அவமதிப்பும் உயிர்பறிப்பும்

இன்று நம்முன் விடைகளை எதிர்பார்த்து சில கேள்விகள் வரிசையில் நின்று கொண்டுள்ளன.

1) இறுதித்தூதர் இறைவனின் தூதரை யாரேனும் ஒருவன் அவமதித்து விட்டால், கேவலமாக திட்டித் தீர்த்தால் அவனுடைய உயிரைப் பறித்து விட வேண்டும்! என்பது தான் இஸ்லாமியச் சட்டமா? அவனுடைய தலைக்கு விலையை நிர்ணயிப்பது முஸ்லிம்கள் மீதான மார்க்கக் கடமையா?

2) ஊர் பேர் தெரியாத யாரோ ஒருவன் இறைத்தூதரை கேவலப்படுத்தி விட் டான். அவன் யாரென்று அவன் சார்ந்துள்ள சமூக மக்களுக்கே சரியாகத் தெரியாது. அம்மக்கள் அவனைக் கண்டிக்கவும் இல்லை. ஒட்டுமொத்தமாக அந்த சமூக மக்கள் அனைவரையும் புறக்கணிப்பதும் ஊர் விலக்கம் செய்வதும் தான் இஸ்லாமியக் கட்டளையா?

3) இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம் அல்லாத ஒருவன் இவ்வாறு செய்தாலும் அவனைத் தீர்த்துக் கட்டுவது தான் இஸ்லாமியத் தண்டனையா?

4) தன்குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருத்தம் தெரிவித்த பின்பும் அதனை ஒப்புக் கொள்ளாமல் வேறு வகையான தண்டனைகளை முஸ்லிம்கள் அவனுக்கு வழங்கித்தான் ஆக வேண்டுமா?

இஸ்லாமிய சட்டநெறிமுறைகளில் தண்டனைகளின் நிலை

இப்பிரச்சனையின் உள்ளே ஆழப்புகுமுன் இரண்டு விஷயங்களைப் புரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

1) இப்போது நிகழ்ந்துள்ளது போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும் போதேல்லாம் 'இஸ்லாமிய சட்டநெறிகளின்படி', 'இஸ்லாமிய சட்டம் ஆணை யிடுவது என்னவென்றால்' போன்ற சொற்பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாமிய சட்ட அமைப்பை சரியாகப் புரிந்து கொள்ளாதோரின் மனதில் இவை தவறான அபிப்பிராயத்தை உருவாக்கி விடுகின்றன. தன்னைப் பின்பற்றும் மக்களிடம் 'தொழுது வாருங்கள்!' 'நோன்பு வையுங்கள்!' என்று கட்டளை இடுவதைப் போன்றே 'இத்தகைய தண்டனை'யையும் நிறைவேற்றுமாறு இஸ்லாம் கட்டளை யிடுகின்றது என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அதாவது 'இறைவனின் தூதரை தாறு மாறாகவும் தவறாகவும் சித்தரித்து கேவலப்படுத்த முயற்சிக் கின்றவர்களை உடனே கொன்று விடுங்கள்' என்று இஸ்லாம் கட்டளையிடுவதாகவே அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள்.

இத்தகைய வெறித்தனமான போதனையை இஸ்லாம் வழங்கியிருக்கும் என்று நினைப்பது கூட இஸ்லாமிற்கு எதிரான பயங்கரமான குற்றச்சாட்டு ஆகும்

(இத்தகையதொரு போதனையை இஸ்லாம் வழங்கியிருக்கும்; கண்டவர் களை எல்லாம் கொன்று விடு என்ற வெளிப்படையான அனுமதியை அளித் திருக்கும் என்று நினைப்பதை விட்டும் இறைவன் நம்மைக் காப்பாற்றுவானாக!)

இஸ்லாமைப் பொருத்தவரை, மனித உயிரை விடவும் மதிப்புமிக்க மகத்தான பொருள் இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை! உயிர்க்கொலையை மிகப் பெரிய மனித குலக்கேடு என்றே அது தீர்மானித்துள்ளது. ஒரு மனிதனின் உயிரைப் பறிப்பதானது ஒட்டு மொத்த மானுடத்தின் உயிரைப் பறிப்பதற்கு ஒப்பாகும் என்றே அது வீரியமிக்க வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளது.

