ஐரோப்பாவின் மிகப்பெரிய இதய நோய் கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரபல டாக்டர். இதய நோயால் மரணம் - தினமலர்
வியன்னா ( ஆஸ்திரியா ) : சுமார் 25 ஆயிரம் பிரபல இதய நோய் சிறப்பு டாக்டர்கள் அருகில் இருந்தும், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இதய நோய் சிறப்பு டாக்டரை காப்பாற்ற முடியவில்லை. ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த இதய நோய் கருத்தரங்களில் ஐரோப்பாவை சேர்ந்த சுமார் 25 ஆயிரம் சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் ஒன்று முதல் 5 வரை நடக்கும் அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இத்தாலியை சேர்ந்த 46 வயது பெண் கார்டியாலஜிஸ்ட் ஒருவரும் வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போன அவருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் சிகிச்சை அளித்து அவரை ஒரளவு சகஜநிலைக்கு கொண்டு வந்தனர்.
பின் அவசரம் அவசரமாக அவரை வியன்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது நிலை மீண்டும் மோசமாகி, பின்னர் இறந்து விட்டார். 25 ஆயிரம் சிறப்பு கார்டியாலாஜிஸ்ட்கள் கூடி இருந்தும், இன்னொரு கார்டியாலாஜிஸ்ட்டையே காப்பாற்ற முடியாமல் போனது.''நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல் குர்ஆன் 4:78)
எங்கிருந்தாலும் உனக்கு மரணம் வரும்!!
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் அத்தாட்சிகள், செய்தி, மரணம்