கோவை:குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியார் மற்றும் மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி, நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் வந்ததால், கிருஷ்ணகிரி எஸ்.பி., பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடும் பணி துவங்கியது. வாணியம்பாடி செல்வதற்காக ராமக்காள் என்ற பெண், கைக்குழந்தையுடன் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.அப்போது குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த தனலட்சுமி, ராமக்காளிடம் பேச்சு கொடுத்தார். கையிலிருந்த குழந்தை அழுத போது, பால் வாங்கிக் வரச் சொல்லி, குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக கூறினார். பால் வாங்க சென்ற ராமக்காள் திரும்பி வந்த போது தனலட்சுமி, குழந்தையோடு மாயமானாள்.
ராமக்காள் புகாரின்படி, தனலட்சுமியை ஒரு சில நாட்களில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மூன்று மாதக்குழந்தையை பெரம்பலூரைச் சேர்ந்த கிரிஜா, ராணியிடம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிந்தது.கிருஷ்ணகிரி போலீசார் இரு பெண்களையும் கைது செய்து விசாரித்த போது, தனலட்சுமியின் உறவினரான செல்வராஜின் மகன் மூன்று வயது சிறுவன் தேவாவை கடத்தி விற்பனை செய்ததும் தெரிந்தது.சிறுவன் தேவாவை 20 ஆயிரம் ரூபாய்க்கு பெரம்பலூர் அருகே உள்ள பனப்பை என்ற இடத்தைச் சேர்ந்த பாதிரியார் சேவியர்அல்போன்சாவிடம் விற்பனை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார், பாதிரியாரை கைது செய்து விசாரித்தபோது, செஞ்சி அருகேயுள்ள தேவனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த மேரி, மணி தம்பதியருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு, சிறுவன் தேவாவை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.தகவலை தெரிந்து கொண்ட மணி, மேரி தம்பதியினர் சிறுவன் தேவாவை விட்டு விட்டு, தலைமறைவாகினர். சிறுவனை மீட்ட போலீசார், தந்தை செல்வராஜிடம் ஒப்படைத்தனர்.பாதிரியார் உட்பட நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததாக சிவனாண்டி கூறினார்
Thanks : Dinamalar
தமிழகம் : குழந்தைகளை கடத்தி விற்கும் கிருத்துவ பாதிரிகள் - உஷார்!!
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவ பாதிரிகள், குழந்தை கடத்தல்
9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கிருத்துவ பாதிரி
திருவனந்தபுரம்:கேரளாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியின் சகோதரியின் மர்ம மரணத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். இவரது சகோதரி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர். இந்த பள்ளி, அங்குள்ள தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.இங்கு பாதிரியாராக இருக்கும் ஜோசப் என்பவர், இந்த விடுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்தாண்டு அக்டோபரில் மாணவி ப்ரீதா மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதே விடுதியில் தங்கி படித்த ப்ரீதாவின் தங்கை, பாதிரியார் ஜோசப் மீது பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.ஜோசப், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, அந்த மாணவி கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மாறாக, புகார் தெரிவித்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, தனது தந்தையிடம் புகார் தெரிவித்த அந்த மாணவி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சில பகீர் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:பள்ளி விடுதிக்கு ஜோசப் அடிக்கடி வருவார். அவரின் பாதங்களை கழுவி விடும்படி கூறும் அவர், எங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார். என் சகோதரியும் இதேபோன்ற பாதிப்பிற்கு ஆளானார். என் சகோதரியை கடந்தாண்டு அக்டோபர் 21ம் தேதி இரவில், சிலர் விடுதியில் இருந்து, காரில் அழைத்துச் சென்றனர்.நள்ளிரவில் திரும்ப கொண்டு வந்து காரில் விட்டனர். என் சகோதரி மிகவும் களைப்பாக காணப்பட்டாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், அவள் சாப்பிடவில்லை.இதனால், விடுதி நிர்வாகியான பெண், அவளை கடுமையாக அடித்தார். இதேபோன்ற சித்திரவதை தொடர்ந்தது. ப்ரீதாவின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, என் தந்தை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பரிதாபமாக இறந்து விட்டாள்.இவ்வாறு அந்த மாணவி கூறினார்.
