குடும்ப கட்டுப்பாட்டை முஸ்லிம்கள் ஏற்காதது ஏன்?

கேள்வி : குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முஸ்லிம்கள் ஏற்க முன் வராதது ஏன்?

பதில் : பிறப்பு விகிதம் குறைந்தாலேயொழிய இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இல்லை. தனிமனித சராசரி வருமானமும் உற்பத்தியும் மக்கள் தொகை பெருகும் விகிதத்தில் வளராததால் வளர்ச்சி என்பதே கிட்டத்தட்ட இல்லாத நிலை. இப்படி இருக்க மக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஏன் அவசியமானதாக நினைக்கிறார்கள். அதற்காக குழந்தையே வேண்டாம் என்று கூறவில்லை. கட்டுப்படுத்தி கொள்ளத்தானே கூறுகிறோம் - என்று கூறி அதற்காக பெரும் அளவில் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் முடுக்கிவிடப்படுகிறது.

'குழந்தைப் பேற்றை கட்டுப்படுத்துங்கள். அடிக்கடி மகப்பேறு அன்னைக்கு ஆபத்து' என்று கூறிய அரசு விளம்பரப்பலகைகள் பின் ' நாம் இருவர் நமக்கு இருவர்' என்றது. பிறகோ 'நாமிருவர் நமக்கொருவர்' என்றது. இப்போதோ'நாமே குழந்தைகள் நமக்கேன் குழந்தைகள்' என்று கூறத் துவங்கி விட்டது.

குழந்தைப் பேற்றை கட்டுப்படுத்துங்கள் என்று கூறியவர்கள் இப்போது குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். குழந்தையே வேண்டாம் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தன வாதம். குழந்தை இல்லாத தம்பதிகளின் நிலை எந்த அளவிற்கு பரிதாபமாக உள்ளது என்பதை நிதர்சனமாக காண்கிறோம். குழந்தைகள் மூலமாகப் பெறும் மகிழ்வு இணையற்ற ஒரு மகிழ்வு என்பதை அதை அனுபவித்தவர்கள் அறிவர். இத்தகைய மகிழ்வுக்குரிய ஒன்றை வேண்டாம் என்று தள்ளும்படி உபதேசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின் தனக்குரிய உணவுத் தேவையைக் கூட தாமே சம்பாதித்துப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிறரை உணவுக்காக நம்பி இருக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு ஏதேனும் மாயாஜாலத்தின் மூலம் அமுலாக்கப்பட்டால் உடல் பலகீனமானவன்களுக்கு சாப்பாடு போட யாருமே இல்லாமல் போய்விடுவார்கள். பெற்றோர்கள் தம் வயதான காலத்தில் உயிர் பிழைக்க வேறுவழியில்லாததால் குழந்தைகளை மட்டுமே நம்ப வேண்டியிருக்கிறது. ஆயுள் பாதுகாப்பு, சேமிப்பு, நிலையான சொத்து, ஓய்வூதியம், பிற வழியிலான வருமானம் ஆகியவை அதிகபட்சம் ஐந்து சதவிகித மக்களைக் கூட சென்றடையாத நம் நாட்டில் குழந்தைகள் பெறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்பது எத்தகை விபரீத பிரச்சாரம். அப்படியானால் வயதானவர்களை பட்டினிக்கிடந்து சாகச் கொல்கின்றார்களா?

உலகில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமாய் 20 வயதுக்குட்பட்டோர், 20-65 வயது கொண்டோர், 65 வது தாண்டியோர் என்று மக்கள் தொகை மூன்று பிரிவாய் பிரிக்கப்படும். இதில் 20-65 வயது கொண்ட இரண்டாம் பிரிவு உழைக்கும் வயது மக்கள்தொகை (றுழசமiபெ யுபந Pழிரடயவழைளெ) எனப்படும்.