'(உயிர்க்கொலைக்கு) பழிவாங்கும் விதமாகவோ, பூமியில் சீர்குலைவு கொலை கொடுங்கோன்மையை தடுக்கும் நோக்கிலோ அல்லாமல் வேறேதேனும் காரணத்திற்காக ஓர் உயிரை யாரேனும் பறித்து விட்டால் வெறுமனே ஒரு மனிதனைக் கொலை செய்தவன் அல்லன் அவன், மாறாக ஒட்டுமொத்த மனிதகுலத்தையே கொன்று விட்டவன் போலாவான்! (அவ்விதமே) யாரேனும் ஒருவர் ஒரு மனிதனைக் கொலை செய்யப்படுவதிலிருந்து காத்து விட்டால் வெறுமனே ஒரு மனிதனைக் காப்பாற்றியவர் அல்லர், அவர், மாறாக ஒட்டுமொத்த மனிதகுலத்தையே காப்பாற்றியவர் போலாவார்! தெளிவான அத்தாட்சிகளை கைகளில் ஏந்திக் கொண்டு (ஒருவர் பின் ஒருவராக) தொடர்ந்து நமது தூதர்கள் அவர்களிடத்தில் வந்த கொண்டே இருந்தனர். (கொலை, அநீதியை விட்டும் அவர்களை தடுத்துக் கொண்டேயிருந்தனர்) இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறுபவர்களாகவே, அத்துமீறுபவர்களாகவே இருந்தனர்.' (532 வசனத்தின் மொழியாக்கம்)

குறிப்பிட்ட ஒரு சில சூழ்நிலைகளில் கொலைக்கான அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது. வழங்கியுள்ளது என்று சொல்வதை விட வலியுறுத்தியுள்ளது என்று கூடச் சொல்லலாம், எந்த வித சந்தேகமும் இல்லாமல்!! ஆனால், அவை எத்தகைய சூழ்நிலைகள் என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொலைக்கான அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று தான் உலகின் யாரும், எந்தக் கொள்கையினரும் கூறுவார்கள்! ஏனெனில், அச்சூழலில் அது 'உயிரைப் பறிக்கும் கொலை' அல்ல! மனிதர்களின் 'உயிர்களைக் காக்கும் கொலை'யாகும்!!

'அறிவு மிகுந்தோரே! பழிவாங்குதலில் உங்களுக்கு 'வாழ்வு' இருக்கின்றது!'

இத்தகைய கொலைகளில் வெளிப்படையாக இரத்தம் சிந்தப்பட்டாலும் மனிதகுலத்திற்கான 'பாதுகாப்பும்' 'அமைதியும்' அவற்றில் மறைந்துள்ளன! இத்தகைய சூழ்நிலைகள் மூன்றாகும் என்று வான்மறை குர்ஆன் வகைப் படுத்தியுள்ளது. 1) போர், 2) (கொலைக்கான) பழிவாங்கல், 3) கடுமையான தண்டனைகளை அழித்தால் ஒழிய தடுக்க ஃ தடை செய்ய முடியாத கடுங்குற்றங்கள்.

இம்மூன்று சூழ்நிலைகளைத் தவிர்த்து வேறு எந்த - எப்பேற்பட்ட சூழ்நிலை யிலும் இறைவனுடைய உயர்படைப்பினமான மனிதனின் இரத்தம் சிந்தப்படுவதை இஸ்லாம் ஒரு போதும் விரும்புவதே இல்லை! இம்மூன்று சூழ்நிலைகள் அல்லாது, வேறு ஒரு சூழ்நிலையிலும் மனித உயிர் பறிக்கப்படுவதை இஸ்லாம் அனுமதிக் கின்றது என்று யாரேனும் கூறினால், இஸ்லாமைப் பற்றி அவருக்கு அறவே தெரிய வில்லை, அல்லது இஸ்லாமைப் பற்றி அப்பட்டமான அவதூறை அவர் பரப்புகிறார் என்று தான் பொருள்!!

