நீங்கள் வருந்துவதற்க முன்...

இந்த உலகத்தில் ஒருவர் பல விதமான உடல் மற்றும் உளரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார். அத்தகைய சந்தர்பங்களில் அவருக்கு ஏற்படும் கடினமான உணர்வுகளை ஏனைய உடல்ரீதியான வேதனைகளுடன் ஒப்பிட முடியாது. மனித ஆன்மாவிற்கு அத்தகைய பெரிய வேதனை தரக்கூடிய உணர்வுகளை கவலை (சுநபசநவ) என்று அழைக்கப்படுகிறது.

கவலையை இரண்டு வகைப்படும். எல்லா மதத்தவர்களுக்கும் ஏற்படும் கவலை மற்றும் ஏக இறைவனை மறுப்பவர்களுக்கு ஏற்படும் கவலை.

ஏக இறைவனை விசுவாசிப்பவர்கள் அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்றும் அவர்களுக்கு ஏற்படும் அனைத்து நன்மை தீமைகளுக்கும் காரணம் இறைவனின் நியதியே என்றும் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். மகிழ்ச்சியான நேரங்களிலும் அல்லது தவறு ஏற்படும் வேளைகளிலும் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருப்பது இவர்களின் முக்கிய பண்பாக இருக்கிறது. தவறு செய்யும் போது விசுவாசி உடனே இறைவன் பக்கம் திரும்பி உண்மையாகவே வருந்தி இறைவனது பாவமன்னிபை எதிர்பார்கிறான். இதனால் அவனுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதில்லை. கவலை விசுவாசிகளை பாவமன்னிப்பு கேட்க தூண்டுவதோடு அவர்களை தூய்மைபடுத்தி அத்தகைய பிழைகள் எதிர்காலத்தில் நிகழாமல் பார்த்து கொள்கிறது. அது அவர்களது பிழைகளை திருத்தி மனசோர்வான அல்லது துன்பமான மனநிலைக்கு செல்லாமல் தடுக்கிறது. மேலும் இந்த கவலை ஒருபோதும் அவர்களது இறை பக்தியை - மத ஆர்வத்தை குறைப்பதில்லை. அதேநேரம் அவர்களை மனசோர்வு அல்லது மனஅழுத்தத்திற்கு கொண்டு செல்வதுமில்லை.

மறுபுறத்தில் ஏக இறைவனை நிராகரிப்பவர்களின் கவவையானது இறைவன் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாத காரணத்தால் அவர்கள் தவறிழைத்தபோதோ அல்லது அவர்களை துன்பம் தொடும்போதோ விரக்தியடைகிறார்கள். அவர்களின் வாழ்நாள் முழுவதும் நான் இவ்வாறு செய்திருக்க கூடாது அல்லது நாம் இவ்வாறு சொல்லியிருக்க கூடாது போன்ற பல வாசகங்களை அடிக்கடி உபயோகிப்பதை காணலாம்.

முக்கியமாக அவர்களுக்கு இதைவிட பெரிய கவலை மறுமையில் காத்திருக்கிறது. இந்த உலகத்தில் தூய மார்கத்திலிருந்து (தீன்) விலகி யாரெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களின் ஒவ்வொரு நிமிடத்தை நினைத்து கவலைப்படுவார்கள். அவர்கள் எச்சரிக்கப்பட்டு நேரான பாதைக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் நேரான பாதையை ஏற்றுகொள்ள போதுமான கால அவகாசம் இருந்தது. இருப்பினும் அவர்கள் எச்சரிக்கப்பட்ட போது அவர்கள் மரணிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மறுமையை அலட்சியம் செய்து அதற்கு செவி சாய்க்கவில்லை. மறுமையில் இந்த உலகத்திற்கு மீண்டும் வந்து அவர்களது பிழைகளை திருத்தி கொள்ள எந்த சந்தர்பமும் கொடுக்கப்பட மாட்டாது. அவர்களது கவலை தோய்ந்த உணர்வுகளை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், 'எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்¢ நாங்கள் விசுவாசிகளாக இருப்போம்' எனக் கூறுவதைக் காண்பீர். (ஸூறா அல்-அன்ஆம் : 27)


மேலும் அவர்கள் கூறுவார்கள்.

'நாங்கள் (நபிகளாரின் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.' (ஸூறா அல்-முல்க் : 10)


நினைவில் வைத்துகொள்ளுங்கள் - மறுமை நாளில் எவருடைய கவலையும் எவரையும் இறைவனது சாபத்திலிருந்து காப்பாற்றாது. தற்போதிருக்கும் நேரத்தை பயன்படுத்தி இறைவனது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வதன் மூலமே இந்த கவலையை தவிர்க்கலாம்.

அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (மறுமை) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது¢ (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது. (ஸூறா அஷ்-ஷுரா : 47)