தற்போது இந்த வழக்கு விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜோசப் கைது செய்யப்பட்டு, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இருந்தாலும், ஜாமீன் கிடைத்ததை அடுத்து, அவர் வெளியில் வந்து விட்டார். மாணவி ப்ரீதா மரணம் தொடர்பாகவும், அதில் ஜோசப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
நன்றி : தினமலர்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம்
அதிகரிக்கும் அமெரிக்க சர்ச்சுகளுக்கு எதிரான செக்ஸ் புகார்கள்
Sex claims against US Church rise
The number of new claims of sexual abuse made against US Roman Catholic priests rose by 16% to more than 800 last year, a Church report says.
It says the Church paid $436m (£313m) in 2008 for abuse cases. Most of the money was used to compensate victims.
The study covered almost 200 dioceses and religious orders across the US.
It found that more than one in five victims were under the age of 10 when they were abused.
Although the number of claims made against the Church rose in 2008, the total cost dropped by 29% compared to the previous year.
The Associated Press news agency said 2007 was an unusually high year, when the Archdiocese of Los Angeles began paying a $660m settlement to about 500 people.
The annual review tracks progress made in implementing the Charter for the Protection of Children, adopted by US bishops following a scandal in Boston in 2002.
Cardinal Francis George of Chicago said the Church was "on the right path" in its quest to better protect "all children in society".
Thanks : BBC NEWS
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் christians, church, sex scandal, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம், கிருத்துவர்கள், பாதிரிகள்
இளம்பெண்ணிடம் சில்மிஷம் கிறிஸ்தவ போதகருக்கு வலை
நன்றி : தினமலர்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் muslim, கற்பழிப்பு, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம்
பெண்ணை கடத்தி சென்று கற்பழிப்பு: உதவி பங்குத்தந்தை சிறையிலடைப்பு
திருவாரூர்: இளம்பெண்ணை கடத்திச்சென்று கற்பழித்த, திருத்துறைப்பூண்டி உதவி பங்குத்தந்தை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பிரான்சிஸ்; ரேடியோ மெக்கானிக். இவரது மகள் ஜெனீபர் (20). திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் உதவி பங்குத்தந்தையாக பணி செய்பவர் ஜான்விக்டர் (30).
ஜெனீபருக்கு டீச்சர் டிரைனிங் படிக்க சீட்டு வேண்டுமென பிரான்சிஸ், ஜான்விக்டரிடம் முயற்சி செய்தார். சீட்டு வாங்கித் தருவதாகக் கூறிய ஜான்விக்டர், ஜெனீபரை செப்., 26ம் தேதி அழைத்துச் சென்றவர், மீண்டும் ஊர் திரும்பவில்லை. இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீசில், ஜெனீபரை ஜான்விக்டர் கடத்திச் சென்றதாக பிரான்சிஸ் புகார் செய்தார். செப்., 29ம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி போலீசார், ராயநல்லூரியில் இருந்த ஜான்விக்டர் மற்றும் ஜெனீபர் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜெனீபரை, ஜான்விக்டர் கேரளாவுக்கு கடத்திச் சென்று அங்கு வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். அங்கு ஜெனீபரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கற்பழித்துள்ளார். தற்போது, அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என ஜான்விக்டர் கூறிவிட்டார்.
ஜெனீபர் கொடுத்த புகாரின் பேரில், ஜான்விக்டரை போலீசார் கைது செய்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் பாஸ்கரன், வழக்கை ஏற்று உதவி பங்குத்தந்தை ஜான்விக்டரை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவிட்டார். ஜெனீபரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் christian, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம், பாதிரிகள், பாதிரியார்கள்
மதுரை கிருத்தவ பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு
மதுரை: மதுரை-ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் கீழ் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜோசப் ஆனந்தராஜ் என்பவர் தனக்கு இடமாறுதல் வேண்டினார்.
அவரது இடமாறுதலுக்காக மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தை அமைப்பு செயலாளர் பாண்டியம்மாள் சிபாரிசு செய்துள்ளார்.
ஆனால் அந்த பரிந்துரையை மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் தன்னை பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஜாதி பெயரை கூறி திட்டியதாக காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகார் செய்தார்.
அதன் பேரில் மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாண்மை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றிங்க..