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை இவ்விதம் வர்ணிப்பது, இஸ்லாமிய சட்ட அமைப்பை விளங்கிக் கொள்ளாதவர்களுடைய மனதில் தவறான புரிதலை ஏற்படுத்தி விடுகின்றது. இஸ்லாமிய சட்ட அமைப்பின் யதார்த்த நிலை என்ன? இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள், வழிபாட்டுச் சட்டங்களோடு அது எங்ஙனம் வேறுபடுகின்றது? என்பன பற்றியெல்லாம் அவர்கள் அறவே உய்ந்துணர முடியாத வர்களாக இருக்கிறார்கள்.

குற்றவியல் தண்டனைகள், சட்டங்கள் ஏராளமானவை இருக்கத்தான் செய்கின்றன. ஃபுகஹாக்கள் என்று அழைக்கப்படக் கூடிய முஸ்லிம் சட்ட யியலாளர்கள் தேவைப்படும் போதேல்லாம் திறம்பட அவற்றை வகுத்துள்ளார்கள். அந்தந்த காலகட்டங்களில் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவை செயற்படுத்தப் பட்டும் வந்துள்ளன. இன்றைக்கும் இஸ்லாமிய சட்ட நூற்களில் அவற்றை நம்மால் காண முடியும். இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த கட்டளைகள், வழிபாட்டுச் சட்டங்கள் போன்றவற்றுக்கும் இவற்றுக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்கின்றது. அதனை நாம் விளங்கிக் கொண்டாக வேண்டும்!

முதலாவதாக, இஸ்லாமிய சட்டநெறியின் ஆதாரக் கருத்து மூலங்களிலிருந்து நேரடியாகத் தொகுக்கப்பட்டவை இல்லை இவை! மாறாக, சட்டநெறிமுறை வகுப்ப தற்கான நியதிகள், ஷரீஆ சட்ட அமைப்பின் அடிப்படை அம்சங்கள், ஆதாரப் புள்ளிகளை மனதிற்கொண்டு வகுக்கப்பட்டவையே இவை! நெப்போலியனால் உரு வாக்கப்பட்ட பிரெஞ்சு சட்டங்களைப் போன்றோ, அல்லது இந்திய அரசாங்கத்தின் குற்றவியல் சட்டங்களைப் போன்றோ இன்ன இன்ன குற்றங்களுக்கு இன்ன இன்ன தண்டனை என்று ஒவ்வொரு குற்றங்களையும் வகைப்படுத்தி விரிந்த விளக்கமாக பல தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட சட்டநூற்களஞ்சியம் எதுவும் இஸ்லாமிடம் இல்லை! அப்படி ஒன்றை இஸ்லாம் உருவாக்கியிருந்தால் அது உலகளாவிய சமயமாக பரிணமித்திருக்காது.

அப்படியென்றால், சட்டங்களை இயற்றவும் தொகுக்கவும் எத்தகைய முறையை அது கையாண்டது? துணைத் தலைப்புகளையும், இணைப் பிரிவுகள், உட்பிரிவுகளையும் அறவே தவிர்த்து விட்டு அடிப்படை அம்சங்களையும், ஆதாரக் குறிப்புகளையும் மட்டுமே அது கவனத்தில் கொண்டது.

அந்த ஆதாரப் புள்ளிகளை மனதில் கொண்டு தேவைகளுக்கு ஏற்ப, கால இட சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப விரிவான சட்டங்களையும் உட்பிரிவுகளையும் உருவாக்கிக் கொள்ளலாம்! மனிதனுடைய தகுதி, திறமைகள், மற்றும் தேவைகளுக்கு உகந்த நீதி நியாயம் செறிந்த அமைப்பொன்று உருவாக வேண்டும்; தீமைகள் சீர்குலைவை தடுப்பதற்கும், சீரமைப்பிற்கும் வழிவகுக்கும் அத்துணை வாய்ப்புகளும் பயன்பாட்டுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்பன மட்டுமே இஸ்லாமிய சட்டநெறியின் மையப்புள்ளியாக திகழ்ந்தது.

