நிராகரிப்பாளர்களுக்காக நரகம் தயாராக இருக்கிறது

என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும். இன்னும் அவனுக்கு அதிகமான பொருளையும் கொடுத்தேன். அவனுக்கு புதல்வர்களையும் (கொடுத்தேன்).

இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன். பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.

அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு
முரண்பட்டவனாகவே இருக்கின்றான். விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன். நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான். அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்? பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்? பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான். பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான்¢ இன்னும் (முகஞ்) சுளித்தான்.

அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்¢ இன்னும் பெருமை கொண்டான். அப்பால் அவன் கூறினான்:
'இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றிவேறில்லை.

'இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை' (என்றும் கூறினான்.) அவனை நான் 'ஸகர்' (என்னும்) நரகில் புகச் செய்வேன். 'ஸகர்' என்னவென்பதை உமக்கு எப்படி தெரியும்? அது (எவரையும்) மிச்சம் வைக்காது¢ விட்டு விடவும் செய்யாது. (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும். (ஸூறா அல்-முத்தசிர் : 11 - 29 )



சுவர்க்கம் எந்தளவிற்கு அழகாலும் அருளாலும் சூழப்பட்டுள்ளதோ அந்தளவிற்கு நரகம் அருவறுப்பாலும் சித்திரவதையாலும் நிறைந்து காணப்படும். தங்களை படைத்த இறைவனை மறுத்தவர்களுக்கு முடிவில்லா வேதனை நரகத்தில் காத்திருக்கிறது. பின்வரும் வசனம் நரகத்திற்கானவர்களை பற்றி கூறுகிறது.

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, விசுவாசிகள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்¢ அதுவோ,
சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (ஸூறா அந் நிசா : 115)



(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை
விட்டுவிடும்.

எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த
செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும்.

அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை¢ (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும்,

அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது¢ இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்¢ இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும்
துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (ஸூறா அல்-அன்ஆம் : 70)



ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்¢ மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்¢ இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ¢ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக்
கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) 'இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்' (என்று கூறப்படும்). (ஸூறா அல்-தவ்பா : 34 -35)


.................

'அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்' என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது¢ அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும். (ஸூறா அல்-பகறா : 206)



மார்கத்தின் பக்கம் அவர்கள் அழைக்கப்பட்ட போது அதை நிராகரித்தது நிராகரிப்பாளர்களின் பொதுவான தன்மையாக இருந்தது.

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்¢ பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.

மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்¢ (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்¢ இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்¢ அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்குரிய கூலியை முழுமையாகப் பெறுவான்¢ மேலும், அவன், அவர்கள் செய்தவற்றை நன்கறிந்தவன். (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்¢

அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்¢ அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: 'உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?' என்று கேட்பார்கள்¢

(இதற்கு அவர்கள்) 'ஆம் (வந்தார்கள்)' என்று கூறுவார்கள்¢ எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. 'நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்¢ என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்' என்று (அவர்களுக்குக்) கூறப்படும்¢ பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (ஸூறா அல்-ஜுமர் : 68-72)

உலகில் வாழ்ந்த போது இறைவனின் தண்டனைகளை பற்றி நரகவாசிகள் கவலையற்றவர்களாக இருந்தார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அவ்வாறு அவர்களுக்காக நகரம் தயார்படுத்தப்பட்டிருந்தால் அதில் அவர்கள் சில குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே தங்கி பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டு சுவர்கத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர்கள் நினைத்து கொண்டிருந்தனர். அறிவற்ற சமுதாய மக்களிடம் இந்த சிந்தனை காணப்படுகிறது. அவர்கள் அவர்களது பாவங்களுக்காக தண்டிக்கப்படுவார்களாயின் நரகத்தில் சில காலம் மட்டும் தங்கி உலகில் அவர்கள் செய்த பாவங்களுக்காக தண்டிக்கப்பட்ட பிறகு சுவர்க்கம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று நினைக்கறார்கள். ஆனால் குர்ஆனில் நரகத்தின் வேதனை முடிவற்றது என்றும் நிராகரிப்பாளர்கள் சுவர்க்கம் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறுகிறது.

'ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது' என்று அவர்கள் கூறுகிறார்கள். 'அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்¢ அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?' என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும். (ஸூறா அல்-பகறா : 80)

.................

வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்¢ ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர். இதற்குக் காரணம் : எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்¢ (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது. சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (ஸூறா ஆல-இம்றான் : 23-25)

குர்ஆனின் பல வசனங்கள் நகரத்தின் வேதனையை பற்றி கூறுகிறது.

(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்)¢ அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்¢ தன் மக்களையும்- தன் மனைவியையும், தன் சகோதரனையும்- அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்- இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). அவ்வாறு (ஆவது) இல்லை¢ ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும். அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும். (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும். அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்) (ஸூறா அல்-மஆரிஜ் : 10-18;)

.................

அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள். (ஸூறா அல்-அன்பியா : 100)

.................

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்¢ எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது¢ ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்¢ எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்¢ அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (ஸூறா இபுறாஹிம் : 16-17)

.................

இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர். அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்¢ இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும (ஸூறா இபுறாஹிம் : 49-50)

.................

நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). பாவிகளுக்குரிய உணவு¢ அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்¢ வயிறுகளில் அது கொதிக்கும். வெந்நீர் கொதிப்பதைப் போல். 'அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள். 'பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். 'நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்! (ஸூறா அத்-துகான் : 43-49)

சுவர்க்கம் நரகம் பற்றிய அனதை;து வர்ணனைகளும் உண்மையாகும். உலகை படைத்து அதில் உயிர்களையும் படைத்த இறைவன் அதை போன்று மறுமையையும் படைப்பான் என்று குர்ஆன் கூறுகிறது.

(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்¢ அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்¢ அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: 'உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?' என்று கேட்பார்கள்¢ (இதற்கு அவர்கள்) 'ஆம் (வந்தார்கள்)' என்று கூறுவார்கள்¢ எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது. (ஸூறா அல்-ஜுமர் : 71)

அழைப்பை நிராகரித்தவர்களுக்கு கடுமையான வேதனை காத்திருக்கிறது.

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை¢ அவன் தொழவுமில்லை. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். (ஸூறா அல்-கியாமா : 31-35)