சுவாசமுள்ள யாவும் ஏசுவின் இறைவனாகிய அல்லாஹ்வைத் துதிப்பதாக அல்லேலூயாa

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்.....


நேர்வழி பெற்ற இறைநம்பிக்கையுடையோர் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!

உண்மையடியான் வலைப்பூ (BLOGSPOT) ஆசிரியர்களுக்கு

இஸ்லாமிய இணையப் பேரவை நிர்வாகம் தெரிவிப்பது....

இஸ்லாத்தைப் பற்றிய உங்களின் தவறான எண்ணங்களையும், வெறுப்பையும் பல ஆக்கங்கள் மூலம் வலைப்பூக்களில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த 16-01-2008 அன்று உங்களின் வலைப்பூவான unmaiadiyann.blogspot ல் இஸ்லாமிய இணையப்பேரவைக்கு பதில் என்ற ஒரு பதிவைப் பார்வையிட்டோம். அதில் இஸ்லாம் கொலைகார மார்க்கம் என்று புனைவதற்கு படாதபாடு பட்டுள்ளீர்கள்.

இவ்வாறு முஹம்மது பொய்யன், இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டி மார்க்கம், குர்ஆனில் பல முரண்பாடுகள் உள்ளன, கிருத்துவமே இறைமார்க்கம், ஏசுதான் வணங்கத் தகுதியான கடவுள் (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்) என்று இணையத்தில் அவதூறு பரப்புபவர்களின் பட்டியலில் நீங்களும் இணைந்துள்ளீர்கள் என்பதைத்தான் உங்களின் பல பதிவுகள் தெளிவுபடுத்துகிறது.

நோவா, ஆப்ரஹாம், மோஸே, ஏசு, முஹம்மது (அவர்கள் அனைவர் மீதும் இறை சாந்தி என்றும் நிலவட்டுவாக) போன்ற சங்கைமிக்க இறைத்தூதர்கள் சத்திய இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னபோது, இன்று நீங்கள் எவ்வாறு இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்க்கின்றீர்களோ அது போலவே அந்தந்த நபிமார்கள் மீதும், இறைக் கொள்கையை மறுத்த அன்றைய மக்கள் இவ்வாறே வசைமாறிப் பொழிந்தனர். எனவே நீங்கள் இஸ்லாத்திற்கெதிராக இன்று இணையதளங்கள் மூலம் செய்து கொண்டிருக்கும் இழிசெயல்கள் முஸ்லீம்களாகிய எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

இப்படி தொடர்ச்சியாக இணையங்களில் உங்களின் சொற்போரை நடத்தாமல் ஆரோக்கியமான திறந்தவெளி விவாதத்திற்கு நீங்கள் முன்வாருங்கள் என்று இஸ்லாமிய இணையப்பேரவை உங்களை அன்புடன் அழைக்கிறது.

இஸ்லாம் என்பது ஒரு பொய்யான மார்க்கம் - கிருத்துவமே உண்மையான இறைமார்க்கம் என்று நீங்கள் உறுதியாக நம்புவதால், உங்களின் நம்பிக்கைப்படி தவறான மார்க்கத்திலுள்ள முஸ்லீம்களாகிய எங்களை நேர்வழியின் பக்கம் அழைப்பது உங்களின் மீது கடமை. எனவே உங்கள் கடமையை உணர்ந்து எங்களின் இந்த பகிரங்க விவாத அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அந்த பகிரங்க விவாதத்தில் இஸ்லாம்தான் சத்தியமான இறைமார்க்கம், குர்ஆன் இறைவேதம்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான், முஹம்மது (ஸல்) உண்மையாளர், நேர்மையாளர் என்பதை இன்ஷா அல்லாஹ் நாங்கள் மக்கள் மத்தியில் நிரூபிப்போம்.

