மனித ஆசைகளை இஸ்லாம் புறக்கணித்ததா?

மனித ஆசைகளை இஸ்லாம் புறக்கணித்ததா?

'மனிதன் இவ்வுலகில் செய்யும் எல்லாச் செயல்களும் பாவமானவை. உலக அனுபவிக்காமல் துறந்து விடுவதன் மூலமே மனிpதன் இந்தப் பாவங்களிருந்து விடுபடுவதன் மூலமே மனிதன் இந்தப் பாவங்களில் இருந்து விடுப்பட முடியும்.' இப்படித் தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி சுவைத்து மகிழ வேண்டிய மனித வாழ்வை துன்பம் நிறைந்த ஒன்றாக ஆக்கி விட்டன மதங்கள். அதோடு மனிதனிடம் ஒருவிதமான குற்ற உணர்வை ஏற்ப்படுத்தி அவனது சக்திகள் அனைத்தையும் அடக்கி ஒடுக்கி விட்டன மதங்கள்.

ஐரோப்பா மதத்தைப் பின்பற்றி வந்த காலங்களில் அது இருளில் அழிந்து கிடந்தது. முன்னேற்றத்தைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. மதத்தின் பிடியிலிருந்து அது விடுப்பட்ட போதுதான் அது ஒளி பொற்றது. முன்னேற ஆரம்பித்தது. அத்துடன் உற்பத்தித்துறையில் பல விந்தைகளை நிகழ்த்திக் காட்டியது.

இவைமக்களை மதத்திற்கொதிராக திருப்புவதற்கு மேலை நாட்டவர்கள் கண்டெடுத்;த மிக எளிதான காரணங்களாகும்.

நாங்கள் மீண்டும் மதத்திற்கே பின்நோக்கிப் போக வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்களா? முன்னேற்றத்தின் முகேட்டில் இருக்கும் நாங்கள் மதத்திடமிருந்து மீட்ட மனித சக்தியை மீண்டும் மதம் என்ற கொட்டடியில் அடைத்திட வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களா? இது சரியானது. அது தவறானது. அப்படிப் போகாதே. இதைச் செய்யாதே, என சதா நிபந்தனைகள் விதித்து இளைஞகளின் சக்தியை ஒடுக்கி அவர்களின் வாழ்வைப் பாழ்ப்படுத்திட எங்களைத் துண்டுகின்றீர்களா?.

இவை ஐரோப்பியர்கள் அடிக்கடி மதவாதிகளைப் பார்த்து எழுப்பிடும் கேள்விகள்.

தங்களது மதத்தைப் பொறுத்தவரை (கிறுஸ்தவதடதைப் பொறுத்தவரை) ஐரோப்பியர்கள் எப்படி வேண்டுமானாலும் வசைப்பட்டாடட்டும். அது அவர்களது சொந்தப் பிரச்சனை என நாம் விட்டுவிடுவோம். ஆனால் அவர்கள் இஸ்லாத்தின் மீதும் குற்றச்சாட்டைக் கூறிடும்போது தான் நாம் அவர்களுக்கு விளக்கம் தந்திட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்படுகின்றோம்.

மனிதனின் சக்திகள் அனைத்தையும் மதம் முடக்கிப் போட்டுவிடுகின்றது. அடக்கி விடுகின்றது- ஒடுக்கி விடுகின்றது என்று ஐரோப்பியர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்களே! இது இஸ்லாத்திற்குப் பொருந்துமா?

இந்தக் கேள்விக்கான விடையை விவாதிக்கும் முன், மனிதனின் சக்திகளை அடக்கிவிடுதல் அல்லது ஒடுக்கி விடுதல். என்பதன் பொருள் என்ன? என்பதை முதலில் பார்ப்போம். ஏனெனில் மனிதனின் சக்தியை அடக்கி விடுதல்- ஒடுக்கி விடுதல் என்ற வாசகங்கள் பொரும்பாலும் தவறானதொரு பொருளிலேதான் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.