ஆரம்ப காலங்களில் இஸ்லாமிய அரசானது குறுகியதொரு நிலப்பரப்பில் மட்டுமே பரவியிருந்தது. தேவையை மிஞ்சிய விரிவாக்கம் அதன் தண்டனை முறை களிலும் குற்றவியல் சட்டங்களிலும் காணப்படவில்லை! பிற்காலங்களில் ஆட்சி யெல்லைகள் விரிவடைந்து கொண்டே சென்ற போது புதிய புதிய தேவைகளும் ஏற்பட்டன. ஆகையால், இஸ்லாமிய சட்ட வல்லுனர்களும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தெளிவான, தீர்க்கமான சட்டங்களை வகுக்கலாயினர், இப்படி யாக, விரிவான சட்டநூல் தொகுப்பு உருவானது. அடிப்படையாகப் பார்த்தால் இவ்வனைத்துச் சட்டங்களும் இஸ்லாமியச் சட்டங்கள் தாம் என்ற போதிலும் இவை இஸ்லாமிய கருத்து மூலங்களிலிருந்து நேரடியாகத் தொகுக்கப்பட்ட சட்டங்கள் அல்ல இவை!! இஸ்லாமிய கருத்து மூலங்களிலிருந்து நேரடியாகத் தொகுக்கப்பட்ட சட்டங்களுக்கும், இஸ்லாமிய சட்ட நிபுணர்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்! இரண்டுமே இஸ்லாமோடு தொடர்புடையன தாம் என்றபோதிலும் தராதர வேறுபாடு நிலவுகின்றது! முதல் வகைச் சட்டங்கள் நேரடி ஆணைகளாக பிறப்பிக்கப்பட்டவை. இரண்டாம் வகைச் சட்டங்களோ அலசல், ஆராய்ச்சி, வியாக்கியானம், ஒப்பீடு, மறைமுகக் குறியீடுகள் என்று பல்வேறுபட்ட கட்டங்களைத் தாண்டி இஸ்லாமிய சட்டவியலாளர்களால் வகுத்துத் தொகுக்கப்பட்டø!!

இரண்டாவதாக, இவை அனைத்துமே குற்றவியல் நடைமுறைகள்! குற்றவியல் என்பதே அரசு சார்ந்த விஷயம். தனிநபர்களுக்கும் அவற்றுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை! தொழுகை, நோன்பு போன்ற கட்டளைகள் தனிநபர்களுக்கு இடப்படுவது போன்ற இக்குற்றவியல் சட்டங்கள் தனிநபர்களுக்கு விதிக்கப்படுவதில்லை. இஸ்லாமிய அரசு ஒன்று அமைக்கப்பட்டு (ஷரீஅத்) நீதிமன்றங்கள் நிறுவப்பட்ட பின்பு தான் இத்தகைய சட்டங்களை அமலாக்கம் செய்ய முடியும்!!

'நீதிமன்ற நடவடிக்கைகள்' என்று இன்றைக்கு நாம் குறிப்பிடுகிறோமே, அதற்கு இஸ்லாம் தருகின்ற மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உலகில் வேறு எந்த நாட்டிலும், கொள்கை கோட்பாடுகளிலும் காண முடியாது! இஸ்லாமிய சமூக அமைப்பில் 'குற்றம்' 'தண்டனை' இரண்டையும் நீதி மன்றம் அல்லாது வேறு யாரும் வகைப்படுத்தவோ, தீர்மானிக்கவோ இயலாது. நீதி மன்றத்திற்கு மட்டும் தான் 'குற்றத்தை' வகைப்படுத்தி 'தண்டனையை' தீர்மானித்து நிர்ணயிக்கும் உரிமை உண்டு. வேறு யாருக்கும் அவர் எப்பேற்பட்ட மனிதராக இருந்தால், ஏன், ஆட்சித்தலைவர், அமீருல் முஃமினீன் ஆக இருந்தாலும் கூட இவ்வுரிமை கிடையாது!! கேட்பாணை, விசாரணை, சாட்சியம், ஆழ்நோக்கு என்ற எல்லாவிதமான நடைமுறைகளையும் முழுமையாக நிறைவுபடுத்திய பின்பு தான் நீதிமன்ற நடுவர் நடவடிக்கையில் இறங்க இயலும்!. குற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற ஒரு நபரை ஆட்சித்தலைவரோ, அமீருல் முஃமினீனோ கையும் களவுமாகப் பிடித்து விட்டால் கூட வாதியாக, சாட்சியாக நீதி அவைகளில் அவர் வழக்கு தொடுக்கலாமே ஒழிய, சுயமாக தண்டிக்கவெல்லாம் முடியாது. அவருடைய முறையீட்டை விசாரிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவையும் கூட நீதி மன்றம் தான் எடுக்க வேண்டியிருக்கும்!

