சென்னையில் பணத்துக்காக குழந்தைய கடத்திய கிருத்துவ பாதிரியார் கைது


03. பள்ளியில் விளையாடிய மாணவியை கடத்திய பாதிரியார் கைது: பணம் கேட்டு மிரட்டியவரை காட்டி கொடுத்தது மொபைல் போன்


சென்னை: பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் வகுப்பு மாணவியை, பாதிரியார் பயிற்சி முடித்தவர் கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டினார்.

கடத்தல் நபரின் இருப்பிடத்தை, அவரது மொபைல் போன் காட்டிக் கொடுத்தது. பாதிரியார் மற்றும் அவருக்கு உதவிய நபர்களை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் ஜி.கே.எம்., காலனியை சேர்ந்த சையத் அம்ஜித் உசேன். இவர் வீட்டில் இருந்து கொண்டே மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பணி செய்து வருகிறார். இவரது மகள் சுபியா நுரைன்(7); அண்ணாநகர் ஆதர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை 4.15 மணிக்கு பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். மாணவியை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம நபர், மாணவியிடம், சூஉங்கள் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். உன்னை அவசரமாக அழைத்து வரச் சொன்னார்' என கூறினார். அதனை நம்பிய சிறுமி, மர்ம நபருடன் டூவீலரில் சென்றார்.

பள்ளியில் உள்ள சுபியா நுரைனை அழைத்து செல்ல, கார் டிரைவர் சென்றிருந்தார். வழக்கமாக பள்ளியில் சிறுமி இருக்கும் இடத்தில் அவர் இல்லை. பல இடங்களில் தேடிப் பார்த்த டிரைவர், சுபியா காணாமல் போன தகவலை அவரது தந்தையிடம் கூறினார். பள்ளி சீருடையில் உள்ள அடையாள அட்டையில், மாணவியின் தந்தை மொபைல் போன் எண் இருந்தது. கடத்தல் நபர், சூஉங்கள் மகளை கடத்தியுள்ளேன். ரூ.15 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறேன். போலீசுக்கு சென்றால் மகளை கொலை செய்து விடுவேன்' என, மிரட்டினார். அதனால் உடனடியாக போலீசுக்கு செல்லாமல் சிறுமியின் தந்தை காலதாமதம் செய்தார். கடத்தல் நபரிடம் இருந்து மீண்டும் போன் வரும் என காத்திருந்தார். வெகு நேரமாகியும் போன் வராததால், மகள் கடத்தல் குறித்து நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

அண்ணாநகர் துணை கமிஷனர் ஜெயகவுரி, உதவி கமிஷனர் ராமதாஸ், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தந்தையிடம் பேசிய மர்ம நபர், சூபோலீசுக்கு செல்ல வேண்டாம் என கூறினேன். ஆனால், போலீசில் புகார் கொடுத்துள்ளீர்கள். குழந்தையை உயிருடன் பார்க்க முடியாது' என, மிரட்டினான். தனிப்படை போலீசார் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், கடத்தல் நபர் பேசிய மொபைல் போன் முகவரியை கண்டறிந்தனர்.

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் கடை வைத்திருந்த ஆனந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். சூஎனது பெயரில் பல சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளேன்' என கூறினார். ஆனந்தகுமாரிடம் இருந்து சூசிம் கார்டுகள்' வாங்கிய சிலரை போலீசார் பிடித்து, கவனித்தனர். அதில் முக்கிய தகவல்கள் ஏதும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து கடத்தல் நபரின் மொபைல் போன் டவரை நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீசார் கண்காணித்தனர். புழல், செங்குன்றம், பெரம்பூர் என மாறி, மாறி டவர் லொகேசன் காட்டியது. இதற்கிடையே, புழல் அருகேயுள்ள சர்ச்சில் கடத்தப்பட்ட சிறுமி விடப்பட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

தனிப்படை போலீசார் சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர். மொபைல் போன் டவரை வைத்து கடத்தல் நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூரை சேர்ந்த பாதிரியார் பயிற்சி பெற்றவர் பிரேம் கார்த்திக்(25) போலீசில் அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு: வேலை கிடைக்காமல் சிரமப்பட்டேன். அண்ணா ஆதர்ஸ் பள்ளியில் வசதியானவர்களின் குழந்தைகள் படிப்பதை அறிந்தேன். பள்ளி குழந்தைகளில் யாரையாவது கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டேன். பள்ளியில் இருந்த சிறுமியை, அவரது தந்தைக்கு விபத்து ஏற்பட்டதாக கூறி கடத்தினேன்.

குழந்தையை டூவீலரில் கடத்திச் சென்றேன். புழல் காவாங்கரையில் எனது நண்பர் தீபக் வீடு உள்ளது. அவரிடம், சூஇந்த குழந்தை எனது நண்பரின் மகள். நண்பரின் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடக்கிறது. அதனால், குழந்தையை என்னிடம் கொடுத்து இரவு மட்டும் பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். இரவு மட்டும் குழந்தை இங்கு இருக்கட்டும்' என கூறி குழந்தையை நண்பரிடம் ஒப்படைத்தேன். போலீசார் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி விட்டேன். குழந்தையை கடத்திய விவரத்தை தனது நண்பரிடம் கூறவில்லை என வாக்குமூலம் அளித்தார். பாதிரியார் பிரேம் ஆனந்த், போலி முகவரிகளுடன் சூசிம் கார்டு' விற்பனை செய்த கடைக்காரர் ஆனந்தகுமார் மற்றும் பாதிரியாரின் நண்பர்கள் நரேஷ்குமார், ஹரி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடத்தப்பட்ட குழந்தை அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட தகவல் கிடைத்ததும், குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். குழந்தை திரும்ப கிடைக்க காரணமாக இருந்த போலீசாரை பாராட்டி நன்றி சொல்வதற்காக, குழந்தையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவரது தந்தை நேற்று காலை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் நாஞ்சில் குமரன், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷன் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

சம்பவம் குறித்து கமிஷனர் நாஞ்சில் குமரன் கூறுகையில்,சூபள்ளியில் படிக்கும் குழந்தைகள் பத்திரமாக வீட்டிற்கு திரும்பி விட்டதா என்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். பெற்றோருடன் இணைந்து பள்ளி நிர்வாகிகள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்தாண்டு சூளைமேடு பகுதியில் வீட்டில் வேலை பார்த்த நபரே, எஜமானரின் பெண் குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டினார். அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது' என்று தெரிவித்தார்.