அதுமட்டுமல்லாது கிருத்துவம் என்பது ஒரு மாயை என்றும், எங்கள் உயிரிலும் மேலான இறைத்தூதர் (ஏசு என்ற) ஈஸா (அலை) அவர்கள் கடவுளோ கடவுளுடைய மகனோ அல்ல மாறாக சங்கைக்குரிய மற்ற இறைத்தூதர்களைப் போன்ற ஒரு தீர்க்கதரிசிதான் என்றும், தற்போதுள்ள பைபிள் இறைவேதமல்ல என்றும் அல்லாஹ்வின் துணைகொண்டு உங்கள் வாய்களாலேயே ஒப்புக்கொள்ள வைக்கிறோம் - இன்ஷா அல்லாஹ். மேலும் நீங்கள் புனிதமான வேதமாகக் கருதும் பைபிளிலுள்ள முரண்பாடுகளையும், பைபிளிலுள்ள அசிங்கங்களையும், குளறுபடிகளையும் பைபிளிலிருந்தே எடுத்துக்காட்டி மக்கள் முன்னிலையில் நிரூபித்திட நாங்கள் தயார் இன்ஷா அல்லாஹ்.

அதுபோல இஸ்லாம் தவறான மார்க்கம், குர்ஆன் இறைவேதமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதரல்ல என்றும் கிருத்துவமே உண்மையான இறைமார்க்கம் என்றும் நிரூபிக்கும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது. குறிப்பாக முஸ்லீம்களை முல்லாக்கள் என்றும் மூடர்கள் என்றும் சித்ததிரிக்கும் உங்களுடன் விவாதம் செய்வதற்கு எங்கள் இஸ்லாமிய இணையப் பேரவையிலுள்ள அறிஞர்களான முன்னால் பாஸ்டர்கள், மாஜி பாதிரியார்கள், ரெவரண்டுகள் என்று அனைவரும் தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

எனவே இந்த அறிய சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடாமல் விவாதத்தை தமிழகத்தில் எங்கு எப்போது எப்படி நடத்துவது?, விவாதத்தில் பங்கு கொள்வோர் மற்றும் பார்வையாளர்கள் பற்றிய கருத்துப் பறிமாற்றத்திற்காகவும், விவாத ஒப்பந்தத்திற்காகவும் உங்களின் பிரதிநிதிகளும் எங்களின் பிரதிநிதிகளும் முதலில் சந்தித்து கலந்முரையாடி முடிவெடுக்கட்டும். விவாத ஒப்பந்தமும், விவாதமும் தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதில் கலந்து கொள்வதற்கு இஸ்லாமிய இணையப் பேரவை தயாராகவுள்ளது.

நீங்கள் பைபிளை இறைவேதமாக நம்புகிறீர்கள். உண்மை இறைவேதமாம் குர்ஆனும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுமே இஸ்லாத்தின் மூலாதாரமாகும். எனவே நம்முடைய விவாதம் குர்ஆன், நபிமொழி மற்றும் பைபிளை மையமாக வைத்து மட்டுமே நடக்கவேண்டும்.

மற்ற கிருத்துவ அமைப்புகளைப் போன்று முஸ்லீம்களிடம் விவாதம் செய்கிறோம் பேர்வழி என்று சவடால்விட்டுவிட்டு விவாத மேடைவரை வந்தபிறகும் விவாத செய்யாமல் புறமுதுகிட்டு ஒடி ஒழிந்த தொடை நடுங்கிகளாக, பேடிகளாக இல்லாமல், நீங்கள் கொண்ட கொள்கையை எங்களிடம் பகிரங்கமாக நிரூபிப்பதற்கு நாங்கள் விடுக்கும் இந்த பகிரங்க சவாலை ஏற்றுக் கொள்வீர்கள் என்று மீண்டும் நம்புகிறோம்.

இதற்கான பதிலை 25-01-2008 தேதிக்குள் iiponline@gmail.com என்ற எங்கள் ஈமெயிலுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறறோம்.


இப்படிக்கு
இஸ்லாமிய இணையப் பேரவை
Date : 20-01-2007