'சட்டத்துறை சீர்திருத்தங்கள்' என்ற இன்று பெரிதாகப் பேசப்பட்டு வரும் சீர்திருத்தங்களில் தலையானது நீதித்துறையையும் நிர்வாகத்துறையையும் வேறு படுத்தி வைத்திருப்பதாகும். அதன்படி, 'தண்டிக்கும்' வலிமையும் அதிகாரமும் பெற்றிருப்போர் 'தவறை' தீர்மானிக்கக் கூடிய உரிமையைப் பெற்றிருக்க மாட்டார். மிக முக்கியமான இந்த சீர்திருத்தத்தின் வாயிலாக அடக்குமுறையும், தனிநபர் வரம்புமீறல்களும் தடைசெய்யப்பட்டு விட்டன!

உலகின் மிகப்பெரிய வல்லரசாகக் கருதப்பட்டுக் கொண்டிருந்த ரோமானியப் பேரரசு கோலோச்சிக் கொண்டிருந்த கி. பி. ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்று வந்ததென்ன? குற்றவாளி என்று குற்றம் சுமத்தி கூண்டில் ஏற்றும் அதே அதிகாரி தான் தீர்ப்பையும் அளிக்கக் கூடிய நீதிபதியாக மாறும் அவல நிலை!!

நாகரீக ரோமதேசத்துக்கு முற்றிலும் மாறுபட்ட நீதிமன்ற நடைமுறைகளை இஸ்லாமிய அரசில் அப்போதே காண முடிந்தது. இஸ்லாமிய அரசில் நீதித்துறையும், நிர்வாகத் துறையும் தனித்தனியாகவும் சுயமாகவும் இயங்கி வந்தன. அதிகார செல்வாக்கிற்கோ, ஆளுமைக்கோ பயப்படாமல், எந்தவிதமான சலுகைகளுக்கும் இடம்கொடாமல் ஆட்சியாளர்கள், ஆளுநர்கள், அவ்வளவு ஏன்? மன்னர்களின் மீதே சட்டத்தை அமல்படுத்தும் அளவிற்கு சுதந்திரம் பெற்றவையாக இஸ்லாமிய நீதிமன்றங்கள் திகழ்ந்து வந்தன! சாதாரண குடிமக்களைப் போன்றே இத்தகையோரும் நீதிமன்றங்களால் நடத்தப்பட்டார்கள்!!

இஸ்லாமிய சமூக அமைப்பில் நீதித்துறைக்கு எத்தகைய மரியாமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வந்து என்பதை விளக்கிக் கூற சம்பவங்களை அடுக்கிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை!. ஒரே ஒரு சட்டநியதியைச் சுட்டிக்காண்பித்தால் போதும்! இஸ்லாமிய சட்டவியலாளர்களில் ஒரு பெரும் பிரிவினரின் கருத்தின்படி 'ஒரு முதலாளி தன்னுடைய அடிமையைக் கூட தானாகத் தண்டிக்கும் உரிமை படைத்தவன் அல்லன். அவ்வடிமை செய்த குற்றம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரியே! கொடுக்கப் போகின்ற தண்டனை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே! முறைப்படி வழக்கு தொடுத்து நீதி மன்றத்தின் மூலமாகத்தான் அவன் நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும்! '

சின்னஞ்சிறு தண்டனையாக இருந்தாலும் நீதிமன்றத்தின் வழியாகவே பெற்றுத் தர வேண்டும் என்று இந்தளவுக்கு வலியுறுத்தும் சமயம் ஒன்றின் மீது இத்தகைய மிகப் பெரிய குற்றச்சாட்டை அதுவும் உயிர்ப்பறிப்பு, கொலை போன்றதொரு குற்றச்சாட்டை சுமத்துவது எத்தகைய அபாண்டமான விஷயம்!

