மன உறுதி

ஒரு விசுவாசிக்கு மன உறுதி மிக அத்தியவசியான ஒன்றாகும். ஒரு விசுவாசி ஒரு போதும் அவனது ஆர்வத்தையும் பணிவையும் கைவிட மாட்டான். அவன் எப்பொழுதும் இறைவனின் திருப்தியை மட்டும் பெற்று கொள்வதற்காக கடினமாக உழைப்பான். அதனால் தான் அவனது முயற்சியை எந்த ஒன்றும் தடையாக இருப்பதில்லை. அவனது ஒரே குறிக்கோள் இறைவனது திருப்தியை பெற்று கொள்வதாகும். அதனை பெற்று கொள்ளும் முகமாக அவனது வாழ்வை மாற்றியமைத்து கொள்கிறான்.

இறைவன் நிச்சயமாக விசுவாசியின் மன உறுதியை சோதிப்பதற்காக விட்டு விட்டு தொல்லைகளுக்கு ஆளாக்குவது அல்லது பெரும் துன்பத்தில் துவளவிடுவதன் மூலமாகவும் பல பரீட்சைகளை வைக்கிறான். பரீட்சையை பற்றி பின்வருமாறு குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (சூரத்துல் பகரா:155)

இருப்பினும் விசுவாசியின் மன உறுதி எல்லா சூழ்நிலைகளிலும் அவனை அமைதியாக பொறுமையாக வைத்து கொள்கிறது. விசுவாசியின் இந்த மனநிலை பற்றி இறைவன் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.

மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.

'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக' என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை. (சூரத்துல் ஆல இம்ரான: 146-147)

மறுபுறத்தில் உறுதியற்று இருப்பது ஒரு உண்மையான விசுவாசியின் பண்பல்ல. இதை பின்வரும் குர்ஆனிய வசனம் உறுதி செய்கிறது.

உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்குமங்கும்) உழலுகின்றனர். (சூரத்துத்தவ்பா: 45)


மறுமையை விரும்பி, அதற்காக அவர்களது அனைத்து சக்தியை கொண்டு முயற்சிப்பது, தினசரி அலுவல்களில் ஆடம்பரத்தை தவிர்ந்து கொள்வது போன்றவைகள் விசுவாசியின் உறுதியான மனநிலையை எடுத்து காட்டுகிறது. 'தங்;களது முழு சக்தியை கொண்டும் முயற்சிப்பவர்களை' பற்றி குர்ஆன் கூறும் போது:

இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும். (பனீ இஸ்ராயீல்17:19)


விசுவாசியை பொருத்தவரையில் மன உறுதி மிக முக்கியமான ஒன்றாகும். 'இலகுவான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும்' (சூரத்துத்தவ்பா:42) இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களால் உறுதியான மன உறுதியை காட்ட முடியாது. மறுபுறத்தில், விசுவாசிகள், அவர்களிடம் என்ன எதிர்பார்க்ப்படுகிறது என்பதை அறிந்து அவர்கள் மரணத்தை சுவைக்கும் வரை எவ்வித மாற்றமில்லாத உறுதியை காண்பிப்பார்கள்.

மன உறுதியாக இருந்த கஃப் சமூகம் (அல் கஃப்: 14) விசுவாசிகளுக்கு மன உறுதி என்ற பண்பிற்கு சிறந்த உதாரணமாகும். தொடர்ந்து தொழுவதும் மன உறுதிக்கு மிக முக்கியமானதாகும். விசுவாசியின் உறுதிக்கு மரணம் தான் முடிவு சொல்லும். மரணம் வரும் வரை பொருமை கொண்டு இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வது வருவது ஒரு விசுவாசியின் கடமையாகும்

.நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக
அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான் நற்கூலியை விரைவில் வழங்குவான். (ஸூரத்துல் ஃபத்ஹ்:10)