65 வயதுக்கு மேற்பட்ட மூன்றாம் பிரிவினர் அதிகரித்து இரண்டாம் பிரிவினர் குறைந்து வருவதை விவாதிக்க சமீபத்தில் ஐ.நா.மன்றத்தில் ஒரு மாநாடு நடந்தது. பல நாடுகளைச் சேர்ந்த அறிவியல் சமூக பொருளாதார வல்லுநர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில்

'80 வயது தாண்டிய முதியோர் எண்ணிக்கை பெருகுவதால் அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் குடும்பப் பொறுப்புகள் நலிந்தோர் நலன்கள் மற்றும் மருத்துவ வசதிகள் என்ற பல திட்டங்கள் தீட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன. ஒரு குடும்பம்! ஒரு குழந்தை! என்று சீனாவில் கடைபிடிக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம், முதியோர் தொகை அதிகரித்து இளையோர் தொகை குறைய ஒரு காரணம்' என்று மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

1979-ல் சீனா அரசு தன் நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தை திணித்தது. இதனை மீறியவர்களின் குடும்பத்துக்கு வீட்டுவசதி, இதர சலுகைகளை சீன அரசு தர மறுத்தது. இதனால் நடந்தது என்ன? பிறந்த ஒரு குழந்தையும் பெண்ணாக இருந்தால் அந்த குழந்தையை கொல்வதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டியதில்லை. பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை கொல்கின்ற கொடூரமான காரியங்களைச் செய்யும் பெற்றோர்கள் அதை நிறுத்த வேண்டும் இல்லையேல் அது குடும்ப நலவளர்ச்சித் துறையை பெரிதும் பாதிக்கும் என்று யுடுடு ஊர்ஐNயு றுழுஆநுNளு குநுனுநுசுயுவுஐழுN பிரச்சாரம் செய்தது. (Pசழடிழவாயயெஅ றுநநமடல 19.3.83)

1975-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்து போது நெருக்கடி நிலை (மிசா) சட்டம் அறிவிக்கப்பட்டு குடும்பக்கட்டுப்பாடுமுறை கட்டாயமாக ஆக்கப்பட்டபோது பலர் பாதிப்படைந்தனர். இதனால் மிகப் பெரும்பான்மையினர் இந்திராகாந்தியை தோற்கடிக்கவும் செய்தனர்.

ராஜஸ்தான் போன்ற இடங்களில் கடந்த நூற்றாண்டுவரை மக்கள்தொகைக் கட்டுப்பாடு, பெண் சிசுக்கொலை போன்றவை கொடூரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது நம்மில் பலரும் கேட்க விரும்பாத அதிர்ச்சி தரும் செய்தி.

'500 செலவழித்து 5 லட்சம் சேமியுங்கள்' என்னும் விளம்பரம் பலகையை ஆங்காங்கே நாம் காணலாம். 500 செலவு செய்து ளுஉயn செய்து பாருங்கள். கர்ப்பப்பையிலிருக்கும் சிசு பெண் சிசுவாக இருந்தால் கலைத்துவிடலாம். இதனால் எதிர்காலத்தில் செய்யும் 5 லட்சம் திருமணச் செலவை தவிர்க்கலாம் என்கிறது அவ்விளம்பரம்.

குழந்தையை பெற்றெடுத்தப் பிறகு அதை கொல்ல மனமின்றி அனாதை இல்லங்கள் முன்போ பொது இடங்களிலோ வீசிவிட்டுப் போவதையும் அப்போதுக்கப்போது அறிகிறோம்.

ஒரு குழந்தை போது என்ற நிரந்தர கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் அந்த ஒரு குழந்தையையும் நோயின் காரணமாகவோ, விபத்தின் காரணமாகவோ இழக்க நேரிட்டால் பெற்றோர்களின் நிலை என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். இனி குழந்தைப் பெற்றுக் கொள்ள வழியே இல்லை. வாரிசும் இல்லை என்று ஏங்கி மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

சமூக நலம் என்று கூறி தனி மனிதர்களுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய குடும்பக்கட்டுப்பாடு திட்டம் அவசியம் தானதா என்பதை அதன் ஆதரவாளர்கள் உணர வேண்டும்.

