குடிக்க நீரில்லை இங்கு
மழையானாலும், வெயிலானாலும்
குந்த வைக்க குடிசையில்லா
குடிமக்களோ வீதிகளில் வாசம்
எல்லோர்க்கும் உணவில்லை இங்கு
எத்தனையோ பட்டினிச் சாவுகள் இங்கு
எல்லார்க்கும் கல்வியில்லை இங்கு
எத்தனையோ குழந்தைகள் உழைப்பவர்களாய்
இந்த கவலை யார்க்குமில்லை
மசூதிகளை தகர்த்து கோயிலாக்கும்
பிரிவினைவாத அரசியல்வாதிகள் நாட்டை
பிரித்துவிடும் மதவாத சூழ்ச்சிகளில்
பந்நூறு ஆண்டின் பாபர் மசூதியை
பட்டாளத்துடன் தரைமட்டமாக்கிய
தண்டனையின் குற்றவாளிகள்
இன்று அரியனையில் - ஆட்சி பீடத்தில்
கோடிக் கோடியாய் கோயில்கள் இருக்க
மசூதியை இடித்து விட்டு - தனக்காக
கோயில் ஒன்று கேட்டது ராமரா
மதிகெட்ட அரசியல் பண்ணும்
மானிடன் செய்யும் பிரிவுச் சதியிது
மதத்தை அரசியலாக்கி
ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டு
சுயலாபம் காணத் தேடும்
ஆட்சி மோகத்திற்கு
மனிதத்தை பலி கொடுக்கும்
அரசியல்வாதிகளின் சூழ்ச்சி இது
மக்கள் புரிந்து கொள்ளுங்கள்
மானிடம் காக்க குரல் கொடுங்கள்
உன் வீட்டை நான் இடித்து
என் வீடு கட்டிக் கொண்டால்
நீ மௌனமாய் இருப்பாயா
நாங்கள் இருக்கிறோம்
நீதியின் தீர்ப்பு நோக்கி
நீயும் இந்தியன்தான் என்றால்
நீதியை ஒப்புக்கொள்
அறிவியல் முன்னேற்றம் பெருக்கு
அரசின் சாதனைகளாய்
மக்களைப் பிரிக்கும் மதவாத
அழிவுப்பாதையை விலக்கு
சாலைகள் செம்மையாக்கு
அது நாட்டின் முதுகெலும்பு
சாதிச் சண்டைகள் அகற்று -அது
நாட்டின் நலனுக்கு தெம்பு
கல்விச் சாலைகள் மேம்படுத்து
காலம் உன் பெயர் சொல்லும்
காட்டு மிராண்டிகளாய் - மக்களிடம்
மத வெறியைத் தூண்டாதே - நாளை
மனிதம் உன்னை மண்ணிக்காது
மதம் பிடித்த அரசியல் வாதியே
மதவாதம் தூண்டாதே
மக்கள் அமைதியாய் வாழட்டும்
மத நல்லிணக்கம்
வாhத்தையில் வேண்டாம் - நம்
வாழ்க்கையில் ஆக்குவோம்
நன்றி : தமிழ்இஸ்லாம்