நமது இச்சைகள் ஒரு செயலைத் தூண்டிடும் போது அச்செயலைச் செய்யாமல் அதிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருந்தால் நாம் அந்த இச்சைகளை அல்லது உணர்வுகளை அடக்கி விட்டதாகவோ ஒடுக்கிவிட்டதாகவோ பொருளல்ல. மபறாக அச்செயலை செய்வதே தவறு அச்செயலில் பாவமானது, அருவருக்கத்தக்கது குற்ற உணர்வை எண்ணத்தை ஏற்ப்படுத்தினால், அங்கே உணர்வுனகளும், இச்சைகளும் ஒடுக்கப்படுகின்றன என்றே பொருள்.

இயல்பான இச்சைகள் தூண்டும் ஆசைகளைத்திருப்திபடுத்துவதே சிற்ந்தது, ஆனால் திருப்தி படுத்திட மேற்கொள்ளப்படும் வழிகள் நியாயமானவையாக இருந்திட வேண்டும்.

இயல்பான இயற்கையான ஆசைகளைத் திருப்தி படுத்திக் கொள்வதே தவறு, பாவம் எனக் கூறினால் அல்லது இச்சைகளின் வழி செயல்படுவது அருவருக்கத்தக்கது என போதித்தால் அதற்கு, அந்த இச்சைகளை அடக்குகின்றோம் என்றே பொருள்.

ஒருமனிதனிடம் என்னதான் பாவம் குற்றம் எனப் போதித்தாலும் அவன் தன் இச்சைகளின் வழி செயல்படுவதை தடுத்திட முடியாதவனாகவே இருப்பான். தான் செய்கின்ற செயல் பாவமானது குற்றமானது என எண்ணிக் கொண்டே அச்செயலை செய்துக்கொண்டும் இருப்பான். அச் செயலை ஒருமுறைக்குப்பத்துமுறை செய்து கொண்டே அது அருவருக்கதக்கது என கடிந்து கொண்டும் இருப்பான். இந்நிலையில் ஒரு வழத குற்ற உணர்வு அவனுள் சதா குடிக்கொண்டு விடும்.

இந்தக் குற்ற உணர்வு அவனுள் இருந்து அவனது மனதை அரித்துக் கொண்டே இருக்கும். இதனால் அவன் எந்த வேலையிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாதவனாகவும். தான் செய்கின்ற வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திட முடியாதவனாகவும் ஆகிவிடுகின்றான்.

மொத்தத்தில் அவனுள் குடிகொண்டு விட்ட குற்ற உணர்வு, தான் பாவத்தை செய்தவன் என்ற தாழ்வு மனப்பான்மை அவனது சக்திகள் அனைத்தையும் கொஞ்சம், கொஞ்சமாகக் கொன்று போட்விடும்.

இதற்குத்தான் இச்சைகளை அடக்குதல் ஒடுக்குதல் என்ற பொருள். இப்படி மனிதனின் சக்திகள் மாய்க்கப்பவதைத்தான், மேலை நாட்டவர்கள் மதத்தினால் விளையும் மிகப்பெரும் தீமை எனச் சுட்டிக் காட்டுகின்றனர்.

மனிதனின் சக்தியை அடக்குதல் ஒடுக்குதல் என்பதற்கு மேலே தரப்பட்டுள்ள விளக்கம் என்பது கண்டுபிடிப்பல்ல. மேலை நாட்டவர்களால் மிகப்பெரிய தத்துவமேதை என மேடை ஏற்றப்பட்ட நண்பர் பிராய்டு அவர்கள் தந்ததே மேலே உள்ள விளக்கம்.

