தமிழகம் : குழந்தைகளை கடத்தி விற்கும் கிருத்துவ பாதிரிகள் - உஷார்!!

கோவை:குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி, நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் வந்ததால், கிருஷ்ணகிரி எஸ்.பி., பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடும் பணி துவங்கியது. வாணியம்பாடி செல்வதற்காக ராமக்காள் என்ற பெண், கைக்குழந்தையுடன் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அப்போது குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தனலட்சுமி, ராமக்காளிடம் பேச்சு கொடுத்தார். கையிலிருந்த குழந்தை அழுத போது, பால் வாங்கிக் வரச் சொல்லி, குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக கூறினார். பால் வாங்க சென்ற ராமக்காள் திரும்பி வந்த போது தனலட்சுமி, குழந்தையோடு மாயமானாள்.

ராமக்காள் புகாரின்படி, தனலட்சுமியை ஒரு சில நாட்களில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூன்று மாதக்குழந்தையை பெரம்பலூரைச் சேர்ந்த கிரிஜா, ராணியிடம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிந்தது.கிருஷ்ணகிரி போலீசார் இரு பெண்களையும் கைது செய்து விசாரித்த போது, தனலட்சுமியின் உறவினரான செல்வராஜின் மகன் மூன்று வயது சிறுவன் தேவாவை கடத்தி விற்பனை செய்ததும் தெரிந்தது.சிறுவன் தேவாவை 20 ஆயிரம் ரூபாய்க்கு பெரம்பலூர் அருகே உள்ள பனப்பை என்ற இடத்தைச் சேர்ந்த பாதிரியார் சேவியர்அல்போன்சாவிடம் விற்பனை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார், பாதிரியாரை கைது செய்து விசாரித்தபோது, செஞ்சி அருகேயுள்ள தேவனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த மேரி, மணி தம்பதியருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு, சிறுவன் தேவாவை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.தகவலை தெரிந்து கொண்ட மணி, மேரி தம்பதியினர் சிறுவன் தேவாவை விட்டு விட்டு, தலைமறைவாகினர். சிறுவனை மீட்ட போலீசார், தந்தை செல்வராஜிடம் ஒப்படைத்தனர்.பாதிரியார் உட்பட நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததாக சிவனாண்டி கூறினார்

Thanks : Dinamalar