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் christian, கிருத்துவ தீவிரவாதம், கிருத்துவ பாதிரிகள், தீண்டாமை
பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் கற்பழிப்பு புகார்
02. பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் கற்பழிப்பு புகார்
கிருஷ்ணகிரி: இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த புகாரில் சிக்கிய பாதிரியார் மீது, மற்றொரு பெண்ணும் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி கந்திகுப்பம் மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் பாதிரியார் குமார்(40). போச்சம்பள்ளியில் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். சின்னகுத்த குளத்தைச் சேர்ந்த தமயந்தி(24) என்பவரை, கடத்திச் சென்று கற்பழித்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாதிரியார் தன்னை கற்பழித்து விட்டதாக மற்றொரு இளம்பெண்ணும் புகார் தெரிவித்துள்ளார்.
பாலக்கோடு அனுமந்தபுரம் ராஜா மகள் சுஜிதா(18) கூறியதாவது: அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2004ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்தேன். அப்போது, எங்கள் பகுதிக்கு வந்த பாதிரியார் குமார், தான் பணக்காரராக இருப்பதால், ஏழை பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி எங்கள் குடும்பத்தில் பெண் கேட்டார். பெண் கொடுக்க மறுக்கவே, நான் பள்ளி விட்டு வந்த போது காரில் கடத்திச் சென்று, தனி அறையில் அடைத்து கற்பழித்தார்.
நடந்தவற்றை கூறி பெற்றோரை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் குடி அமர்த்தினார். என்னை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். படுக்கையறையில் மட்டும் மனைவியாக ஏற்றுக்கொண்ட அவர், வெளி ஆட்களிடம், "வீட்டில் வேலை செய்யும் பெண்' என்று கூறி வந்தார். சென்னையில் இருந்த போது மூன்று முறை நான் கர்ப்பம் அடைந்தேன்; கர்ப்பத்தை கலைத்து விட்டார். பாதிரியார் குமார், பெங்களூருவில் சோபியா என்பவருடனும், சென்னையில் ராணி, இந்திரா ஆகியோருடனும், கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்டஹள்ளியைச் சேர்ந்த ஒரு பெண் என நான்கு பேரை திருமணம் செய்துள்ளார்.
இரவில் பல ஆண்கள் மற்றும் பெண்களுடன் வீட்டுக்கு வரும் குமார், என்னை குளியலறையில் வைத்து பூட்டி விட்டு உல்லாசமாக இருப்பார். கடந்த ஜனவரி மாதம் குமார் என்னை மருதேப்பள்ளிக்கு அழைத்து வந்தார். அங்கு வந்த எனது தாய், தந்தையிடம் நடந்தவற்றை கூறி நான் அவர்களோடு சென்றுவிட்டேன். எனது வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது என்று நினைத்திருந்தேன். பாதிரியார் குமார், தமயந்தி என்பவரை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை படித்தவுடன், "என் போன்று வேறு எந்த பெண்ணும் ஏமாறக் கூடாது' என்ற நோக்கில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு சுஜிதா கூறினார்.
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கற்பழிப்பு, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம்
இளம்பென் கற்பழிப்பு - தமிழகத்தில் மீண்டும் ஒரு கிருத்துவ பாதிரியார் கைது
08. கற்பழிப்பு வழக்கில் பாதிரியார் கைது : சொகுசு கார் பறிமுதல்
கிருஷ்ணகிரி: இளம் பெண்ணை கற்பழித்த வழக்கில் பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி, கந்திகுப்பம் மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் குமார்(40); பாதிரியார். விவாகரத்து பெற்றவர். போச்சம்பள்ளி வட்டாரத்தில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கிராமங்களில் இரவு நேரத்தில் பிரசாரம் முடித்து, அந்த பகுதி ஆலயம் அல்லது வீடுகளில் தங்கி விடுவார்.
போச்சம்பள்ளி அடுத்த சின்னகுத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோவிந்தன்; இவரது மகள் தமயந்தி(24). பயிற்சி பாதிரியார் குமார், சின்னக்குத்தகுளம் கிராமத்தில் பிரசாரம் செய்த போது தமயந்தி குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது. "கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தால் அனைத்து வசதியும் செய்து கொடுப்பேன்' என்று, குமார் கூறியுள்ளார். இதில் நெருக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமயந்தி புலியூர் கூட்டுரோட்டில் பஸ்சுக்கு நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த குமார், அவரை காரில் அழைத்து சென்றார். ஆந்திர மாநிலம் குப்பத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டி, கற்பழித்தார். இது பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சின்னப்பாரண்டப்பள்ளி உமாபதிக்கு, தமயந்தியை திருமணம் செய்து வைத்தனர். தற்போது, ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் தமயந்தி, மன உளைச்சலால், கற்பழிக்கப்பட்ட விஷயத்தை கணவரிடம் கூறி விட்டார். போலீசிலும் புகார் செய்தார். விசாரித்த போலீசார் பாதிரியார் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்த சொகுசு கார் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கோர்ட் உத்தரவு பெற்று மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நன்றிங்க..
