இணையத்தில் நேரம் செலவிடல்
ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத், இமாம் உமர் இப்னு அப்துல் அஜீஸ் பள்ளி, அல்கோபார்
ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத், இமாம் உமர் இப்னு அப்துல் அஜீஸ் பள்ளி, அல்கோபார்
இணையத்தில் இப்பொழுது அதிகமான நபர்கள் சாட்டிங் குழுமத்தில் இணைவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, இந்த சாட்டிங் குழுவில் இணைபவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தங்களது வழிகாட்டுதல்கள் என்ன?
இன்றைக்கு இணையத்தில் அதிகமாக சாட்டிங் சென்டர்கள் உள்ளன, இவ்வாறான சாட்டிங்கில் ஈடுபடக் கூடியவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், அதனை தொடருங்கள், அதே நேரத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகளையும் மனிதல் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்தளவு இறைநம்பிக்கை உள்ளவர் என்பதையும், நேர்மையாக நடப்பவர் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூயடிவர்களே, அந்த நபர் வாழ்ந்த காலத்தில் எழுதிய எழுத்துக்கள் அவர் மரணமடைந்த பின்பும் நிலைத்திருக்கக் கூடியவைகளாக உள்ளன, எனவே, அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவன்றி, அவனை அந்த நியாயத் தீர்ப்பு நாளில் நல்ல நிலையில் சந்திப்பதற்காக வேண்டி, நல்லது அல்லாத வேறு எதனையும் எழுதாதீர்கள்.
இணையத்தில் சூடு பறக்கும் விவாதங்களாக சென்று கொண்டிருக்கும் தலைப்புகள் பற்றி நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அதனைத் தவிர்த்து, எதில் உங்களுக்கு அறிவு இருக்கின்றதோ அதில் நல்லதை, பயனுள்ள தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து சாட் செய்யுங்கள், அதுவல்லாத பித்அத் (மார்க்கத்தில் புகுத்தப்படக் கூடிய நூதனச் செயல்கள்) பற்றியோ அல்லது தவறான தகவல்கள் பற்றியோ அல்லது இஸ்லாம் தடுத்திருக்கின்றவை பற்றியோ நீங்கள் உரையாடிக் கொள்ள வேண்டாம்.
இன்றைக்கு இஸ்லாமியச் சாயலுடன் இஸ்லாத்திற்குள் புதினங்களை நுழைக்கக் கூடிய இணையத்தளங்கள் மலிந்து காணப்படுகின்றன, அவற்றைப் புறக்கணியுங்கள். ஏனெனில், இஸ்லாத்திற்குள் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும் என்பதே அவர்களது இரத்தத்தில் ஊறிய குணமாகும். எனவே, இஸ்லாத்திற்குப் புறம்பான இணையத்தளங்கள் பற்றி மற்றவர்களுக்கு அறியத் தருவது அனுமதிக்கப்பட்டதல்ல. அத்தகைய இணையத்தளங்களின் பெயர்கள் அழிக்கப்பட வேண்டுமே தவிர, அதனை நாமே பிரபல்யப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.
இன்னும் இஸ்லாத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, அதாவது சுன்னாவையும், பித்அத் களையும் குழப்பிக் கொண்டு இஸ்லாத்திற்குப் புறம்பானவற்றை வெளியிட்டுக் கொண்டிருப்பவர்களின் தவறாக கருத்துக்கள் பரவுவதற்கு வழி ஏற்படுத்தி விடக் கூடாது.
இஸ்லாமிய அறிவைத் தேடுபவர்கள் (ஷரீஆவைக் கற்றுக் கொண்டிருக்கக் கூடிய மாணவர்கள்), இந்த வகையில் சாட்டிங் அறைகளில் விவாதங்கள் செய்து கொண்டிருக்கின்ற சகோதரர்களுக்கு உதவி, அதன் மூலம் இஸ்லாத்தின் புதினங்களை நுழைப்பவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்க உதவுவதும், அதனை மக்கள் மத்தியிலும் பரவலாக்க வேண்டும். ஏனெனில், ஒருவர் எழுதியதில் பித்அத் ஆன விசயங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அதற்கு பத்து நபர் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நபர் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அதனைத் தள்ளுபடி செய்து விடுவார்களாகையினால், பித்அத் பற்றிய எச்சரிக்கைகளைப் பரவலாக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமானது என்னவென்றால், இத்தகைய சாட்டிங் குழுமத்தில் மார்க்க அறிஞர்கள், எழுத்தாளர்கள், இன்னும் இந்தத் துறையில் பிரபலமானவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
இன்னும், ஒரு எழுத்தாளர் நேரடியாக இத்தகைய சாட்டிங் கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில்லை, அவ்வாறு அவர் கலந்து கொள்வது அதிகமான நேர விரயத்தை எடுத்துக் கொள்ளும். எனினும், அவரது நம்பிக்கை உட்பட்ட அவரது மாணவர் ஒருவர் அவரது பிரதிநிதியாகக் கலந்து கொண்டு தகவல்களை வெளியிடுவது சிறந்ததாக இருக்கும்.
நேரத்தை வீணாக்குவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! அதிகமான மாணவர்கள் தங்களது நேரத்தை சாட்டிங் அறைகளிலேயே கழித்துக் கொண்டிருப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு முணகலுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமற்றது.
மேலே நாம் கண்டவாறு பதில் சொல்லிக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல், முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்டுவதற்கும், அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்கும் அதிகமான நேரத்தை ஒதுக்குங்கள்.
இன்னும் நீங்கள் சாட்டிங் அறைகளிலே உட்கார்ந்து கொண்டு, உங்களுக்குப் பரிச்சயப்படாததொரு மிகப் பெரிய கூட்டத்துடன் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் இவ்வாறான விவாதங்களில் கலந்து கொண்டிருப்பவர்களில் பலர், தங்களது உண்மையான பெயர்களை பயன்படுத்த மாட்டார்கள் என்பது தெளிவானதொரு உண்மையுமாகும்.
இன்னும் இளைஞர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்வேன், உங்களுக்கு எது பற்றி அறிவில்லையோ அதில் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம்.
இஸ்லாம் சுட்டிக் காட்டக் கூடிய பண்பாடுகளைப் பேணுங்கள், நாவை (அதாவது பேனாவின் முனையையும் இங்கு நாம் நாவாகப் பொருள் கொள்ளலாம்)ப் பேணிக் கொள்ளுங்கள். இறைவன் கூறுகின்றான் :
(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான். (17:53)
அல்லாஹ் மிக அறிந்தவன்!