``நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்'
நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார்
ஏசுதான்.அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.
நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம்
`பைபிள்' என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என்னை
அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.
எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்'தான். நான்
கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம்
சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.
எனக்கு இனி கர்த்தர்தான் உலகம்.
அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.''
இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து
அவர், `பைபிள்' வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார். .
ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்
பிரபல சினிமா நடிகையும் கதாநாயகியுமான சகோதரி நக்மா இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்
மேலே உள்ளவாறு எல்லாம் கிருத்துவின் ஊழிக்காரர்களாக உண்மையை உரைத்து வரும் தெய்வ மகன்களும், சத்தியவான்களும் அடித்து விட்டிருந்தார்கள் "வாயில் கர்த்தர் பேசுகின்றார்" என்று சொன்ன காத்தரின் விசுவாசிகளுக்கு வாயிலேயே ஆப்படித்துள்ளார் கவாச்சி நடிகை நக்மா. கிழேயுள்ள இன்றைய தினமலர் செய்தியை வாசியுங்கள். இப்போது தெறிகின்றதா கர்த்தரின் பெயரால் ஆசிர்வாதிக்கப்பட்ட இவர்களின் உண்மை முகம்??
மதம் மாறப் போவதாக வதந்தி :மறுக்கிறார் நடிகை நக்மா
சென்னை : கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக கூறப்பட்ட வதந்தியை, நடிகை நக்மா மறுத்துள்ளார். "நான் ஆன்மிகவாதி. ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்' என, அவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ மத போதகர் ஒருவர் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு, நக்மா பேசியதாக வெளியான தகவலை அடுத்து, இந்த வதந்தி பரவியது.இதை நக்மா மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:கிறிஸ்துவ மதம் பற்றி அறிந்து கொள்வதற்காக, அதுகுறித்த தகவல்களை படித்தேன். அப்போது, அந்த அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டது. நற்செய்தி கூட்டத்திற்கு வரும்படி என்னை அழைத்தனர். மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டேன். இவ்வளவு தான் நடந்தது. அதற்குள், நான், கிறிஸ்துவ மதத்திற்கு மாறப்போவதாக செய்திகள் வெளியாகி விட்டன.நான், ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள பெண். அதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட மத முத்திரையும் என் மீது குத்தப்படுவதை,விரும்பவில்லை. அனைத்து மதங்களுக்கும் பொதுவானவள். மத மாற்றம் தொடர்பான விஷயங்களில் எல்லாம், எனக்கு நம்பிக்கை இல்லை. யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது.எனது தாயார், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தந்தை இந்து. நான், கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தேன். கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தேன். எனது குடும்பத்தினர், அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். பகவத் கீதை, குரான், பைபிள் என, அனைத்தையும் படிக்கிறேன். மத சார்பற்ற பெண், என கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். மதபோதகராகும் திட்டம் எதுவும் இல்லை. நடிகையாவேன் என்று கூட நினைத்தது இல்லை. எனது எதிர்காலம் பற்றி, கடவுளுக்கு மட்டுமே தெரியும். கடவுள் தான், அதை முடிவு செய்ய வேண்டும். கடவுளைத் தேடி, எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். இவ்வாறு நக்மா கூறினார்.
நன்றி : தினமலர்
கர்த்தரின் பெயரால் பொய் சொல்கின்றார்கள் - நான் கிருத்துவத்திற்கு மாறவில்லை - நக்மா ஆவேச பேட்டி
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் கிருத்துவம், நக்மா, பொய்