பெருகிவரும் நகர ஜனநெருக்கடியை குறைக்க பொருளாதார உற்பத்தி குறைவை சமாளிக்க மக்கள் தொகை குறைப்பு தான் தீர்வு என்று சிந்திப்பதை விட பொருளாதார உற்பத்தியை பெருக்குவதற்கான ஆய்வை மேற்கொள்வதே சிறந்த வழிமுறையாகும்.

பரந்த இந்த பூமியில் மனிதர்களின் காலடிப்படாத வாழத்தகுந்த இடங்கள் ஏராளம் உண்டு. மனிதர்கள் ஒரிடத்தில் குவிந்து ஜனநெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் விதமான புறநகர்பகுதிகளிலும், கிராமங்களிலும் மக்கள் வாழ்வதற்குரிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். நீதிமன்றம், கல்லூரி, அரசு அலுவலகங்களை புறநகர்ப் பகுதிகளில் அமைக்கலாம்.

நெருக்கடி சிக்கல் ஏற்படும் போது தான் மனித்ன அதிகமாக சிந்திக்கிறான். அன்று குடிசைகளிலும், சிறு சிறு கட்டிடங்களிலும் வழ்ந்து வந்தவன் இன்று பல அடுக்குமாடிகளை எழுப்பும் வகையில் வளர்ச்சியடைந்திருக்கிறான். பயிர் செய்தால் 6 அல்லது 8 மாதத்தில் அறுவடை செய்யும் நிலை மாறி 40 அல்லது 30 நாட்களில் அறுவடை பயிர்வகைகளைக் கண்டுபிடித்துள்ளான். கோழி குஞ்சு பொறிக்க 21 நாட்கள் எடுத்துக் கொண்டது அந்த காலமாகிவிட்டது. ஒர சில மணி நேரத்தலே கோடிக்கணக்கான குஞ்சுகள் பொறிக்கும். வழிவகைகளை மனிதன் கண்டுபிடித்துள்ளான்.

உற்பத்தியை பெருக்கும் அறிவை மனிதன் பெற்றிருந்தும் வறுமை தாண்டவமாடுகிறது என்றால் அதற்கு முயற்சியின்மையும். விநியோகமும் சரியில்லாததேயாகும். பயிர் செய்ய நிலமிருக்கிறது. உற்பத்தியை பெருக்க உழைக்க மனிதர்களை தான் இல்லை. அனைவரும் உழைத்து உண்பது என்ற நிலை ஏற்படுமானால் உற்பத்தியாகும் உணவi மக்கள் உண்டு போக ஏராளம் ஏஞ்சவே செய்யும். அதற்கான வழிவகையை செய்வதும் ஆர்வமூட்டும் செயலில் அரசு ஈடுபடுவதே சிறந்தததே தவிர ஜனத்தொகையை கட்டுப்படுத்துவது தான் தீர்வு என்னும் வாதம் அறிவுடைமையாகாது.

இன்றிருக்கும் ஜனத்தொகையில் பாதிதான் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது எனினும் அப்போதும் வறுமை இருக்கத்தான் செய்தது. இன்று உலகின் ஒரு பாகத்தினர் வறுமையிலும், மற்றொரு பாகத்தினர் வளமையிலும் இருப்பதைக் காண்கிறோம். தம் தேவைக்கு போக எஞ்சிய உணவை கடலில் கொட்டும் நாடுகளையும் காண்கிறோம். மனித நேயமும், சரியான விநியோகமும் இல்லாததே வறுமைக்கு ஒரு காரணமே தவிர ஜனத்தொகைப் பெருக்கமல்ல. உணவின்மை, இடமின்மை தான் காரணம் என்று கூறி ஜனத்தொகையை கட்டுப்படுத்தக் கூறுவது அறிவுடைமையல்ல. இறைவனுக்கு ஏற்புடையதுமல்ல.


வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் (6:151) அவர்களைக் கொலை செய்வது (கடும்) பாவமாகும். (17:31) என்று இறைவன் எச்சரிக்கிறான். எனவே குடும்பக்கட்டுப்பாடு திட்டத்திற்கு முஸ்லிம்கள் உடன்படுவதில்லை