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கற்பழிப்பு, காமம், கிருத்துவ பாதிரிகள்
சிறுமியை கற்பமாக்கிய தமிழக பாதிரியாருக்கு ஜாமீன் மறுப்பு
பாதிரியாருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை : பள்ளி மாணவியை கற்பழித்த வழக்கில், பாதிரியாரை ஜாமீனில் விட சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எங்காலப்பட்டி சாவடியூரைச் சேர்ந்தவர் சுமத்ரா. ஒன்பதாவது வகுப்பு படிக்கிறார். கடந்த ஆண்டு மே மாத விடுமுறையின் போது பைபிள் போதனை பயிற்சி வகுப்புக்கு சென்றார். பயிற்சிக்கு வந்தவர்களை பாலக்கோடு அருகில் உள்ள அணைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். அப்போது கிருஷ்ணகிரி அருகில் உள்ள இலத்தகிரியைச் சேர்ந்த பாதிரியார் அமலநாதன் என்பவர் சுமத்ராவிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால், கர்ப்பமடைந்த சுமத்ரா, தர்மபுரி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, கடந்த மாதம் அமலநாதன் கைது செய்யப்பட்டார்.தனக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில், அமலநாதன் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி சுதந்திரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர்
தொடர்புடைய பதிவுகள் :
1) 9ம் வகுப்பு மாணவியை பைபிள் பயிற்சி என கற்ப்பமாக்கிய கிருத்துவ பாதிரியார் கைது
2) பிஷப் அறிவிப்பால் சிறுமிகளை கற்பழிக்க தமிழக பாதிரிகள் ஆர்வம்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கற்பழிப்பு, கிருத்துவ பாதிரிகள், பைபிள் பாடம்
ரூ.10 லட்சத்தை திருடிய கிருத்துவ பிஷப்
ரூ. 10 லட்சம் சுருட்டியதாக பிஷப் மீது புகார்
சென்னை : "தொண்டு நிறுவனம் மூலம் உதவி செய்வதாகக் கூறி, பல லட்ச ரூபாயை ஏமாற்றிவிட்டார்' என, பிஷப் ஒருவர் மீது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட திருச்சபை ஊழியர்கள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர்.
தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட திருச்சபை ஊழியர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்தனர். புகாரின் விவரம்:சென்னை நெசப்பாக்கம் ஜெயபாலாஜி நகர் அன்னம்மாள் நகரில், "தி வோர்ல்டு ரிவைவல் மிஷன்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்துபவர் பிஷப் விக்டர். இவரும், இவரது மனைவியும் 2006ம் ஆண்டு எங்களது திருச்சபைகளை அணுகி, "எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் ஏழைகள், ஆதரவற்ற முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், மனநலம் குன்றியவர்கள், கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 ஓய்வு ஊதியம் வழங்கி வருகிறோம். உதவி பெற விரும்புவோர் பதிவு கட்டணமாக ரூ.200ம், போக்குவரத்து செலவு ரூ.200ம் தந்து உறுப்பினராக வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதை நம்பி நாங்கள், எங்கள் உறுப்பினர்களிடம் ரூ.10 லட்சம் வசூலித்து அவர்களிடம் தந்தோம். பிஷப் விக்டர் உறுதியளித்தது போல எந்த உதவியும் செய்யவில்லை. மீறி கேட்டால், ரவுடிகளை வைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். கடந்த 30ம் தேதி, பணம் தருவதாக கூறி, எங்களை சென்னைக்கு வரவழைத்தனர். நாங்கள் வந்தபோது 30க்கும் மேற்பட்ட குண்டர்கள் "இனியும் பணம் கேட்டு பிஷப் வீட்டிற்கு வந்தால், யாரும் உயிரோடு திரும்பி போக மாட்டீர்கள்' என்று மிரட்டினர். எனவே, நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம், கிருத்துவர்கள், திருட்டு
பாதிரியார் கற்பழித்த சிறுமிக்கு ஆண் குழந்தை
01. பாதிரியார் கற்பழித்த மாணவிக்கு ஆண் குழந்தை
பாலக்கோடு : பாதிரியாரால் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பாலக்கோடு எலங்காலப்பட்டி சாவடியூரைச் சேர்ந்த அமலநாதன் மகள் சுமத்ரா மேரி(16); பள்ளி மாணவி. கடந்தாண்டு மே மாதம் நடந்த பைபிள் போதனை வகுப்பில் பங்கேற்றார். எலத்தகிரி பாதிரியார் அமலநாதன் பயிற்சி முடிவில், மாணவ, மாணவியரை தும்பலஹள்ளி அணைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். அங்கு, பாதிரியார் தன்னை கற்பழித்து விட்டதாக சமீபத்தில் சுமத்ராமேரி போலீசில் புகார் செய்தார். வழக்கில் பாதிரியார் அமலநாதன் கைது செய்யப்பட்டார். நிறைமாத கர்ப்பிணி சுமத்ரா மேரி, பிரசவத்துக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.