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் பக்தாதிலும், டமாஸ்கஸ்ஸிலும் திகழ்ந்து வந்ததைப் போன்ற இஸ்லாமிய நீதிமன்றங்கள் இன்றைய இந்தியாவில் நிறுவப்பட்டு, முஸ்லிம் அல்லாத (திம்மி) ஒருவனைக் கொன்ற குற்றத்திற்காக முஸ்லிம் ஒருவன் கூண்டில் நிறுத்தப்பட்டால், உலகின் வேறு நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்பை ஒத்த தீர்ப்பே அங்கும் வழங்கப்படும். வேண்டுமென்றே கொலை செய்தான் என்று அந்த முஸ்லிம் தண்டிக்கப்பட்டே தீருவான். முஸ்லிமல்லாத ஒருவனைத் தீர்த்துக் கட்டி அவன் ஏதோ இஸ்லாமிற்கு சேவை செய்து விட்டான் என்று எந்த ஒரு முஸ்லிமும் ஒரு வினாடி கூட ஒரே ஒரு வினாடி கூட நினைத்துப் பார்க்க மாட்டான்.

ஆக, குற்றவியல் சார்ந்த 'இஸ்லாமிய சட்டங்கள்' வழிபாட்டுத் துறைகளில் செயற்படுத்தப்படும் 'இஸ்லாமிய சட்டங்களைப்' போன்றவை அல்ல! ஆகையால், இவற்றைக் குறிப்பிடும் போது கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இஸ்லாமிய அரசின் சட்டங்கள் என்று இவற்றை வகைப்படுத்தலாம் அல்லது இஸ்லாமிய சட்ட மேதைகள் இத்தகைய சட்டங்களை இயற்றியுள்ளனர் என்று குறிப்பிடலாம்! இதன் மூலம் தவறான புரிதல்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

2) இரண்டாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம்

இது தொடர்பான இஸ்லாமிய சட்டம் எதுவாகவோ இருந்து விட்டுப் போகட்டும். அதனை நடைமுறைப்படுத்த இது தக்க தருணமா? இஸ்லாமிய அரசாங்கத்திற்கென்று இயற்றப்பட்ட சட்டமாக இது இருக்கும் பட்சத்தில் இப்போது இதனை மேற்கோள் காட்டுவது சரியா?

'இல்லை, தவறு!' என்று நாம் யோசனையே செய்யாமல் இதற்குப் பதில் கூறலாம்!. இந்த சந்தர்ப்பத்தில் இத்தகைய இஸ்லாமிய சட்டம் குறித்துப் பேசுபவர்கள் தேவையில்லாமல், சம்பந்தமில்லாமல், சூழலை கவனிக்காமல், தொடர்பில்லாமல் பேசுகிறார்கள். கண்டிப்பாக இதனால் தவறான சந்தேகங்களும், குழப்பங்களும் ஏற்படவே செய்யும்! நிலைமையைச் சீராக்க அது பயன்படாது. சாத்தியப்படாத, நிகழ்ந்திராத ஒன்றைக் குறிப்பிடுவது இஸ்லாமிய சட்ட ஒழுங்கிற்கே மாற்றமானதும் கூட! நிகழ்ந்திராத விஷயங்களை கற்பனையில் தருவித்துக் கொண்டு தீர்ப்புகள் தேட முயற்சிப்பதை முன்சென்ற இமாம்கள், மார்க்க மேதைகள் வெறுத்து ஒதுக்கி யிருப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணம்!!

