காபா- மெக்கா-கருபு்புக் கல்

ஹஜருல் அஸ்வத்


கேள்வி : விக்கிரக ஆராதனையை எதிர்க்கும் முஸ்லிம்கள் காஃபாவிலுள்ள கருப்பக்கல்லை புனிதமாக கருதுவதேன்?

பதில் : காஃபாவிலுள்ள எந்தவொரு கல்லையும் முஸ்லிம்கள் வணங்கவோ, புனிதப்படுத்தவோ செய்வதில்லை. ஹஜ் உம்ரா வணக்க வழிபாட்டின்போது இடையே முஸ்லிம்கள் முத்தமிடும் கல் ஹஜருல் அஸ்வத் ஆகும்.

வரலாற்றில் எந்தவொரு காலகட்டத்திலும் வணக்கத்திற்குறியதகா ஆக்கப்படாத ஒரு கல்லாகும் அது. காஃபாவினுள் 360 சிலைகள் வணக்கத்திற்குரியதாக இருந்த காலகட்டதிலும் கூட ஹஜருல் அஸ்வத் வணக்கத்திற்குரியதாக கருதப்பட்டதுமில்லை ஆக்கப்பட்டதுமில்லை.

உலகத்தில் வணங்கப்படும் எந்தவொரு கல்லும்அதன் உண்மைப் பெயரில் அறியப்படுவதில்லை. சிவலிங்கம் சிமெண்டில் செய்யப்பட்டிருந்தால் சிமண்ட்லிங்கம் என்ற கூறுவார்களா? மண்கொண்டு எசக்கி அம்மன் சிலை உருவாக்கப்பட்டிருந்தால் மண் அம்மன் என்று கூறுவார்களா? மாட்டார்கள். அந்த சிலைகள் எந்த கடவுள் பெயரில் வடித்து வைக்கப்டடள்ளதோ அந்த கடவுள் சிலை என்று தான் கூறுவர்களே தவிர கல்சிலை. மண்சிலை, வெண்கல சிலை என்று கூறுவதில்லை. ஆனால் கஃபாவின் கருப்பு கல்லை. 'ஹஜருல் அஸ்வத்' (ஹஜர் - கல், அஸ்வத் - கருப்பு) என்று தான் அழைக்கப்படுகிறது.

ஹஜருல் அஜ்வத்தை யாராவது புனிதமாக வணக்கத்திற்குரியதாக கருதுவராயின் அவர் உண்மை முஸ்லிம் அல்ல என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.



பின் எதற்காக ஹஜருல் அஸ்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றால் கஃபாவை தவாப் என்னும் வழிபாட்டிற்காக சுற்றி வருவதற்காக ஒரு துவக்க அடையாளமாக கருதப்படுகிறது. ஓட்டப்பந்தயம் வைக்கும் போது துவக்க இட அடையாளத்திறகு ஏதாவது ஒரு அடையாளத்தைக் குறிப்பிடுவது போல கஃபாவை சுற்றிவர ஒரு துவக்க ஆடையாளமாகவே ஹஜருல் அஜ்வத் கருதப்படுகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அந்த கல்லை முத்தமிட்டதால் முஸ்லிம்களும் அதை முத்தமிடுகிறார்கள். உலகத்திலுள்ள பொருள்களிலே சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்டது என்கிற சிறப்பும், நபி (ஸல்) அவர்கள், கஃபா புனர் நிர்மானத்தின் போது அதை தங்கள் கையில் தூக்கிப் பொருத்தினார்கள் என்கிற சிறப்பும் அதற்கு இருக்கிறது. மற்றபடி அந்த கல்லை முத்தமிட வேண்டும் என்கிற கட்டாயக் கடமை ஏதும் இல்லை. நபி (ஸல்) அவர்களின் முகடகியத தோழர்களில் ஒருவரான உமர் (ரலி) அவர்கள் அநத கல்லை முத்தமிட்டு, 'ஏ கருப்புக்கல்லே உனக்கு எந்தவொரு சக்தியும் இல்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டிருக்காவிட்டால் நர்ன உன்னை முத்தமிட்டிருக்கவே மாட்டேன் என்றே கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இந்த முத்தமிடுதலானது ஒரு வகை அன்பினால் இடும் முத்தமேயாகும். அச்சத்துடனோ, பக்தியுடனோ இடும் முத்தம் அல்ல. கணவன் மனைவியை முத்தமிட்டால், பெற்றோர்கள்
குழந்தையை முத்தமிட்டால் அது வணக்கமாக புனிதமாக கருத முடியுமா? அப்படியிருக்க கருப்புக்கல்லை முத்தமிடுவது வணக்கமாக கருதிக் கொள்வது ஏற்புடையதல்ல. இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறும் எவரும் எதுவும் வணக்கத்திற்குரியதல்ல