நன்றி : தினமலர்
தொடர்புடைய பதிவுகள் :
1) 9ம் வகுப்பு மாணவியை பைபிள் பயிற்சி என கற்ப்பமாக்கிய கிருத்துவ பாதிரியார் கைது
2) பிஷப் அறிவிப்பால் சிறுமிகளை கற்பழிக்க தமிழக பாதிரிகள் ஆர்வம்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கற்பழிப்பு, கிருத்துவ பாதிரிகள், பைபிள் பாடம்
சுவாசமுள்ள யாவும் ஏசுவின் இறைவனாகிய அல்லாஹ்வைத் துதிப்பதாக அல்லேலூயாa
நேர்வழி பெற்ற இறைநம்பிக்கையுடையோர் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!
உண்மையடியான் வலைப்பூ (BLOGSPOT) ஆசிரியர்களுக்கு
இஸ்லாமிய இணையப் பேரவை நிர்வாகம் தெரிவிப்பது....
இஸ்லாத்தைப் பற்றிய உங்களின் தவறான எண்ணங்களையும், வெறுப்பையும் பல ஆக்கங்கள் மூலம் வலைப்பூக்களில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த 16-01-2008 அன்று உங்களின் வலைப்பூவான unmaiadiyann.blogspot ல் இஸ்லாமிய இணையப்பேரவைக்கு பதில் என்ற ஒரு பதிவைப் பார்வையிட்டோம். அதில் இஸ்லாம் கொலைகார மார்க்கம் என்று புனைவதற்கு படாதபாடு பட்டுள்ளீர்கள்.
இவ்வாறு முஹம்மது பொய்யன், இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டி மார்க்கம், குர்ஆனில் பல முரண்பாடுகள் உள்ளன, கிருத்துவமே இறைமார்க்கம், ஏசுதான் வணங்கத் தகுதியான கடவுள் (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்) என்று இணையத்தில் அவதூறு பரப்புபவர்களின் பட்டியலில் நீங்களும் இணைந்துள்ளீர்கள் என்பதைத்தான் உங்களின் பல பதிவுகள் தெளிவுபடுத்துகிறது.
நோவா, ஆப்ரஹாம், மோஸே, ஏசு, முஹம்மது (அவர்கள் அனைவர் மீதும் இறை சாந்தி என்றும் நிலவட்டுவாக) போன்ற சங்கைமிக்க இறைத்தூதர்கள் சத்திய இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னபோது, இன்று நீங்கள் எவ்வாறு இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்க்கின்றீர்களோ அது போலவே அந்தந்த நபிமார்கள் மீதும், இறைக் கொள்கையை மறுத்த அன்றைய மக்கள் இவ்வாறே வசைமாறிப் பொழிந்தனர். எனவே நீங்கள் இஸ்லாத்திற்கெதிராக இன்று இணையதளங்கள் மூலம் செய்து கொண்டிருக்கும் இழிசெயல்கள் முஸ்லீம்களாகிய எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.
இப்படி தொடர்ச்சியாக இணையங்களில் உங்களின் சொற்போரை நடத்தாமல் ஆரோக்கியமான திறந்தவெளி விவாதத்திற்கு நீங்கள் முன்வாருங்கள் என்று இஸ்லாமிய இணையப்பேரவை உங்களை அன்புடன் அழைக்கிறது.
