9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கிருத்துவ பாதிரி

திருவனந்தபுரம்:கேரளாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியின் சகோதரியின் மர்ம மரணத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். இவரது சகோதரி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர். இந்த பள்ளி, அங்குள்ள தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.இங்கு பாதிரியாராக இருக்கும் ஜோசப் என்பவர், இந்த விடுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்தாண்டு அக்டோபரில் மாணவி ப்ரீதா மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதே விடுதியில் தங்கி படித்த ப்ரீதாவின் தங்கை, பாதிரியார் ஜோசப் மீது பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.ஜோசப், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, அந்த மாணவி கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மாறாக, புகார் தெரிவித்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.


இதையடுத்து, தனது தந்தையிடம் புகார் தெரிவித்த அந்த மாணவி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சில பகீர் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:பள்ளி விடுதிக்கு ஜோசப் அடிக்கடி வருவார். அவரின் பாதங்களை கழுவி விடும்படி கூறும் அவர், எங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார். என் சகோதரியும் இதேபோன்ற பாதிப்பிற்கு ஆளானார். என் சகோதரியை கடந்தாண்டு அக்டோபர் 21ம் தேதி இரவில், சிலர் விடுதியில் இருந்து, காரில் அழைத்துச் சென்றனர்.நள்ளிரவில் திரும்ப கொண்டு வந்து காரில் விட்டனர். என் சகோதரி மிகவும் களைப்பாக காணப்பட்டாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், அவள் சாப்பிடவில்லை.இதனால், விடுதி நிர்வாகியான பெண், அவளை கடுமையாக அடித்தார். இதேபோன்ற சித்திரவதை தொடர்ந்தது. ப்ரீதாவின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, என் தந்தை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பரிதாபமாக இறந்து விட்டாள்.இவ்வாறு அந்த மாணவி கூறினார்.


தற்போது இந்த வழக்கு விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜோசப் கைது செய்யப்பட்டு, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இருந்தாலும், ஜாமீன் கிடைத்ததை அடுத்து, அவர் வெளியில் வந்து விட்டார். மாணவி ப்ரீதா மரணம் தொடர்பாகவும், அதில் ஜோசப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி : தினமலர்