விசுவாசிகளின் வெற்றியின் இரகசியங்களில் முக்கியமானது அவர்களிடையே காணப்படும் சகோதர உணர்வும் உறுதியுமாகும். ஓற்றுமையின் முக்கியத்துவத்தை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது..எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்)
நேசிக்கின்றான். ( ஸூரத்துஸ் ஸஃப்ஃபு : 4 )
இந்த அறிக்கையோ அல்லது நடத்தையோ இத்தகைய நெருங்கிய சகோதரத்துவத்தை குழைப்பதாக இருந்தால் அது மார்க்கத்திற்கு எதிரானதாகவே கருதப்படும். இந்த அச்சுறுத்தலை பற்றி குர்ஆனில் அல்லாஹ் கூறும்போதுஇன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்¢ (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்¢ உங்கள்
பலம் குன்றிவிடும்¢ (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். ( ஸூரத்துல் அன்ஃபால் : 46 )
இருப்பினும் உண்மையான விசுவாசி அவரது சகோதரர்களின் மனதை புண்படுத்தும் சண்டைகளிலோ அல்லது சொற்களையோ விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களிடைய நட்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். இதை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ்
செய்வான்¢ நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான். ( பனீ இஸ்ராயீல் : 53 )
ஒரு விடயத்தில் ஒரு விசுவாசியின் கருத்து அவரது சகோதரரின் கருத்திற்கு மாற்றமாக இருந்தால் அவர் கண்ணியமான முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும். அவை 'கருத்து பரிமாற்றமாக' இருக்க வேண்டுமே தவிர 'விவாதமாக' மாறிவிட கூடாது. இரண்டு விசுவாசிகளிடைய சண்டை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே¢ ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்¢ இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (ஸூரத்துல் ஹுஜுராத்: 10 )
குழப்பம் இருத்தல் கூடாது
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் இஸ்லாம், குழப்பம், முஸ்லிம், ஹாரூன் யஹ்யா