கால சூழ்நிலைகளுக்கு பொருந்தி வராமல் சகட்டுமேனிக்கு பேசிக்கொண் டிருப்பதென்றால் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் ஆயிரக்கணக்கான விஷயங்களைப் பேசலாம். பலதரப்பட்ட சூழல்களுக்கான பல்வேறு சட்டங்கள் நூற்களில் இரைந்து பரவிக் கிடக்கத்தான் செய்கின்றன. ஆனால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தியாவில் நமக்குப் பொருந்தி வராத விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கலாகாது. இடம் மற்றும் காலத்தைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய சட்டத்துறை எதை விதியாக்கியுள்ளதோ அதுவே அக்காலத்திற்குப் பொருத்த மானதாக அமையும்! அதற்கு மாற்றமான ஒன்று காலத்தின் தேவையை நிறைவு செய்வதாக அமையாது. எனில், கால சூழ்நிலைக்கு முற்றிலும் பொருத்தமில்லாத ஒன்றை மேற்கோள்காட்டி அதன்படி செயற்பட அழைப்பு விடுப்பது எப்படி சரி யானதாக அமையும்?

முஸ்லிம் அல்லாத மற்ற மக்கள் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்கள் யாவும் குறிப்பிட்டதொரு சூழ்நிலைக்காக வேண்டியே வகுக்கப்பட்டனவாகும். முஸ் லிம் அல்லாத மக்களின் பாதுகாப்பை தனது பொறுப்பில் கொண்டுள்ள இஸ்லாமிய அரசாங்கத்திற்கான சட்டங்கள் ஆகும் அவையாவும்!! முஸ்லிம் அல்லாத மக்களு டைய விஷயங்களின் பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் வழக்குகளை விசாரிக்கவும் தீர்ப் பளிக்கவும் அங்கே இஸ்லாமிய நீதிமன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இன்றோ, அத்தகையதோர் அரசியல் அமைப்போ, சூழலோ இல்லை. இஸ்லாமிய அரசே இங்கு இல்லை எனும் போது மாற்று மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் (திம்மாவும்) அரசுக்கு இல்லை; திம்மிக்களும் (இஸ்லாமிய மேலாண்மையை ஏற்றுக் கொண் டுள்ள மாற்றுக் கருத்துடையோர்) இல்லை. ஆகையால், இத்தகைய சட்டங் களுக்கும் நிகழ்காலத்திற்கும் யாதொரு சம்பந்தமும் அறவே இல்லை என்பதுதான் யதார்த்தம்!!

முஸ்லிம் அல்லாத மக்களை எந்தெந்த பிரச்சனைகளில், எந்தெந்த சூழ்நிலை களில், தண்டிக்க முடியும்? எவ்வெப்போது முடியாது? என்பன போன்ற பற்பல கேள்விகளுக்கான விடைகள் கூட, எந்தச் சூழலில் இஸ்லாமிய அரசு முஸ்லிம் அல்லாதோரின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது? போரிட்டு வெற்றி பெற்ற பிறகா? சமாதான உடன்பாடு கண்ட பிறகா? எந்தெந்த நிபந்தனைகளின் பேரில் அவ்வொப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது? என்பதையெல்லாம் சார்ந்தது!

பாதுகாக்கும் பணியை தன்பொறுப்பாக ஏற்றுக் கொண்டிருப்பதால், வழக்கு மன்றங்களில் நிற்க வைத்து அவர்களை விசாரிக்கவும், தவறிழைத்திருக்கும் பட்சத்தில் அவர்களைத் தண்டிக்கவும் அவ்வரசாங்கத்திற்கு உரிமை உண்டு!

இஸ்லாமிய அரசாங்கமே இல்லாத போது, திம்மிகளோ, திம்மிகளை பாது காக்கும் பொறுப்போ எதுவுமே இல்லாத போது இத்தகைய சட்டங்களுக்கு என்ன வேலை? செல்லாக்காசுகள் தாம்!! ஆக, பொருத்தமற்ற சூழல்களில் இத்தகைய சட்டங்களை முன்வைத்துப் பேசுவதும், 'இஸ்லாமிய சட்டம்' 'இஸ்லாமிய சட்டம்' என்று கூப்பாடு போடுவதும் தேவையற்ற வீண்வேலையே அன்றி வேறென்ன? இத்தகைய கூடாசெயல்கள் தாம், மாற்றார் பார்வையில் இஸ்லாம் கேவலப்பட்டுப் போவதற்கும், பட்டப்பகலவனைப் போன்ற தெளிவான அதன் போதனைகள் சந்தேக மேகங்களுக்குப் பின்னால் மறைந்து போவதற்கும் காரணமாக அமைகின்றன.4

வினாவும் விடையும்

எழுப்பப்பட்ட கேள்விக்கான ஒற்றைவரி விடை என்னவென்றால், 'இது இஸ்லாமிய சட்டமும் அல்ல! இத்தகைய சட்டம் இஸ்லாமிய சட்டமாகவும் இருக்காது!'

