கேள்வி : ஒருவர் இறைவனையும், மறுமையும் நம்புவதில்லை, அதே சமயம் மது அருந்துவது விபச்சாரம் செய்வது போன்ற கெட்பபழக்கங்களும் இல்லை. யாருக்கும். தீங்கு செய்ததுமில்லை. தன்னால் இயன்றளவு பிறருக்கு உதவி செய்தே வாழ்கிறார். இத்தகையோருக்கு சொர்க்கம் கிடைக்குமா?.
பதில் : இறைவனிலும் மரணத்திறகுப் பிந்தைய வாழ்விலும் நம்பிக்கையில்லாத ஒருவர் தீமையைத் தவிர்பபதும் நன்மையை செய்வதும் சொர்க்கத்தை நோக்கமாக கொண்டு அல்ல என்பது உண்மையே அவர் நன்மைகளைச் செய்வது சமூகத்தில் நற்பெயர் எடுப்பதற்காகவும் புகழடைவதற்குமாகவே இருக்கலாம். அப்படியானால் அவர் எதிபார்க்கும் புகழ் அவருக்கு கிடைக்கவே செய்கிறது. அல்லது மனதிருப்திக்கும் ஆத்மதிருப்திக்கும் வேண்டி நன்மை செய்கிறார், தீமையைக் கைவிடுகிறார் என்றால் அவர் எதிர்பார்க்கும் திருப்தியும் அவருக்கு கிடைக்கவே செய்கிறது.
இறைவனுக்கு அஞ்சியும், மரணத்திற்கும் பிந்தைய வாழ்வில் சொர்க்க வாழ்வை நோக்கமாக கொண்ட அதற்கான கருமங்களைச் செய்த வாழ்பவர்களுக்கே அது வழங்கப்படும்.
எதை விரும்பி அதை அடைவதற்குரிய வழியில் முயல்கின்றவர்களுக்கே அதனை அடைய முடியும் என்பது பொதுவான விதியாகும். ஆனால் இறைவனை மறுமையை நம்பாத குறிப்பிட்ட ஒருவர் சொர்க்கத்திலிருப்பாரா? அல்லது நரகத்திலிருப்பாரா? என்று நம்மால் தீர்மானமாக கூறிட முடியாது. அது இறைவன் நிச்சயிக்கக் கூடியதாகும் எவர் சொர்க்கவாசி எவர் நரகவாசி என்று ஏக இறைவன் மட்டுமே அறிபவனும் தீர்மானிப்பவனுமாவான