அனைத்து காரியங்களிலும் தங்களை போதுமானவர்களாக நினைப்பதே மக்கள் தங்களது மனசாட்சியை எதிர்பதற்கான காரணமாக உள்ளது. உதாரணமாக இஸ்லாத்தில் அவர்களின் பங்கை பற்றி விசாரிக்கும் போது மற்றவர்களை தொல்லைபடுத்தாமலும் நல்லவர்களாக இருக்க முயற்சிப்பதுமே போதுமானது என்று பலர் சொல்வார்கள். இருப்பினும் இவ்வாறு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். இதில் முக்கியமானது என்னவென்றால் இறைவனுக்கு அடிமையாக இருந்து அவனது விருப்பப்படி வாழ்வதாகும். அவன் இதை செய்யவில்லை என்றால் அவன் செய்யும் அனைத்திற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை மாறாக அவை அவனுக்கு கேடாகவே முடியும். இறைவன் குர்ஆனில் கூறுகிறான். எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்¢ மேலும் தான் நாடியவரை நேர்வழியில்
சேர்க்கிறான்¢ ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன். (ஸூறா பாதிர் :8)
ஒருவன் தனது முடிவே சரியானது என்று நினைக்கும் போது இறைவன் அவனது செயல்களை அவனுக்கு நல்லதாகவும் கவர்ச்சியானதாகவும் மாற்றிவிடுகிறான். இறைவனது முன்னிலையில் தாம் நல்லவர்களாக இலகிய மனம்படைத்தவர்களாக கொடைவள்ளல்களாக தங்களை நினைப்பவர்களே இத்தகையவர்கள். அவர்கள் நினைப்பதிலிருந்து உண்மை மிக வித்தியாசமாக இருக்கிறது. குர்ஆனில்; ஒருவன் தன்னை தானே போதுமாக்கி கொள்ளதே அவன் உண்மையிலிருந்து பிரிந்து போவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது குர்ஆன் என்று கூறுகிறது.எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது.. (ஸூறா அல்-அலக்: 6-7)
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முஸ்தஃனி என்ற அரபி சொல்லின் பொருள் தேவையற்றிருத்தல். திருப்தியடைதல் அதாவது ஒருவன் தன்னை இறைவனுக்கு நெருக்கமானவனாக நினைப்பதும் - இறைவனுக்கும் மறுமைக்கும் பயப்படுவதாகவும் - அவனது நல்லறங்களை போதுமானதாக கருதி அதைவிட சிறந்தவற்றுக்காக ஆசைப்படாமல் இருக்கும் மனப்பான்மையையே இந்த வசனம் கூறுகிறது. அதிகமானோர் இறைவனது வழியிலிருந்து பிரிந்துபோவதற்கு இதுவே காரணமாகும்.
மக்கள் தங்களை போதுமாக்கி கொண்டாலும் அவர்களது மனசாட்சிக்கு அவர்களின் உண்மை நிலையையும் அவர்கள் இறைவனுக்கு செய்ய தவறிய கடமைகள் என்னவென்பதும் தெரியும். இதனால் தான் அவர்கள் மரணத்தை பற்றியும் மறுமை பற்றியும் பேச மறுக்கிறார்கள். ஒருவர் அந்த தலைப்பை பேச ஆரம்பிக்கும் போது அவை மனசோர்வை ஏற்படுத்துவதால் அதை அவசர அவசரமாக மூடிவிட நினைக்கிறார்கள். இந்த மனச்சோர்வு ஏற்பட காரணம் அவர்கள் தங்களது மனசாட்சியுடன் போராடுகிறார்கள். அந்த விடயம் உள்ளுக்குள் பயத்தை ஏற்படுத்தும் என்று பயப்படுகிறார்கள்.
தனது மனசாட்சிக்கு கட்டுப்ப்டுபவர் தன்னை தானே போதுமாக்கி கொள்வது சாத்தியமற்ற ஒன்றாகும். அதற்கு மாறாக எல்லாவற்றிலும் நல்லவற்றை தேடி அதை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த சிந்திக்கவேண்டும். மனிதனது மனசாட்சி கணக்கு கொடுக்கும் நாளை எப்பொழுதும் ஞாபகப்படுத்துகிறது. இந்த உலகில் வாழ்ந்த கணக்கை இறைவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் தனது நல்லறங்களில் ஒரு போதும் நிறைவு காணமாட்டார். அவனது இறைவனால் கட்டளையிடப்பட்டவற்றை மிக கவனமாக செயல்படுத்துவார். இறைவனுக்காகவும் மறுமைக்காவும் எவர் உண்மையாகவே கஷ்டப்படுகிறாறோ அவரது நிலை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறதுஎவர்கள் (மறுமையைப் புற்ககணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே)
விரைந்து கொடுத்து விடுவோம்¢ பின்னரோ அ(த்தகைய வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்¢ அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும். (குர்ஆன் அல்-இஸ்றா: 18-19)
ஏன் சிலர் தமது மனசாட்சியை எதிர்கிறார்கள்?
பதிந்தது நேசமுடன் இஸ்லாம் நேரம்
குறிச்சொல் ஏன் சிலர் தமது மனசாட்சியை எதிர்கிறார்கள், ஹாரூன் யஹ்யா