஒரு நீரோடையில், ஓடுகின்ற நீரில் ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது!.