பிராய்டு அவர்கள் தனது புகழ் பெற்ற ' வுhசநந உழவெசiடிரவழைளெ வழ வாந ளநஒரயட வாநழசல' என்ற நூலில் பக்கம் 82ல் பின்வருமாறு விளக்கம் தருகின்றர். ஒருமனிதன் தனது இயல்பான உணர்வுகளின்படி (ஆசைகளின்படி) தற்காலிகமாக செயல்படாமலிருப்பதற்கும் அதனை ஒட்டு மொத்தமாக அடக்கி ஒடுக்கி விடுவதற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை தெளிவாக பிரித்தறிந்திட வேண்டும். இயல்பாக எழும் உணர்வுகளின் ஆசைகளின் வழி செயல்படாமலிருப்பது என்பது தற்காலிகமாக அச்செயலில் ஈடுபடாமலிருப்பது என்பதே ஆகும்.

ஆகவே பிராய்டு அவர்கள் தந்துள்ள இந்த விளக்கத்தின் படி பார்த்தால் ஆசைகளை அடக்குதல் அல்லது ஒடுக்குதல் என்பது தற்காலிகமாக அவற்றைத் தள்ளி வைப்பதல்ல, ஆசைகளை திருப்தி செய்வது பாவமானது அருவருக்கத்தக்கது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே( ஆசைகளை அடக்குதல் ஒடுக்குதல் என்பது)ஆகும்.

இனி இஸ்லாம் மனிதனுள் இயல்பாக எழும் ஆசைகளை அடக்கவோ, ஒடுக்கவோ சொல்கிறதா? மனிதன் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி உழைத்து முன்னேறிட இஸ்லாம் தடையாக இருக்கின்றதா? என்பதைப் பார்ப்போம்.

மனிதனின் ஆசைகளை அவனுள் எழும் இயல்பான உணர்வுகளை இஸ்லாத்திப் போல் வேறு எந்த மதமும் வெளிப்படையாகவும் ஏற்றுக்கொண்டதில்லை. திருக்குர்ஆன்.

'பெண்கள், ஆண்மக்கள்: பொன்னிலும் வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்;, அடையாளமிடப்பட்ட உயர்ந்த குதிரைகள்( ஆடு, மாடு, ஒட்டகம் போன்று)கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாகப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் (நிலையற்ற) உலக செல்வங்களாகும், அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடமுண்டு. (3:4)

என்று வெளிப்படையாக பிரகடனப்படுத்துகின்றது. மேலே சொன்னவை மனிதனின் ஆசாபாசக்களை பிரகடனப்படுத்துகின்றது. மேலே சொன்னவவை மனிதனின் கண்களில் விருப்பத்தக்கனவாக ஆக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றது திருக்குர்ஆன்.

மனிதன் தனது ஆசைகளை திருப்த்தி செய்திடும் போது அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடாது. அதுபோலவே அவன் சமுதாயத்தையும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்லக்கூடாது. இந்த நிபந்தனைக்குக்கட்டுப்பட்டு மனிதன் தன் ஆசைகளைத் திருப்த்தி படுத்திக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை.

ஒருமனிதன் தன் ஆசைகளை இச்சைகளை திருப்த்தி செய்கின்றேன் என்ற பெயரில் அல்லும் பகலும் போகித்துக் கிடப்பதிலேயே ஈடுபாடு கொண்;வனாக இருந்திடுவானேயானால் அவன் வெகு விரைவில் தனது சக்திகள் அனைத்தையும் இழந்து விடுவான்.

தனது ஆசைகளின் பிடியில் சிக்கி அவற்றின் பின்னலேயே ஓடிக் கொணடிருப்பான் ஆக்கப் பூர்வமான வேலைகள் எதையும் சாதிக்க முடியாத சாறெடுக்கப்பட்ட சக்கையாகிவிடுவான். அந்நிலையில் மனிதனின் சிந்தனைச் செயல் அனைத்தும் அவனது ஆசைகளையும் சுகபோகங்களையுப் சுற்றி வருபவனாகவே இருக்கும்.

இப்படிப்பட்ட தனிமனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாகும் சமுதாய அமைப்பு தனது சக்தியை நல்லனவற்றிற்குப் பயன்படுத்திட முடியாது

***********************************************************
***********************************************************