தற்கொலை!!

மரணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல

வாழ நினைத்தால் வாழலாம். பூமியில் எத்தனையோ வழிகள். வுhழ்க்கை என்பது இன்பமும் நிறைந்தது. பூமியில் மேடு பள்ளம் உண்டு. பூமியில் மேடு இருக்கக் கூடாது பள்ளம் மட்டும் போதும். அதைப் போன்று பூமி முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைக்க முடியுமா? நம் வாழ்க்கையில் பல பிரச்னைகளைச் சந்திக்கும் போது தோல்வி கண்டு துவண்டு தற்கொலை செய்வது, நிரந்தரத் தீர்வு என்று நினைக்காதீர்கள். தற்கொலை செய்வதைப் பற்றி இறைவன் வன்மையாகக் கண்டிக்கின்றான்.


உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். அல்குர்ஆன் 4: 29)

நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைபிடியுங்கள். இன்னல்களைச் சகித்துக் கொள்ளுங்கள் அல்குர்ஆன் : 3:200


தோல்வியைக் கண்டு புறமுதுகிட்டு ஓடக் கூடாது. தோல்வியே வெற்றியின் முதல்படி. பலருடைய வெற்றியில் பின்னால் தோல்வியடைந்து பின் அதற்கான முயற்சி எடுத்து வெற்றி கண்டவர்களாகத் தான் இருப்பார்கள்.

நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய வாய்ப்பே இல்லாமல் போய் விடும். துன்பம் என்பது நிரந்தரம் அல்ல. அது பாலத்தின் அடியில் ஓடும் நீர் போன்று மறைந்து விடும். துன்பம் நிரந்தரம் இல்லை. இறைவன் தன் திருமறையில் கூறிக் காட்டுகின்றான் :

நிச்சயமாகத் துன்பத்தில் இன்பம் இருக்கின்றது. அல்குர்ஆன் 94:4-5


உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை. பிரச்னை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்னைகள் கண்டு தற்கொலை செய்தால் வீடே உலகில் இருக்காது. புதைகுழி தான் மிஞ்சி தான் இருக்கும். முனிதன் ஒருவனும் உலகில் வாழ மாட்டார்கள். சொல்வது பாதி சொல்லாதது மீதி என்ற அடிப்படையில் உள்ளம் ஆறதலும், உதடுகள் சிரிக்கட்டுமே! என்று தான் வாழ்கின்றார்கள். இவ்வாறு வாழ்வதால் உலகில் இன்பத்தையும் இறைவனின் அன்பையும் பெருகின்றார்கள். நபி (ஸல்) கூறுகின்றார்கள் :

அல்லாஹ் எவருக்கு நல்லதை நாடுகின்றானோ அவரை அவன் சோதிக்கின்றான்.

அறிவிப்பவர் அபூஹுரைரா : ஆதாரம் புகாரி.

ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம் நோய் கவலை நோவினை துக்கம், அவரது காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை வரை அவை அனைத்தையும் கொண்டு அவரது பிழைகளை அல்லாஹ் அழிக்காமல் விடுவதில்லை. அறிவிப்பவர் அபூஹுரைரா : ஆதாரம் புகாரி.

இறைவன் நம்மை சோதனை மூலம் விரும்புகின்றான் என்று நினைத்தால் நம் கஷ்டம் பெரிதாகத் தெரியாது. நிலையில் இல்லா உலகில் நிரந்தரம் இல்லாத விசயத்திற்கு கவலைப்பட்டு உயிரை விட முடிவு செய்யாதீர்கள். கவலை என்பது நிரந்தரம் இல்லை. அது ஒரு கானல் நீர் போன்று மறைந்து விடும். ஒரு கவலையோடு இருந்தால் வேறு ஒரு பிரச்னை வந்தால் அந்தக் கவலை மறைந்து விடும். மறக்க முடியாத கவலை உண்டு. அதற்கு தற்கொலை தான் அறுமருந்து என்று நினைக்காதீர்கள். மேலும் சாவு 100 சாவு எப்பொழுது இறந்தாலும் என்ன இந்தப் பிரச்னையுடன் போராடுவதை விட இறந்து விடுவதே மேல் என்று நினைக்காதீர்கள். இறப்பு இயற்கையாக நடக்க வேண்டும். நீங்களே ஏற்படுத்திக் கொண்டால் ஏற்படும் விளைவுகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

யார் மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நிரந்தர நரகவாதியாக்கப்பட்டு, நிரந்தரமாக நரகத்தில் விழுந்து வேதனை பெற்றுக் கொண்டிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றாரோ அவர் நிரந்தர நரகவாதியாக்கப்பட்டு விஷம் அருந்திக் கொண்டே வேதனை பெற்றுக் கொண்டே இருப்பார். யார் ஆயதத்தின் மூலம் தற்கொலை செய்கின்றாரோ அவர் நரகத்தில் நிரந்தரமாக்கப்பட்டு, நிரந்தரமாகத் தன் கையால் ஆயதத்தை வைத்துக் கொண்டே தனது வயிற்றில் குத்தி வேதனை பெற்றுக் கொண்டிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா : ஆதாரம் புகாரி.

இறைவன் தண்டனையையும் நீங்கள் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டீர்களோ அவ்வாறு நீங்கள் அதே தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டியது தான். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை போகாமல் நடந்து கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி செலவு செய்து தற்கொலை செய்வது பெற்றோர் பிள்ளையை அசிங்கமாக கெட்ட வார்த்தையில் திட்டுவது, மற்றவர் முன்னால் கேவலப்படுத்துவது, வரதட்சணைக் கொடுமை இது போன்ற செயலை விட்டும் தடுத்துக் கொள்ள வேண்டும். சுpன்னப்பிரச்னைக்காக தற்கொலை செய்து கொண்டு விட்டால் இந்த உலக வாழ்வில் பிரச்னை தீர்ந்து விட்டது என்று நினைக்காதீர்கள். இஸ்லாத்தை ஏற்று இஸ்லாம் தற்கொலை பற்றி என்ன சொல்கிறதோ அதை அறிந்திருந்தால் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இஸ்லாத்ததைப் பற்றி அறியாத விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் தன் திருமறையில் என்ன கூறியுள்ளான் என அறியாதவர்களே, இறைவன் தன் திருமறையில் கூறிக காட்டுகின்றான், நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)


தற்கொலை எண்ணங்கள் அதிகம் உள்ளவர்களுக்கு ஆலொசனை மருத்துவம் செய்து கொள்ள சிகிச்சை தரும் மையங்கள் உள்ளன. மையங்கள் வெரும் அட்வைஸ் - மருந்து வைத்து மனிதனின் மனதை மாற்றி விட முடியாது. இறைவனைப் பற்றி பயமும், மறுமையில் நன்மைகள் பற்றி விளங்கினால் அவர்கள் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு விடுவார்கள். தற்கொலை செய்வது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை தற்கொலை எண்ணமுடையவர்கள் அறிந்து பிறருக்கு புத்திமதி கூறுவார்கள்.

பெங்களூரில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 1997 முதல் 1999 வரையில் பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள 18 வயதிலிருந்து 35 வரையில் புள்ளி விபரம் 1710. பெங்களூரில் மட்டும். இந்த உலகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எவ்வளவோ?!

தற்கொலை போன்ற செயலை விட்டும் நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக! ஆமீன்!!