'இறைவனின் திருத்தூதர் முஹம்மத் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லிம் அவர்களை யாரேனும் ஒருவன் திட்டினால் அவனைக் கொன்று விட வேண்டுமா? திட்டிக் கொண்டிருப்பவனின் உயிரைப் பறிப்பது அதனைக் கண்டு கொண்டிருக்கும் முஸ்லிமின் மீது கட்டாயக் கடமையா? மார்க்கக் கடமையா?' இது தான் எழுப்பப்பட்ட கேள்வி!

'இல்லை, இல்லவே இல்லை! ' என்பது தான் பதில். விளக்கத்தை ஏற்கனவே மேலே கண்டு விட்டோம்.

இஸ்லாமிய சட்டநூற்களில் காணப்படும், இப்பிரச்சனை குறித்த இன்னு மொரு கோணத்தையும் ஆராய்ந்து பார்ப்போம். 'இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத மாற்றுக் கருத்து திம்மி ஒருவன் தீவிரமதவெறியினால் அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான பகைமையுணர்வு மற்றும் பொறாமையினால், அல்லது இஸ்லாமிய அரசாங்கத்தை கேவலப்படுத்தும் எண்ணத்தில் வெளிப்படையாக தெருவில் இறங்கி இறைத்தூதர் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லிம் அவர்களைத் திட்டத் துணிந்து விட்டால் அல்லது கேவலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டால் என்ன செய்வது?'

'இத்தகையதொரு படுகேவலமான காரியத்தை அவன் செய்யத் துணிந்து விட்ட பிறகு அவனுக்கும் இஸ்லாமிய அரசுக்கும் இடையே எந்தவொரு ஒப்பந்தமும் உடன்பாடும் கிடையாது. அவனுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு; குடிமகனுக்கான எல்லா உரிமைகளும் உண்டு; மதச்சுதந்திரம் உண்டு; உயிருக்கும்; பொருளுக்கும் முழுப்பாதுகாப்பு உண்டு என்றெல்லாம் அவ்வொப்பந்த அடிப் படையில் அவனுக்கு பலப்பல உரிமைகள் கிடைத்து வந்தன அல்லவா? அவை யனைத்தும் அற்றுப் போய்விடும். அவ்வொப்பந்தத்தை அவனாகவே மீறி செயலற்றதாக ஆக்கி விட்டான். ஆகையினால், அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்'

மார்க்க மேதைகளில் ஒரு சாராருடைய கருத்து இது!!

'இதனால் எல்லாம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விடாது. ஆகையினால் மரணதண்டனை விதிக்கவெல்லாம் முடியாது!. நிலைமையச் சீர்தூக்கிப் பார்த்து தவறான செயல்கள் தொடரா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது நீதிமன்றத்தின் கடமையாகும்! '

மார்க்க மேதைகளில் இன்னொரு பிரிவினரின் கருத்தாகும் இது!!

இமாம் மாலிக், இமாம் அஹ்மத், இமாம் ஷாஃபிஇ (தன்னுடைய 'கிதாபுல் உம்' நூலில்) முதற்கருத்தையும், இமாம் அபுஹனீஃபா இரண்டாம் கருத்தையும் வலியுறுத்துகிறனர். ஹன்பலிய்யா, ஷாஃபிஇய்யா அறிஞர்களில் ஒரு சாராரும் இரண்டாம் கருத்தையே ஆதரிக்கிறனர்.

மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுவோர் எந்தெந்த காரண காரியங்களை முன்வைத்து எந்தெந்த காலச்சூழ்நிலைகளின் பின்னணியில் இம்முடிவுக்கு வந்துள்ளார்கள் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் வேண்டும