இஸ்லாம் என்பது ஒரு பொய்யான மார்க்கம் - கிருத்துவமே உண்மையான இறைமார்க்கம் என்று நீங்கள் உறுதியாக நம்புவதால், உங்களின் நம்பிக்கைப்படி தவறான மார்க்கத்திலுள்ள முஸ்லீம்களாகிய எங்களை நேர்வழியின் பக்கம் அழைப்பது உங்களின் மீது கடமை. எனவே உங்கள் கடமையை உணர்ந்து எங்களின் இந்த பகிரங்க விவாத அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அந்த பகிரங்க விவாதத்தில் இஸ்லாம்தான் சத்தியமான இறைமார்க்கம், குர்ஆன் இறைவேதம்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான், முஹம்மது (ஸல்) உண்மையாளர், நேர்மையாளர் என்பதை இன்ஷா அல்லாஹ் நாங்கள் மக்கள் மத்தியில் நிரூபிப்போம்.
அதுமட்டுமல்லாது கிருத்துவம் என்பது ஒரு மாயை என்றும், எங்கள் உயிரிலும் மேலான இறைத்தூதர் (ஏசு என்ற) ஈஸா (அலை) அவர்கள் கடவுளோ கடவுளுடைய மகனோ அல்ல மாறாக சங்கைக்குரிய மற்ற இறைத்தூதர்களைப் போன்ற ஒரு தீர்க்கதரிசிதான் என்றும், தற்போதுள்ள பைபிள் இறைவேதமல்ல என்றும் அல்லாஹ்வின் துணைகொண்டு உங்கள் வாய்களாலேயே ஒப்புக்கொள்ள வைக்கிறோம் - இன்ஷா அல்லாஹ். மேலும் நீங்கள் புனிதமான வேதமாகக் கருதும் பைபிளிலுள்ள முரண்பாடுகளையும், பைபிளிலுள்ள அசிங்கங்களையும், குளறுபடிகளையும் பைபிளிலிருந்தே எடுத்துக்காட்டி மக்கள் முன்னிலையில் நிரூபித்திட நாங்கள் தயார் இன்ஷா அல்லாஹ்.
அதுபோல இஸ்லாம் தவறான மார்க்கம், குர்ஆன் இறைவேதமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதரல்ல என்றும் கிருத்துவமே உண்மையான இறைமார்க்கம் என்றும் நிரூபிக்கும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது. குறிப்பாக முஸ்லீம்களை முல்லாக்கள் என்றும் மூடர்கள் என்றும் சித்ததிரிக்கும் உங்களுடன் விவாதம் செய்வதற்கு எங்கள் இஸ்லாமிய இணையப் பேரவையிலுள்ள அறிஞர்களான முன்னால் பாஸ்டர்கள், மாஜி பாதிரியார்கள், ரெவரண்டுகள் என்று அனைவரும் தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
எனவே இந்த அறிய சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடாமல் விவாதத்தை தமிழகத்தில் எங்கு எப்போது எப்படி நடத்துவது?, விவாதத்தில் பங்கு கொள்வோர் மற்றும் பார்வையாளர்கள் பற்றிய கருத்துப் பறிமாற்றத்திற்காகவும், விவாத ஒப்பந்தத்திற்காகவும் உங்களின் பிரதிநிதிகளும் எங்களின் பிரதிநிதிகளும் முதலில் சந்தித்து கலந்முரையாடி முடிவெடுக்கட்டும். விவாத ஒப்பந்தமும், விவாதமும் தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதில் கலந்து கொள்வதற்கு இஸ்லாமிய இணையப் பேரவை தயாராகவுள்ளது.
நீங்கள் பைபிளை இறைவேதமாக நம்புகிறீர்கள். உண்மை இறைவேதமாம் குர்ஆனும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுமே இஸ்லாத்தின் மூலாதாரமாகும். எனவே நம்முடைய விவாதம் குர்ஆன், நபிமொழி மற்றும் பைபிளை மையமாக வைத்து மட்டுமே நடக்கவேண்டும்.
மற்ற கிருத்துவ அமைப்புகளைப் போன்று முஸ்லீம்களிடம் விவாதம் செய்கிறோம் பேர்வழி என்று சவடால்விட்டுவிட்டு விவாத மேடைவரை வந்தபிறகும் விவாத செய்யாமல் புறமுதுகிட்டு ஒடி ஒழிந்த தொடை நடுங்கிகளாக, பேடிகளாக இல்லாமல், நீங்கள் கொண்ட கொள்கையை எங்களிடம் பகிரங்கமாக நிரூபிப்பதற்கு நாங்கள் விடுக்கும் இந்த பகிரங்க சவாலை ஏற்றுக் கொள்வீர்கள் என்று மீண்டும் நம்புகிறோம்.
இதற்கான பதிலை 25-01-2008 தேதிக்குள் iiponline@gmail.com என்ற எங்கள் ஈமெயிலுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறறோம்.
இப்படிக்கு
இஸ்லாமிய இணையப் பேரவை
Date : 20-01-2007
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் IIP, கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம், கிருத்துவர்கள்
கிருத்துவ வலைப்பூக்களுக்கு பகிரங்க நேரடி விவாத அழைப்பு WWW.IIPONLINE.ORG
இஸ்லாத்தின் உண்மை நிலையை உணர்த்தவும், சத்தியத்தை அந்த அன்பர்களும் புரிந்து கொள்வதற்கும் மற்றொரு முயற்சியாக உண்மையடியான் வலைப்பூவினருக்கு இந்த பகிரங்க விவாத அறைகூவல் விடப்படுகிறது..
இந்த அறைகூவல் கூலிக்கு மாறடிக்கும் வாடிகன் புகழ் மட்டிபுல் பிளாக்ஸ் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் பிற கிருத்துவ இணையதளங்களுக்கும், ஓசியில் பிலாக்ஸ் கிடைத்துள்ளதற்காக கண்டதை எல்லாம் கிறுக்கும் நம்ம ஊரு அண்ணாச்சிகளான நாசமாய்போன கொமரன்களுக்கும், நமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கிருத்துவ பாதிரிகள், கிருத்துவம், கிருத்துவர்கள், நேரடி விவாதம்
9ம் வகுப்பு மாணவியை பைபிள் பயிற்சி என கற்ப்பமாக்கிய கிருத்துவ பாதிரியார் கைது 1
01. பள்ளி மாணவி கற்பழிப்பு : பாதிரியாருக்கு 15 நாள் காவல்
தர்மபுரி: பள்ளி மாணவியை கற்பழித்து, கர்ப்பிணியாக்கிய பாதிரியார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியைச் சேர்ந்த பாதிரியார் அமலநாதன்(28). இவர், கடந்தாண்டு மே மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு, பைபிள் போதனை பயிற்சி அளித்தார்.
அதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எங்காலப்பட்டி சாவடியூரை சேர்ந்த அமலநாதன் மகள் சுமத்ரா மேரி (16) என்பவரும் ஒருவர். நல்லம்பள்ளி செயின்ட் தாமஸ் மகளிர் பள்ளி விடுதியில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்த சுமத்ரா மேரி, விடுமுறையில் வீட்டில் இருந்ததால், பைபிள் பயிற்சிக்கு சேர்ந்தார்.
பயிற்சி பெற்ற மாணவ, மாணவியரை, பாதிரியார் அமலநாதன், கடந்த மே 24ம் தேதி பாலக்கோடு தும்பலஹள்ளி அணைக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அங்கு சுமத்ரா மேரியை, பாதிரியார் அமலநாதன் கற்பழித்து விட்டார். "அதை வெளியில் சொல்லக்கூடாது' என மிரட்டி அனுப்பி விட்டார்.
பயந்து போன சுமத்ரா மேரி, தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லவில்லை. மீண்டும் பள்ளிக்கு சென்ற போது, கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த நிர்வாகம், அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.
தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் சுமத்ரா மேரி, கற்பழித்த பாதிரியாரை கைது செய்யக்கோரி தனது தாய் மதலைமேரியுடன் சென்று டி.எஸ்.பி., விஜயராகவனிடம் புகார் செய்தார்.
விசாரித்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், நம்ப வைத்தல் (417), கற்பழித்தல் (376), கொலை மிரட்டல் 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, பாதிரியாரை கைது செய்தனர். தர்மபுரி ஜே.எம்., முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர்
பதிந்தது
நேசமுடன் இஸ்லாம்
நேரம்
குறிச்சொல் கற்பழிப்பு, கிருத்துவ பாதிரிகள், பைபிள் பாடம்
